வியாழன், 28 பிப்ரவரி, 2019

கணவனின் சீதன ஆசையால் உயிரை விட்ட மனைவி!! யாழில் நடந்த சம்பவம்!!

இந்த சமூகஅமைப்பு பெண்களிற்கு செய்துள்ள மிகப்பெரிய அநீதி சீதனம். திருமண
வாழ்க்கையென்பது சீதனத்தால் தீர்மானிக்கப்படுவதாகிவிட்டது. சிறிய வீதத்தினர் இதில்
விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் இந்த சமூகமே சீதனத்தால் நிறைந்தது, சீதனத்தால் ஆனது,
சீதனத்தை நம்பியே வாழ்வது.

சீதனமென்பது எந்தகாலக்கட்டத்தில் தோன்றியிருக்குமென அறுதியிட முடியவில்லை. ஆனால்
தமிழ்சமூகத்தின் மரபில் ஊறிய ஒரு சம்பிரதாயமாகுமளவிற்கு பழமையானது.

சீதனம் தொடர்பில் சில வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும், சமூகத்தில் உள்ள
பெரும்பாலானவர்கள் அதனை தவிர்க்க முடியாதவர்களாகத்தான் உள்ளனர். சீதனம் வாங்குபவர்கள்
பலவீனமாக ஆண்கள் என்பது மாதிரியான ஒரு எண்ணம் இப்பொழுது மெல்லமெல்ல தலைதூக்க
ஆரம்பித்துள்ளது. இது மிகச்சிறிய அதிர்வு. இது நிகழவே பல தசாப்தங்களாக பலர் போராட
வேண்டியிருந்தது.

சீதனம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு நியதியென்பதாகிவிட்டது. இந்த சமூகத்தில்
மிகப்பெரும்பாலானவர்கள் சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்கிறார்கள். திருமணங்களை சீதனம்தான்
தீர்மானிக்கிறது.

மனிதஉறவுகள் என்பது மகத்தானவை. நண்பர்களாகுவதென்பதே அவ்வளவு இலகுவில் நிகழ்வதில்லை.
இரண்டு நபர்களிற்கிடையிலான புரிதலே நட்பை ஆழமாக்குகிறது. நடித்த நட்பிற்கு
மனப்புரிதல் அவசியம்.

இதுவே, திருமணத்திற்கென்றால் எவ்வளவு அதிகமாக தேவைப்படும்? ஆனால் தமிழ் கல்யாணங்கள்
அப்படி நடக்கிறதா? இல்லை. திருமணங்களை சீதனம்தான் தீர்மானிக்கிறது என்றானபின் மனம்,
உணர்ச்சிகள் பற்றி யார் அலட்டிக்கொள்கிறார்கள்.

திருமணமும் சந்தை வியாபாரம் ஆகிவிட்டது. அதிகம் படித்தவர்கள், நல்ல
உத்தியோகத்திலிருப்பவர்கள் திருமணச்சந்தையில் கிராக்கி அதிகம் உள்ள விற்பனைப்பொருள்கள்.
இந்தவகையானவர்களை விலைபேசி பிடிக்க வங்கிக்கணக்கு புத்தகங்களுடன் பெண்களை பெற்றவர்கள்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இது என்னவிதமான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாருமே உணர்ந்து கொள்வதில்லை.
திருமணச்சந்தையில் அனைத்தையும் நிர்ணயிப்பது பணம். எவ்வளவு அதிகம் பணம் கறக்கலாமென்பதில்
மாப்பிள்ளை தரப்பு குறியாக இருக்கும். எவ்வளவு பணத்தை மிச்சம்பிடிப்பதென்பதில்
பெண்வீட்டுதரப்பு கவனமாக இருக்கும். இதில் வாழப்போகிறவர்களின் கருத்தையும்,
விருப்பத்தையும் யார் கவனத்தில் எடுக்கிறார்கள்.

திருமணம் செய்யும்போதே தமது பிள்ளைகளின் காலம் பற்றிய தயக்கம் ஏற்படும் காலமிது.
மூத்தது பெண்பிள்ளையெனில் எப்படி குடும்பத்தை திட்டமிடுவதென்பதை திருமணமான
புதிதிலேயே பேசிக்கொள்கிறார்கள்.

திருமணம் ஒரு சமூக அநீதியென்பதில் இரண்டாவது கருத்திருக்க முடியாது. ஏனெனில்
சீதனத்தால் குடும்ப வாழ்க்கை சீரழிந்த எத்தனையோ பெண்கள் உள்ளனர். சீதனத்தால் வெளிப்படையாக
பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதெனில், ஏராளம் ஆண்கள் மனதுக்குள்ளாக எதிர்பார்ப்புக்களை
புதைத்துக்கொள்ளும் துயரமும் நிகழ்கிறது. குடும்பம், சகோதரிகளிற்காக நல்ல சீதனத்துடன்
வரும் திருமணங்களிற்காக தலையாட்டி, விலையாகும் ஆண்களை பற்றி தமிழ்ச்சூழலில் அதிகமாக
பேசப்பட்டுள்ளதா? தமிழர்கள் மத்தியில் உள்ள விவகாரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சீதனம்
கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

நமது குடும்பங்களில் ஆண்கள்தான் பெறுமதியான விற்பனை சரக்கு. நல்ல கல்வி, சமூக அந்தஸ்து,
வேலையென்பவற்றின்மூலம் அவர்களின் “விலை“யை உயர்த்த ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள்.
அவர்களிற்கு வாங்கும் சீதனத்தின் மூலமே அவரின்  சகோதரிகளின் திருமணத்தை நடத்தி
முடித்துவிடலாமென கணக்கு பண்ணும் பெற்றோர்கள்தானே ஒவ்வொருவரும்.

அந்த கலாசாரம் மோசமான கட்டமொன்றை இன்றைய காலத்தில் எட்டியுள்ளது. கல்வி கற்றவர்களும்
சீதனம் ஒரு சமூககறையென்பதை உணர்வதில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் இணைத்த இந்த
சமூகத்தில் சீதனம் தொடர்பான மீள்மதிப்பீடு அவசியம். சீதனத்தை விடுதலைப்புலிகள்
தடைசெய்திருந்தனர். எனினும், அது கொடுக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

சீதனம் இல்லாததால் திருமணம் செய்யாமலிருப்பவர்கள், காதலித்த பின் சீதனத்திற்காக இன்னொருவரை
திருமணம் செய்பவர்கள், சீதனக்கொடுமைகள் செய்பவர்கள் நமது சமூகத்தில் நிறைந்துள்ளனர்.
பெண்பிள்ளைகளை பெற்றவர்களை சீதனம் ஒரு கொடிய விலங்காக துரத்திக் கொண்டேயிருக்கும்.
ஏழைகளை இரக்கமில்லாமல் வேட்டையாடும் சீதனக்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களிற்கு உதாரணம்
சிவபாக்கியம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த சிவபாக்கியம் பெண்பிள்ளையை பெற்று சீதனக்கொடுமையின்
ஒருவகையான விளைவை எதிர்கொள்கிறார்.

சிவபாக்கியத்தின் நான்காவது மகளிற்கும் வவுனியாவை சேர்ந்த வாலிபர் ஒருவரிற்கும்
திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணத்தின் பின்னரான ஐந்து மாதங்கள் சிவபாக்கியத்தின்
வீட்டிலும், பின்னர் சிறிதுகாலம் கணவர் வீட்டிலும் வாழ்ந்து, பின்னர் கொடிகாமத்தில்
தனிக்குடித்தனம் சென்றனர்.

தனிக்குடித்தனம் சென்றபின்னர் அவர்களிற்கிடையில் சண்டை உருவாக காரணம் சீதனம். கொடுத்த
சீதனம் காணாதென சண்டை ஆரம்பித்தது. கடன்தொல்லைகள் அதிகரிக்க, இன்னும் சீதனம் அதிகம்
தேவையென மனைவியை நச்சரிக்க ஆரம்பித்துள்ளான். மனைவியின் நகைகளை அடைவு வைத்தும்,
வங்கிக்கடனான மனைவியின் பெயரில் 120,000 ரூபாவும் மேலும் கைமாற்றாக 100,000
ரூபாவும் வாங்கியுமுள்ளார். இன்னும் அதிக பணம் தேவையென நச்சரித்து, இறுதியில் அடிஉதை
ஆரம்பித்தது. அப்பொழுது சிவபாக்கியத்தின் மகள் 3 மாத கர்ப்பிணி.

கணவனின் அடிஉதையால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இரத்தப்போக்கு அதிகமாகியது. 2015
மார்ச் மாதத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தனது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். பொலிஸ்
நிலையத்திற்கும் சென்று முறையிட்டார்.

வைத்திய சிகிச்சைகளை முடித்த பின்னர் தனது தாயாருடன் சென்று தங்கியுள்ளார். இந்த
சமயத்தில் துன்புறுத்தலில் ஈடுபட்ட கணவன் கைது செய்யப்பட்டான். இந்த சமயத்தில்
சிவபாக்கியத்தின் மகளை, தடுத்து வைக்கப்பட்ட கணவனின் உறவினர்கள் மிரட்டியதாக
கூறப்படுகிறது. கணவனை பிரிந்த பெண்ணிற்கு இந்த சமூகம் வழங்குவது எதனை? வசைகளையும்,
அவதூறுகளையும் ஊகங்களாக வெளியிட்டு திண்ணைப்பேச்சில் திருப்திப்பட்டுக் கொள்ளும். அதுதான்
அங்கும் நடந்தது.

இவையெதையும் எதிர்கொள்ளும் திராணி சுமதிக்கு இருக்கவில்லை. விபரீத முடிவெடுத்தார்.
ஒருநாள் எல்லோரும் தூங்கிய பின்னர் தனது அறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார். இறப்பதற்கு முன்னர் தனது கைப்பட தற்கொலைக்கான காரணத்தை எழுதிவைத்துள்ளார்.

இதன்பின்னான நாட்களில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் சமயத்தில் தற்கொலை செய்த பெண்ணின்
கணவன் கண்ணாடித்துண்டால் தனது கழுத்தில் காயத்தை ஏற்படுத்திய சம்பவமும் நடந்தது.

தற்கொலை செய்த பெண்ணின் பெயரில் வங்கியில் பெறப்பட்ட கடனின் சுமையை அவரது தாயார்தான்
எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. சீதனமாக வழங்கப்பட்ட நகைகள் அடைவு வைக்கப்பட்டு விட்டன.
இந்த சுமைகள் எல்லாவற்றையும் அந்த ஏழைத்தாய்தான் சுமக்கிறார்.

அந்த ஏழைத்தாய் செய்த குற்றமென்ன… ஏழையாய் வாழ்ந்ததா? பெண்பிள்ளையை பெற்றதா?

------------------------------------------------------------------------

*சீதன சந்தை நிலவரம்*

வைத்தியர்       80 இலட்சம்- 1 கோடி + வீடு + நகை

பொறியியலாளர்      60 – 90 இலட்சம் + வீடு + நகை

சட்டத்தரணி    40 – 70 இலட்சம் + வீடு + நகை

ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள்  20 – 40 இலட்சம் + வீடு + நகை

தனியார்துறை  15 – 30 இலட்சம் + வீடு + நகை

விவசாயி, சுயதொழிலாளி  8 – 15 இலட்சம் + நகை + வீடு (சில சமயம்)

சும்மாயிருப்பவர்   8 இலட்சம்வரை + நகை + வீடு (சில சமயம்)

யாழில் பெண் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வீட்டில் களவெடுத்த கொள்ளையன்(photos)




யாழ் இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து திருடிய கொள்ளையனின் புகைப்படங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. குறித்த கொள்ளையன் இராசாவின் தோட்டப்பகுதியில் வசித்துவரும் யாழ் மாநகரசபையைச் சேர்ந்த பெண் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில், யாரும் இல்லாத வேளையில் புகுந்து, வீட்டு ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து 5 பவுண் சங்கிலியைக் கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த கொள்ளையன் கொள்ளையடித்த பின்னர் அவ் வீதியால் சென்ற காட்சிகளை பொலிசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களின் உதவியுடன் பெற்றுள்ளனர். இது தொடர்பாக யாழ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவனைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம். 

தன்னிடம் உள்ள சொத்துக்கள் இவ்வளவுதானாம்!! சுமந்திரனின் சொத்து மதிப்பு விபரம் இதோ!!

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இன்று தமது சொத்து மதிப்பை வெளியிட்டனர்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உள்ளடக்கம்.

அவரது சொத்து மதிப்பு இங்கு தரப்பட்டுள்ளது. சுமந்திரனின் சொத்து மதிப்பு, நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய விிதமாகவோ, பிரபல சட்டத்தரணிக்குரிய விதமாகவோ அல்லாமல் ஓரளவு எளிமையான சொத்து விபரமாகவே உள்ளது. வயல் நிலம், இரண்டு வீடுகள், 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பிள்ளைகள் பெயரில் சிறிய வைப்பு, இதைவிட, ஹற்றன் நசனல் வங்கியில் 30இலட்சம் ரூபா கடன் என்ற தனது சொத்து விபரத்தை வெளியிட்டுள்ளார்.

சுமந்திரனின் சொத்து மதிப்பு பல கோடிக்கணக்கானது என  சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட பல கோடி சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அனைத்தும் அவரது பினாமி பெயரிலேயே உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் வாள் வெட்டுச் சம்பவத்தில் தமிழரசுக் கட்சி காவாலிகள் 5 பேர் கைது!!

வாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று  அடாவடியில் ஈடுபட்டது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் படலையில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்கு யன்னல் கண்ணாடிகள் உள்பட பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடுப்பட்டுவிட்டுத் தப்பிதத்து.

அந்தக் கும்பல் தப்பித்தவேளையில் வீதியில் விபத்து ஒன்றும் இடம்பெற்றது. அதிலிருந்து 8 பேரும் தப்பி ஓடினர்.

ஒருவாரமாக சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டனர். அதனடிப்படையில்
வலி. தெற்கு பிரதேச சபையின் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர் அன்ரன் லீனஸ் உள்பட  5 பேர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 5 பேரும் உடுவில் மல்வத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இன்று மாலை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

“வன்முறைச் சம்பவத்துக்கு திட்டமிடல. – ஒழுங்கமைத்தல் என பின்னணியில் இருந்த பிரதான சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினர். அவரது பின்னணியில் 7 பேர் வன்முறையில் ஈடுபட்டனர்.
மேலும் மூவர் தேடப்படுகின்றனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பதை முன்வைத்தார். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.

வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி, விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள்கள் ஐவரையும் பிணையில் விடுவித்தார்.

இதேவேளை, உடுவில் அம்பலவாணர் வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளுக்கும் சந்தேகநபர்கள் ஆறு பேருக்கும் தொடர்புள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் வடக்கு மாகாணசபை பெண் உத்தியோகத்தர் துாக்கில் சடலமாக மீட்பு..!!(Photos)

இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் உரும்பிராய் மானிப்பாய் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் சுற்றுலாத்துறை பணியகத்தில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

உயிருக்கு மன்றாடும் சிறுவனுக்கு கிளிநொச்சி நாட்டாமை சிறிதரன் செய்த கேவலம்!!!



சிறுநீரக கோளாறினால் பாதிப்புற்ற சிறுவன், தனக்கு நிதி உதவி வழங்குமாறு கிளிநொச்சியில் தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினராக சிறிதரனிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளான். ஆனால் அதற்கு நிதி உதவி வழங்காத சிறிதரன் அதனை ஊடகங்களுக்கு அனுப்பி பொதுமக்களிடம் இருந்து காசு கறக்க முற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரணிலின் அரசாங்கத்தைக் காப்பாற்றியமைக்காக 15 கோடி ரூபா அளவில் கொழும்பில் வீடாகவும் பணமாகவும் பெற்றுக் கொண்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிய நிலையிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு கொடுக்கப்படும் பல கோடிக்கணக்கான நிதியிலும் குறித்த சிறுவனைக் காப்பாற்ற முடியாத சிறீதரன் பொதுமக்களிடம் இருந்து பணத்தை சேகரிக்க முற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சிறிதரனின் ஏமாற்று வேலைகளுக்கு உட்படாது குறித்த சிறுவனுக்கான நிதிஉதவியினை அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு நேரடியாக கொடுப்பதற்கு கருனையுள்ளம் படைத்தவர்கள் முயற்சிசெய்ய வேண்டும்.


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொலை!!! பக்கத்துவீட்டுக்காரரின் சாட்சியம் இதோ!!

3 தடைவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை காலையில்தான் அறிந்துகொண்டேன்"

இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையாக உள்ள வீட்டில் வசிப்பவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர்.

அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் இந்துமகளீர் ஆரம்ப பாடசாலை பெண் அதிபரின் திருவிளையாடல்!! உப அதிபர் இடமாற்றம்!!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பாரிய நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரெனக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் “வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு தொடர்பானது” எனக் குறிப்பிட்டு வடமாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையின் தற்போதைய அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் அப்பாடசாலையின் உதவி அதிபராக செயற்பட்டுவரும் திரு.க.சசிதரன் அத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் குறித்த உதவி அதிபர் தொடர்பாக அதிபரால் ‘தனது செயற்பாடுகளுக்கு உதவி அதிபரால் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை’ என்று கூறி யாழ்.வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் உதவி அதிபரிடம் யாழ். வலயக்கல்விப்பணிப்பாளர் விளக்கம் கோரிய நிலையில் அவரால் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரின் நிதி மோசடி உட்பட19 விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரத்துடன் யாழ்.வலயக்கல்விப்பணிமனையினருக்குமுறைப்பாடு செய்திருந்தார். இவற்றுக்கு துணைபோகாததாலேயே தன்மேல் அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்முறைப்பாடுகளில் பின்வருவன மிகப் பாரிய நிதி மோசடி நடைபெற்றுள்ளமைக்கான சில சான்றுகளாகும்.
இக் கடிதத்துடன் குறித்த உதவி அதிபரால் – யாழ் கோட்டக்கல்வி அலுவலர் ஊடாக யாழ்.வலயக்கல்வி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகளின் பிரதி தங்களின் மேலான கவனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளன.

1. 2018 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களிடம் 15,000/- ரூபா அதிபர் பெற்றிருந்த நிலையில் சிலருக்கு மட்டுமே பற்றச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் – பற்றச்சீட்டு வழங்கப்படாத பெற்றோரை தன்னால் இனங்காட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2. 2017 ஆம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இறுதிக் கௌரவிப்பின்போது 100000/- ரூபா சேர்த்து அதிபரிடம் வழங்கியுள்ளார்கள். இப்பணம் இன்றுவரை பாடசாலை கணக்கில் வைப்பிலிடப்படவில்லை

3. ஒருவரால் பாடசாலைக்கென வழங்கப்பட்ட லப்டப் கணனி மற்றும் புறஜெக்டர் என்பன பொருட் பதிவேட்டில் பதியப்படவுமில்லை. பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

4. 2018 ஆம் ஆண்டு நடனவிழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25000 ரூபா பெறுமதியான காசோலை வைப்பிலிடப்படவில்லை.

இவ்வாறான பாரிய மோசடியில் ஈடுபட் ஒரு அதிபரை அப்பாடசாலையிலேயே தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதித்து உதவி அதிபரை ஆரம்பக்கட்ட விசாரணைக்காக இடமாற்றம் செய்யும் செயற்பாடு வடமாகாண கல்விப்பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உதவி அதிபரை மட்டும் இடமாற்றுவதன் மூலம் சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்கக்கூடிய உதவியைப் புரிவதற்காகவே வடமாகாண கல்வி அதிகாரிகளால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.

இவ்விசாரணையின் பொருட்டு சாட்சியங்கள் மறைக்கப்படாமலும், அச்சுறுத்தப்படாமலும் காணப்படும் பொருட்டு குறித்த பாடசாலையின் அதிபரும் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டு கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.

யாழ்.வலய குறித்த அதிகாரி ஒருவர் அதிபருக்கு எதிராக சாட்சி வழங்க தயாராயிருக்கும் அன்பளிப்பாளர் ஒருவரை அழைத்து அதிபரின் முறைகேட்டை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இவ்விதமான வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேட்டாளர்களுக்கு சாதகமாக செயற்படும் போக்கு மிகப்பெரிய முறைகேடாகும்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக நீதியான விசாரணையை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.

இவ்விடயத்தில் கௌரவ ஆளுநராகிய தாங்கள் அதீத கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி கடிதத்தின் பிரதிகள் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (28.02.2028)

மேஷம்
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்
இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்
இன்று மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்
இன்று அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். கொள்கைப் பிடிப்பில் தளர்ச்சி ஏற்படலாம். தைரியம் பளிச்சிடும். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்
இன்று தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். சொத்து சம்பந்தப்பட்ட இனங்களில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. வாழ்க்கைத்துணை வழியில் மிகுந்த அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். . அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி
இன்று தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்
இன்று வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்
இன்று புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். கன்னிபெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால் வீண் அலைச்சல் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு
இன்று முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபமாக இருக்கும். எனினும் கவனமுடன் இருக்க வேண்டி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்
இன்று எண்ணியத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்துவீர்கள். வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர். தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்
இன்று உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

புதன், 27 பிப்ரவரி, 2019

பேருந்தில் பலியல் லீலையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் (Video)

கொழும்பு பேருந்துகளில் இரவு நேரங்களில் இளைஞர் யுவதிகள் மோசமான முறையில் நடந்து கொள்வதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் காதலர்கள் போன்று காணப்பட்ட இளைஞனும் யுவதியும் ஏனைய பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பஸ் நடத்துனர் அந்த இளைஞனையும் யுவதியை எச்சரிக்காமல் பணத்தை பெற்றுக் சென்றமையினால் பயணிகள் கடும் கோபமடைந்துள்ளனர்.

பயணிகள் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து கொண்டதனை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.

கொழும்பில் சில பகுதிகளுக்கு பயணிக்கும் பேருந்துகளில் இதனைவிடவும் மோசமாக இளைஞர் யுவதிகள் பயணிப்பதாக அங்கிருந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் என யாழ் நீதிமன்றில் அடைக்கலம் கோரிய வயோதிபர்!!

இணுவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தஞ்சமடைந்தார்.

அவரை சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட நீதிவான், தஞ்சமடைந்தவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்ப்பித்து மருத்துவ சோதனைக்குட்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தனக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னால் நடமாட முடியாது உள்ளதாகவும் தெரிவித்து யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு நேற்றுச் சென்றுள்ளார். அந்த நபர் நீதிமன்றில் தஞ்சமடைய தனக்கு உதவியளிக்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன், தன்னால் வெளியில் செல்ல முடியாது எனத் தெரிவித்து வயோதிபர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் உள்ள மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கு அமைய வயோதிபர், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார்.

உங்களை அச்சுறுத்துபவர்கள் யார், அவர்கள் பற்றிய விவரங்களை வழங்க முடியுமா? என்று அவரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

எனினும் அவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த போதும் சந்தேகநபர்கள் பற்றிய விவரத்தைக் கூறவில்லை. அத்துடன், மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்தார்.

அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் எவரும் இருப்பதாக விசாரணைகளில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அதனால் அவரை நீதிமன்றப் பாதுகாப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.எஸ்.பி.போல், அந்த நபரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

யாழில் நடு வீதியில் கெல்மட் சண்டை போட்ட பொம்பிளையும் குடும்பஸ்தரும்!!

நடு வீதியில் நின்று தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்ட குடும்பத்தலைவர் ஒருவரும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நல்லூர் கிட்டுப்பூங்காவுக்கு அண்மையாக பிரதான வீதியில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வீதியில் நின்று இருவரும் தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்டுள்ளனர். சுமார் 30 -35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இருவருமே இவ்வாறு சண்டையிட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர். அதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இருவரையும் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தார். அத்துடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாக்கிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரரை சித்திரவதை செய்யும் காட்சிகள்!! (Video)

பாக்கிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரரை சித்திரவதை செய்யும் காட்சிகள்!! (Video)

இந்திய விமானங்கள் இரண்டு பாக்கிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் (Video)

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம்கள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை முதலில் மறுத்த பாகிஸ்தான் அரசு, இந்தியா போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது'' என்றது.

இந்த நிலையில், இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளாயின.  இந்தியா தரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில், `இந்திய விமானங்களை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். ஒரு வீரரை பிடித்துவைத்துள்ளோம்'' என்றனர். இதற்கு, இந்தியா மறுப்பு தெரிவித்ததாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.


இந்த நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த விமானி அபினந்தன் வர்தன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.
Image may contain: fire and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: 3 people, crowd and outdoor

கிளிநொச்சி பாடசாலைக்குள் நுளைந்து ஆசிரியர்களுடன் ராகவன் கதைத்தது என்ன?

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு ஆளுநர் சுரேன் ராகவன் இன்று காலை (27) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகளை புனரமைப்பதற்காக

ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் 31.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பாடசாலைகளும் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புனரமைப்பு நடவடிக்கைகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகவே ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும்

புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது பாடசாலை ஆசிரியர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடினார்

லஞ்சம் கொடுத்து இலங்கையின் முன்னணி நிறுவனத்தை வாங்கிய புலம்பெயர் தமிழன்!! மைத்திரி சீற்றம்!!

லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்கோ நிறுவனம், 5 மில்லியன் டொலரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்தே, எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (Edirisinghe Trust Investment-ETI) நிறுவனத்தை கொள்வனவு செய்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

தேசிய பொருளாதார சபைக் கூட்டம் நேற்று (26) இடம்பெற்றபோது, ஜனாதிபதி காரசாரமாக இந்த விடயத்தை விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை பெட்கோ என்ற நிறுவனத்தின் ஊடாக, சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு கொள்வனவு செய்ய எந்த அடிப்படையில் அதிகாரிகள் அனுமதியளித்தனர், இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராயப்பட்டதா என சரமாரியான கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை முடிக்க, 5 மில்லியன் டொலர் இங்குள்ள சிலருக்கு பகிரப்பட்டுடதையும், இதில் 3 மில்லியன் டொலரை முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் பெற்ற தகவலையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ETI நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 60 மில்லியன் டொலருக்கு செய்ய பெட்கோ நிறுவனம் கேள்விகோரல் மனு சமர்ப்பித்திருந்தது. ஆனால் உள்நாட்டு நிறுவனம் ஒன்று 61 மில்லியன் டொலருக்கு இதனை வாங்க முன்வந்தது. ஆனால் யாருக்கும் தெரியாமல் 75 மில்லியனுக்கு பெட்கோ நிறுவனத்திற்கே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என ஜனாதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார்.

சுபாஸ் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறப்பதும், தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் முதலிடுவதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக தனியார் உளவு அமைப்பொன்று சில வருடங்களின் முன்னர் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.

ஆதவன் ஊடகக்குழுமம் என்ற ஊடக குழுமத்தை இலங்கையில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.வாங்கியது எப்படி?: கண்டித்த மைத்திரி!

லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்கோ நிறுவனம், 5 மில்லியன் டொலரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்தே, எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (Edirisinghe Trust Investment-ETI) நிறுவனத்தை கொள்வனவு செய்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

தேசிய பொருளாதார சபைக் கூட்டம் நேற்று (26) இடம்பெற்றபோது, ஜனாதிபதி காரசாரமாக இந்த விடயத்தை விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை பெட்கோ என்ற நிறுவனத்தின் ஊடாக, சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு கொள்வனவு செய்ய எந்த அடிப்படையில் அதிகாரிகள் அனுமதியளித்தனர், இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராயப்பட்டதா என சரமாரியான கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை முடிக்க, 5 மில்லியன் டொலர் இங்குள்ள சிலருக்கு பகிரப்பட்டுடதையும், இதில் 3 மில்லியன் டொலரை முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் பெற்ற தகவலையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ETI நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 60 மில்லியன் டொலருக்கு செய்ய பெட்கோ நிறுவனம் கேள்விகோரல் மனு சமர்ப்பித்திருந்தது. ஆனால் உள்நாட்டு நிறுவனம் ஒன்று 61 மில்லியன் டொலருக்கு இதனை வாங்க முன்வந்தது. ஆனால் யாருக்கும் தெரியாமல் 75 மில்லியனுக்கு பெட்கோ நிறுவனத்திற்கே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என ஜனாதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார்.

சுபாஸ் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறப்பதும், தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் முதலிடுவதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக தனியார் உளவு அமைப்பொன்று சில வருடங்களின் முன்னர் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.

மட்டக்களப்பு கடற்கரைப் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம்!! பரபரப்பு!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை தாளங்குட கடற்கரை பகுதியையண்டிய வேடர்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் முற்றாக எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்பக்கூடு கொண்ட சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்
மீட்கப்பட்ட சடலம் 60 வயதுடைய பெண் ஒருவர் எனவும்; இன்னமும் அடையாளம் காணப்படவில்லையெ பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேவதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

பிரதேசசெயலாளருக்கு எதிராக முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரதம்!!!

முன்னாள் போராளி ஒருவருக்கு பிரதேச செயலகத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட வீட்டுத்திட்டம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்கழுவில் முன்னாள் போராளி ஒருவர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

ஆலங்குளம் கிராம அலவலகர் பிரிவு துணுக்காய் பிரதேச செயலகப்பகுதியிலுள்ள முன்னாள் போராளியான சுப்பிரமணியம் குகதாஸ் துணுக்காய் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து கிடைத்த உரிமை கோரப்படாத பொறுப்பற்ற கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து பிரதேச செயலாளரினால் தனக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எனக்கு வழங்கவேண்டிய வீட்டுத்திட்டத்தில் கிராம அலவலகர் மற்றும் பிரதேச செயலாளரினால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கான வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து சாதகமான பதில் ஒரு வாரத்திற்குள் கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை உள்நாட்டு அலுவலக அமைச்சு மற்றும் மாவட்ட செலயகத்தின் முன்னால் மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னாள் போராளி மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதிக் காப்பாளரை துாசணத்தில் பேசிய யாழ் பல்கலைக்கழக மாணவி!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் பகடி வதையை தொடா்ந்து இடம் பெற்ற பதற்றமான சூழலினாலேயே பீடத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் ரீதியாக கடுமையான பகிடி வதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பதற்றமடைந்து, பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அறித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து உப விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்த போது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உப விடுதிக் காப்பாளரை ஏசியதுடன், சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தொலைபேசியைப் பறித்துச் சென்றதுடன்,

விடுதியினுள் கலகத்தில் ஈடுபட்டுமுள்ளனர். இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை பிரதிப்பதிவாளர் ஒருவருமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்த போது, பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும்

விரிவுரைகளுக்கெதிராக சிரேஷ்ட மாணவர்கள் குழப்பத்திலீடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நேற்று மாலை தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் உள் நுழையா வண்ணம் துணைவேந்தரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. இம் முறை பகிடி வதைக்கெதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை – சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை

மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்பட மாட்டாது என அறிய வருகிறது.

யாழில் வடிவேலு பாணியில் திருடிய கள்ளர்கள்!! நடந்தது என்ன?

தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வைப்புயல் வடிவேலு பாணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் தனிமையில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்டமிட்ட திருடர்கள் அங்கு கைவரிசையை காட்டியுள்ளனர்.

வீடு பிரித்து இறங்கிய திருடர்கள் சமையல் அறையில் உள்ள சமையல் பாத்திரங்கள், பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றை திருடியுள்ளனர். அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த புடவைகள், படுக்கையறையில் இருந்த கட்டில், மெத்தை என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

திருடிவிட்டு செல்லும்போது, வடிவேலு பாணியில் ஒரு காரியம் செய்துள்ளனர். தமது கை அடையாளங்கள், காலடி தடங்கள் பட்ட இடங்களில் மிளக்காய்த்தூள் தூவியுள்ளனர்.

பொலிஸ் மோப்பநாயிடமிருந்து தப்பிக்கவே இப்படி செய்துள்ளார்கள்.

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (27.02.2028)

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக்கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக  இருங்கள். வியாபாரத்தில்  லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்:  தன் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நல்லது நடக்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகர மான செய்தி வரும். வீட்டை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அமோகமான நாள்.

கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கள் வந்துப் போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசு வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப் பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்க லான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமத மாகி முடியும் நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அசதி, சோர்வுவந்து நீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். போராடி வெல்லும் நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக் கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.

கும்பம்: எதையும் சாதிக் கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங் குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.

மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு உள் நுழையத் தடை!!


யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அவசர அறிவித்தலுக்கமைய விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேஸ்புக் காதல்!! மாணவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து காவாலிகள் அலங்கோலம்!!

கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25), என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவியும் முகநூல் மூலம் நண்பர்களாக பழகினார்கள். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கல்லூரி உணவு இடைவேளையின் போது அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து அந்த மாணவி அங்கு சென்றார்.
அப்போது அங்கு சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சதீஷ் (28), பக்கோதிபாளையம் தங்கராஜ் என்பவரது மகன் வசந்தகுமார் (24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் திருநாவுக்கரசு (26) ஆகியோருடன் அங்கு காரில் காத்து இருந்தார்.
பின்னர் மாணவி ஏறியதும் கார் அங்கிருந்து புறப்பட்டு தாராபுரம் ரோட்டில் சென்றது. காரின் பின்புறம் மாணவி, சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் இருந்தனர். முன்இருக்கையில் சதீஷ் அமர்ந்தார். திருநாவுக்கரசு என்பவர் காரை ஓட்டினார்.
தாராபுரம் ரோட்டில் கார் சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவி அணிந்து இருந்த சுடிதாரை விலக்கியதாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்ததுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும், ஆபாச படத்தை காட்டி 4 பேரும் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் காரில் இருந்து அந்த மாணவியை இறக்கி விட்டு விட்டு அவர்கள் காரில் தப்பிச்சென்றனர். நடுவழியில் தவித்த மாணவி அங்கிருந்தவர்களின் உதவியுடன் வீட்டுக்கு சென்றார். இருப்பினும் சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்து பணம் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் இருக்கும் திருநாவுக்கரசை காரில் அழைத்து வருவதற்கு மற்ற 3 பேரும் ஜோதி நகரில் தயாராக நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீது பாலியல் தொந்தரவு செய்தல், படம் எடுத்து மிரட்டுதல், நகை பறிப்பு, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம். மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசை போலீசார் தேடி வருகின்றனர்.

யாழ் நாவற்குழியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 24 பேருக்கு நடந்தது என்ன? நீதிமன்றில் நடந்த வாதம்!!



யாழ்.நாவற்குழி இராணுவ முகாமில் இருந்த இராணுவ அதிகாாிகளால் கைது செய்யப்பட்டு பின் காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு என்ன நடந்தது? அவா்கள் எங்கு இருக்கிறாா்கள்? அவா்களுக்கு என்ன நடந்தது? என்பதை சட்டமா அதிபா் உள்ளிட்ட பிரதிவாதிகள் வெளிப்படுத்தவேண் டும் என யாழ்.மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குருபரன் சமா்ப்பணம் செய்துள்ளாா்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அதனை வழங்கத் தயார் என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையிலான பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மன்றுரைத்தார்.

அவரது பதிலை நிராகரித்த மனுதாரர்களின் சட்டத்தரணி கு.குருபரன், எமது கோரிக்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்த்து? என்பதனை வெளிப்படுத்தவேண்டும் என்பதேயாகும் என மன்றுரைத்தார்.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர்இ கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர முன்னிலையானார்.காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள் என மன்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பியது.

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இருக்கிறார்களா – அவர்கள் எங்கு இருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் வெளிப்படுத்தவேண்டும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பணம் செய்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அதனை வழங்கத் தயார் என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையிலான பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மன்றுரைத்தார்.

அவரது பதிலை நிராகரித்த மனுதாரர்களின் சட்டத்தரணி கு.குருபரன்இ எமது கோரிக்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்த்து? என்பதனை வெளிப்படுத்தவேண்டும் என்பதேயாகும் என மன்றுரைத்தார். இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த மன்று வழக்கை வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

பின்னணி

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர்இ கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அவர்களில் 12 பேர் சார்பில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல்கள் தனித்தனியே செய்யப்பட்டன. அதில் 9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் யாழ்ப்பாணத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து இ இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டன.

வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

காணாமல் ஆக்கப்பட்ட மூவரின் மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்து ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெற்று வருகின்றன.

இந்த வழக்கில் முதலாம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலானவும் இரண்டாம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதியும் மூன்றாம் பிரதிவாதியாக சட்டமா அதிபரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முதலாம் எதிர் மனுதாரரான இராணுவக் கட்டளை அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் சட்ட மா அதிபர் வழக்கை முன்கொண்டு செல்ல யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி மா.இளஞ்செழியன் அனுமதி வழங்கியிருந்தார்.

வெளிநாட்டிலுள்ள தமிழ் இளைஞர்கள் திரும்பி வாருங்கள்!! கருனா அழைக்கின்றார்!!!

புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் பலர் தாயகம் திரும்ப
எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமாக திறந்த மனதுடன் உள்ள இளைஞர்கள் இவ்வாறு இலங்கைக்கு வருவதற்கு
எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமகாலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கெண்டுள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு
வருவதாக கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

கருணாவை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பின்னிரவில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து ஆளுநரால் பரபரப்பு!! (Photos)

நேற்றய தினம் இரவு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ள்ள யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் திடீரென நுழைந்த ஆளுநா்,

அங்குள்ள நிலமைகளை நோில் அவதானித்துள்ளதுடன், வைத்தியா்கள், நோயாளா்களுடன் கல ந்துரையாடிவிட்டு சென்றுள்ளாா்.



காணாமல் போனவர்களின் உறவுகளின் எச்சில், இரத்தம் சேகரிக்கப்பட்டதா?? அதிர்ச்சித் தகவல்கள்!!

மரபணு பரிசோதனைக்காக வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இரகசியமான முறையில் இரத்தம், உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வுச்சேவை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இரகசியமாக சேகரிக்கப்படும், இரத்த, உமிழ்நீர் மாதிரிகளை இரகசியமாக அமெரிக்கா கொண்டு சென்று பரிசோதனை மேற்கொள்ளவும், மன்னார் புதைகுழி எலும்புக்கூட்டு பரிசோதனை முடிவுடன் அவற்றை பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரகசிய நடவடிக்கைக்காக வெளிநாடுகளிலிருந்து சிலர் இலங்கைக்கு வந்து, ஒரு மாதமாக தங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் விவகாரம் எந்த முடிவுமின்றி இழுபறியாகவே இருந்து வருகிறது. அரசு தனது பொறுப்புக்கூறும் பாத்திரத்தை சரியாக வகிக்காத காரணத்தால், உறவுகளை பறிகொடுத்தவர்கள் மிகுந்த விரக்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மன்னார் புதைகுழி விவகாரம் காணாமல் போனவர்களின் உறவுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவில் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளின் இரத்த, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு சேவை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மூவர், ஒரு மாதமாக இலங்கையில் தங்கியிருந்து இந்த பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். எழுத்தூர் கடந்த 7ம் திகதி மன்னார் எழுத்தூர் பகுதியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இந்த குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது. மரபணு பரிசோதனையின் அவசியத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உறவுகளிற்கு அமெரிக்க குழு விளக்கமறித்துள்ளது.

இதேபோல, கடந்த 7ம் திகதி திருகோணமலைக்கு சென்ற இந்த குழு, அங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கு விளக்கமளித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி, மரபணு பரிசோதனையின் அவசியத்தை புரிய வைத்து வருகிறார்கள். இந்த செயற்பாட்டை அரசசார்பற்ற நிறுவனமொன்றே முன்னெடுத்து வருவதாக தேசிய புலனாய்வு சேவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் நிதியளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இரத்த, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் குவத்தமாலாவிற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை நடத்தவும், சேமித்து வைக்கவும் இந்த குழு முயற்சிக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் எதிர்காலத்தில் எச்சங்கள் மீட்கப்பட்டாலும், அவற்றை உறுதிசெய்ய இந்த பரிசோதனை உதவும் எனவும் அவர்கள் விளக்கமளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு சேவையின் இந்த அறிக்கையால் ஜனாதிபதி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

இதேவேளை, ஆர்ஜென்ரீனா உள்நாட்டு மோதலின் பின்னர், காணாமல் போனவர்களை கண்டறிய இதேவிதமான மரபணு பரிசோதனை முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்மூலம் இராணுவ அதிகாரிகளால் வளர்க்கப்பட்ட ஏராளயம் பிள்ளைகள், தமது உண்மையான பெற்றோரை கண்டறிந்தனர். அப்படி மீட்கப்பட்ட ஒரு பெண் குழந்தை (விக்ரோறியா) பின்னர், ஆர்ஜென்ரீன பிரதமராக பதவி வகித்தார்.

அவர் தனது வாழ்க்கை கதையை நூலாக வெளியிட்டிருந்தார். அது என்பெயர் விக்ரேரியா என்ற பெயரில் தமிழில் வெளியாகியிருந்தது. மன்னாரை சேர்ந்த தேவா அதை மொழிபெயர்த்திருந்தார்.

விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்!!! சம்பிக்க கூறுகின்றார்!!

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் விடுதலை புலிகள் உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் இப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த அவர், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய செயல்களில் பல தரப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இராணுவத்தினரை மாத்திரம் குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது எனத் தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் அடையாளம் காண்பது என்பது முடிவற்ற செயற்பாடாகும். எனவே, அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள வங்கிகளின் நடக்கும் பகல் கொள்ளை!!

ஒவ்வொரு வங்கிகளும் எங்களிடம் பணம் சேமியுங்கள் அதிக வட்டி தருகிறோம் என்றுதான் அழகிய விளம்பரங்கள் அலங்காரமாய் வைக்கிறார்கள். எந்தவொரு வங்கியாவது இந்த தொகைக்குக்கீழே இருந்தால் புடுங்கிக் கொள்வோம் என்று ஒரு மூன்று ரூபா போட்டோ கொப்பியாகிலும் ஒட்டுகிறார்களா.?

ஒரு காலத்தில் அதிகம் வைத்திருப்பவனிடம் பறித்தார்கள்.
இப்போ இல்லாத ஏழைகளிடம் பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.
வண்ண வண்ண சுவரொட்டி விளம்பரத்திற்கு பதிலாக இந்த நடைமுறையை பகிரங்க தட்டியில் காட்டி ஏழைகளிடமிருந்து புடுங்குவதை #தவிர்க்கலாமே.
ஏழைகள் எல்லாம் தெரிந்துகொண்டு வங்கியில் பணம் போட்டு வைப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு அவகாசமுமில்லை.அடுத்த வேளைக்கு உழைக்க போக வேண்டும்.

3000.00 க்கு குறைவாக இருந்தால் கடிதம் மூலம். அதிக தொகை போடும்படி அறிவிக்கலாம். அல்லது குறைந்த தொகை உள்ளதால் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கலாமே.
பணத்துக்கு சட்டம் இயற்றியவனுக்கு ஏழைகள் பாதிக்கப்படுவது மனச்சாட்சிக்கு படவில்லையா.

ஏழைக்கு வங்கி எட்டாத தூரமா.
சிறு துளி பெரு வெள்ளம் என்று ஏழை நினைப்பது தவறா.
"கடலில் சென்றால் கடற்கொள்ளையர்கள் வங்கிக்கு சென்றால் வங்கிக் கொள்ளையர்கள். வித்தியாசம் அதிகமில்லை."


மாங்குளம் கொக்காவில் பகுதியில் சொகுசு பேருந்து விபத்து!! ஒருவர் பலி!! (Photos)

மாங்குளம் கொக்காவில் பகுதியில் கொழும்பிலிருந்து வந்த சொகுசு பேரூந்து மோதி பஸ்சின் சாரதி பலியாகியும் பயணிகள் சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுமுள்ளனர்.  இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயர் மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ஒன்றுடனேயே குறித்த பஸ் மோதியதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (26.02.2028)

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடித்து காட்டும் நாள்.

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் பதட்டமடைவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்வந்துப் போகும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

தனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகள் வந்து நீங்கும் நாள்.

மகரம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.    


திங்கள், 25 பிப்ரவரி, 2019

சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் ! லண்டனில் திரண்ட தமிழர்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வடக்கு கிழக்கு எங்கெனும் பூரண கரத்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வேளையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றது அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக “பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.


சிறிதரன் குழுவினரே!! பாலியல் லஞ்சம் கேட்காதீர்கள்!! தளபதியின் மனைவி!!

அறைக்கதவை உள்பக்கமாக தாளிட்டுவிட்டு சுவரோடு சாய்ந்து நின்றேன்,என் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்துபோய் இருந்தது,நிலத்தில் கால்களை வைக்கவே முடியாமல் இருந்தது.மொத்தத்தில் பிரமைபிடித்தவளிற்குரிய நிலையில் இருந்தேன், என் இரண்டாவது மகனிற்கு நான் எப்படி இந்த நிலையை விளங்கப்படுத்தபோகிறேன், அம்மா அந்தமாமா தானே சொக்லேற் கொண்டுவந்து தாறன் எண்டவர்.ஏனம்மா அந்தமாமா உங்களைக் கட்டிப்பிடிச்சவர்,ஏனம்மா அந்தமாமாவை தள்ளிவிட்டீங்க..,?அவர்கூடாதவரா..? அப்படியின்றா அண்ணாவும் நானும்போய் அடிச்சுப்போட்டுவரட்டுமாம்மா என்றகேள்விகளை அடுக்கியவாறு இருந்தான் என்இளைய மகன், நான் என்ன செய்வேன் கடவுளே,என்ர பிஞ்சுபாலன்ர மனசில இந்தசம்பவம் பதிஞ்சு போகப்போகுது,கட்டாயம் காரணம் கேட்பானே நான் என்ன செய்வேன் கடவுளே எனக்கு நல்ல தெளிவைத்தரவேண்டும் என்று எண்ணுவதற்குள் என் மகன் அம்மா கதவை திறவுங்கம்மா கதவைத்திறவுங்கம்மா என்று கத்துவது கேட்கிறது, கீழ்த்தரமான எண்ணம்கொண்ட ஒரு பச்சோந்தியானவனை பற்றி எப்படி கூறுவேன் என்மகனிற்கு..?.எத்துன்பம் வந்தாலும் நமக்குத்தானே அனைத்தும் வருகுது, 2009 ஆம்ஆண்டிற்கு முற்பட்ட காலமாக இருந்திருந்தால் அவனிற்கு என்நிலையை நன்றாக புரியவைய்த்திருப்பேன்.என்ன செய்வது இக்காலத்தில் இந்த சமூகத்தில் நல்லதிற்கு காலமில்லை,ஒரு பெண் தனித்திருந்தால் அவளை வாயில்வந்தவாறு கதைப்பார்கள்.அதனால் நான் அவதானமாக இருந்தும் இன்று இப்படி நடந்துவிட்டதே. நான் என்ன செய்வேன் ..? என் பழைய நினைவுகளோடு ஒன்றித்துப்போகிறேன்…. எனது கணவன் * இன்று ஓர் மாவீரன்,நான் பொதுப்பெண்ணாகவே அதாவது போராட்டத்தோடு தொடர்பற்ற ஒரு பெண்ணாகவே இருந்தேன்.எனது மாமாவின் மகன் ஓர் போராளியாக இருந்தபோது விடுமுறை நாட்களில் அவனுடன் வருபவர்தான் என் கணவரானவர் .அவரிற்கு என்னைப்பிடித்தப்போக விரும்பம்கேட்டு போராட்டமுறைப்படி திருமணம்செய்து என்னை மனைவியாக்கிக்கொண்டார். என் குடும்பத்தில் அம்மா எப்போதும் கறாராக இருந்தபடியால் என்வீட்டினருக்கு நான்போராளியை திருமணம் செய்துகொள்வது விருப்பம் இல்லை.அதனால் விருப்பமில்லா திருமணமாகவே நடந்துமுடிந்தது, ஆனால் எனக்கு என் வாழ்க்கை மகிழ்வாகவே கழிந்தது, போராளியை திருமணம் செய்தால் சந்தோசமாக இருக்கமாட்டாய் என்று அம்மா சொன்னது இன்று என் மனதைத்தொட்டுச் சென்றது. ஏன் என் கணவன் இல்லாவிட்டாலும் அவனிற்கு பிறந்த இரண்டு புலிக்குட்டிகள் இருக்கு அதுபோதும் எனக்கு என்று பலதடவை என் மனதை நான் தேற்றிய நாட்கள் பலஉண்டு, இன்று நடந்த சம்பவத்திற்கு நான்கூறப்போகும் கருத்தில்தான் என் மகனின் எதிர்காலமே தங்கியுள்ளது,என் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்,எமது இல்லறவாழ்க்கையின் மகிழ்வில் கிடைத்த முத்துக்கள்தான் என் இரு செல்வங்களும் மூத்தவன் அகவீரன். இளையவன் முகிலன், இப்பெயர்களை என் கணவன் வைப்பதற்குக்காரணம்கூட தன்னோடு களமுனைகளில் ஒன்றாக இருந்து போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெயர்களே, மூத்தவனிற்கு 15 வயதும் இளையவனிற்கு 12 வயதும் கடந்திருந்தது, திருமணம் முடித்து பிள்ளைகள் பிறந்தபடியால் எனது கணவன் பெரிதாக களமுனை செல்வதில்லை,பின்தளத்தில்தான் வேலைகள் செய்தார். ஏதும் களமுனைஅலுவல் என்றால் மட்டுமே போய்வருவார்,அப்படிபோய்வரும்போதுதான் இராணுவ செல்தாக்குதலில், 2008 ஆம் ஆண்டு 02 மாதம் 27ஆம் திகதி எனது கணவன் களமுனையில் லெப்.கேணலாக வீரச்சாவைத்தழுவிக்கொண்டார், பலநூறு போராளிகளின் ஓர்பிடி மண்ணோடு கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டார். போராளியை திருமணம் செய்தபடியால்தானோ என்னவோ நான் எதற்கும் கலங்கிநின்றதில்லை,இராணுவத்திடம் சரணடைந்து முகாம்வாழ்வு முடிந்து மீள்குடியேற்றமாகி வீட்டுத்திட்டம் தந்து கடன்பட்டு கிழமைலோன் எடுத்தே இப்போது நாம்இருக்கும் வீட்டுவேலையையும் முடித்திருந்தேன், இரு பிள்ளைகளையும் இன்றைய சூழலில் வளர்ப்பதென்பது சவால் நிறைந்தவையாக உள்ளது,நாங்கள் சாப்பிட்டமோ இல்லையோ யாரிட்டயும் உதவியென்று போனதில்லை.உதவி செய்யவருபவர்கள் பலர் தமது சுயநலத்திற்காக வருபவரும் உண்டு, தேவையில்லாமல் அவமானப்படக்கூடாது என்பதே என் ஆசை., நான் கிளிநொச்சியில் உள்ள வாணிபம் ஒன்றில் கணக்காளர்வேலை பார்த்துவருகிறேன்,அந்த சிறுதொகை பணத்தை வைத்துத்தான் சாப்பாடுட்டுச்செலவு பிள்ளைகளிற்கு உடுப்பு,ரியூசன் காசு என்று எல்லாவற்றையும் சமாளிச்சுவருகிறேன், எனது கணவனை தெரியும் என்றுகூறி புலம்பெயர் தேசமொன்றில் இருந்து ஒருவர் சிலநாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்திருந்தார்,என் வீட்டிற்குவந்து எனக்கு உதவுவதாக கேட்டபோதுகூட நான் மறுத்துவிட்டேன் ,இல்லை இது என்கடமை,எங்களிற்காக போராடபோய் மாவீரனானவனின் குடும்பத்திற்கு நாங்கள் உதவவேண்டும்,புலம்பெயர் மக்கள் உதவாமல் யார் உதவுவது,.? நான் நிறைய உளைச்சு போதியளவு வச்சிருக்கிறன்,உங்களாலதான் நாங்கள் இன்று வீசாகிடைச்சு மகிழ்வா லீவிலவந்துபோறம், ஓர்மாவீரனின் குடும்பத்திற்கு உதவ நான் கொடுத்துவைத்திருக்கவேனும் என்று பலகதைசொல்லி நின்றான், சொல்லி மறுகிழமை ஓர் நல்இன பசுவும் கொட்டில்போட தகரமும் கொண்டுவந்து தந்துவிட்டுபோகும்போது மறுமுறை வரும்போது என் பிள்ளைகளிற்கு சொக்லேற் கொண்டுவருவதாக கூறியிருந்தான்,எனக்கு இவற்றில் உடன்பாடில்லை,என் இளைய மகனிற்கு சொக்லேற் என்றால் விருப்பம், ஆனாலும் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்,சில நாட்கள் சென்றபின் என் பிள்ளைகள் இருவரும் தனியார் வகுப்பிற்கு சென்றபின் நயவஞ்சக எண்ணத்தோடு வந்த கண்ணன் என் பிள்ளைகள் இல்லை என்பதை அறிந்துகொண்டு நாட்டிற்காக போராடப்போன மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காமல் தன்உடல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள என்னை பலவந்தபடுத்தினான், நானும் என்னாலான பலபோராட்டம் நடத்தினேன்,எத்தனையோ நல்ல உள்ளங்கள் வெளிநாட்டில் இருந்துவந்து போராளி மாவீரர் குடும்பங்களிற்கு உதவி புரிந்துவிட்டு போகிறார்கள்,இவனைப்போல கேவலங்கெட்ட வக்கிரபுத்தியுடையவனை நான் காணவில்லை.என்ன செய்வது கத்தினால்கூட பெண்ணை தப்பாக பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், என்னைத்தான் தப்பாக கதைப்பார்கள்,இந்த கல்நெஞ்சம் கொண்டவனிடமிருந்து விடுபட போராடும்போராடிக்கொண்டிருக்கும்போதே வகுப்பு முடிந்து என் இளைய மகன் வந்திருந்தான்,கையில்கிடைத்த பூவாசால் எறிந்ததில் வெளிநாட்டுகாறனுக்கு மண்டையும் உடைந்துவிட்டது,அந்தகோபமே அவன் என்னை மேலும் பலவந்தபடுத்தகாரணமாக அமைந்துபோனது,எனது மகனைக்கண்டதும்தான் என்னை தள்ளிவிட்டு வெளியில் ஓடினான், எனக்கு என்னசெய்வதென்றே தெரியாமல் போனது,அம்மா என்று ஓடிவந்த மகனை விலத்திவிட்டு அறைக்குள் சென்றுகதவை தாளிட்டேன். இளையமகன் வெளியில் நின்று அம்மா கதவை திறவுங்கம்மா பிளீஸ் அம்மா,கதவதிறவுங்கம்மா என்று கதறுவது கேட்டகிறது,அவன் பயந்துபோயிருக்கிறான் இன்று நான் கூறும் பதிலே அவனது எதிர்காலத்திற்கு உதவும், அம்மாவை கொடுமைப்படுத்த நினைத்தவனை பழிவாங்கவேணும் என்று என்மகன் நினைக்ககூடாது,வெளிநாட்டுக்காறனின் மாடு வீட்டில் நின்றால் என்மனம் இந்த நினைவில் இருந்துமீளாது,பணம் இருக்கின்றது என்பதற்காக ஒரு விதவையை அனுபவிக்க துடிக்கிறானே , அதுவும் ஓர் மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காது. இவளவு கீழ்த்தரமான சிந்தனையுடன் என்னை அணுகியவன் இன்று எனக்கு செய்ததுபோல்தானே இந்த பணத்தை காட்டி நாளை இன்னொரு குடும்பத்திற்கு செய்யப்போகிறான்..? கடவுளே என்கணவன் தாய் மண்ணைத்தானே முதலாவதாகவும் உயிராகவும் நேசித்தான். தன்மனைவி பிள்ளைகளை இரண்டாவதாகவே நேசித்தவன்,எம்மக்கள் சந்தோசமாக வாழவேணும் என்று போராடிமடிந்துபோனவன் ஆனால் இன்று அவன் குடும்பத்திற்கு மற்றவர்கள் தரும் கௌரவம்…..? மாட்டை காணும்பேதெல்லா அந்த காமுகனின் நினைவுதான்வரும்,நாங்கள் ஏழைகள்தான் ஆனால் இவர்களைப்போல கோழைகள் இல்லை. அதனால போய் மாட்டை அவிட்டு எங்காவது விட்டிட்டுவந்து என் செல்லமகனிற்கு நல்ல தெளிவான பதிலைக்கொடுக்கவேண்டும் என்று கதவைத்திறந்துவெளியே போகிறேன் தெளிந்த சிந்தனையோடு.

தமிழனின் உணர்வுக்கு ஆதரவு தராத யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம் கடைகள்.

வடக்கு எங்கும் தமிழர்கள் கடையடைப்பு செய்து போராட்டம் செய்யும் போது யாழ்ப்பாணத்தில் இயங்கும் முஸ்லீம் கடைகள்.
வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் நடைபெறவேண்டிய போராட்டம் கிழக்கில் முஸ்லீங்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்பதால் வடக்குடன் மட்டும் போராட்டம் நடைபெற்றாலும், யாழ்ப்பாணத்தில் கடையை திறந்து குழப்பும் முஸ்லீம்கள். இதனை யாழ் வர்த்தகர் சங்கம் மிகயாக கண்டிக்க வேண்டும் இப்படியான குழப்பவாதிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.




யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.