செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

காணாமல் போனவர்களின் உறவுகளின் எச்சில், இரத்தம் சேகரிக்கப்பட்டதா?? அதிர்ச்சித் தகவல்கள்!!

மரபணு பரிசோதனைக்காக வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இரகசியமான முறையில் இரத்தம், உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வுச்சேவை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இரகசியமாக சேகரிக்கப்படும், இரத்த, உமிழ்நீர் மாதிரிகளை இரகசியமாக அமெரிக்கா கொண்டு சென்று பரிசோதனை மேற்கொள்ளவும், மன்னார் புதைகுழி எலும்புக்கூட்டு பரிசோதனை முடிவுடன் அவற்றை பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரகசிய நடவடிக்கைக்காக வெளிநாடுகளிலிருந்து சிலர் இலங்கைக்கு வந்து, ஒரு மாதமாக தங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் விவகாரம் எந்த முடிவுமின்றி இழுபறியாகவே இருந்து வருகிறது. அரசு தனது பொறுப்புக்கூறும் பாத்திரத்தை சரியாக வகிக்காத காரணத்தால், உறவுகளை பறிகொடுத்தவர்கள் மிகுந்த விரக்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மன்னார் புதைகுழி விவகாரம் காணாமல் போனவர்களின் உறவுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவில் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளின் இரத்த, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு சேவை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மூவர், ஒரு மாதமாக இலங்கையில் தங்கியிருந்து இந்த பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். எழுத்தூர் கடந்த 7ம் திகதி மன்னார் எழுத்தூர் பகுதியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இந்த குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது. மரபணு பரிசோதனையின் அவசியத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உறவுகளிற்கு அமெரிக்க குழு விளக்கமறித்துள்ளது.

இதேபோல, கடந்த 7ம் திகதி திருகோணமலைக்கு சென்ற இந்த குழு, அங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கு விளக்கமளித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி, மரபணு பரிசோதனையின் அவசியத்தை புரிய வைத்து வருகிறார்கள். இந்த செயற்பாட்டை அரசசார்பற்ற நிறுவனமொன்றே முன்னெடுத்து வருவதாக தேசிய புலனாய்வு சேவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் நிதியளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இரத்த, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் குவத்தமாலாவிற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை நடத்தவும், சேமித்து வைக்கவும் இந்த குழு முயற்சிக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் எதிர்காலத்தில் எச்சங்கள் மீட்கப்பட்டாலும், அவற்றை உறுதிசெய்ய இந்த பரிசோதனை உதவும் எனவும் அவர்கள் விளக்கமளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு சேவையின் இந்த அறிக்கையால் ஜனாதிபதி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

இதேவேளை, ஆர்ஜென்ரீனா உள்நாட்டு மோதலின் பின்னர், காணாமல் போனவர்களை கண்டறிய இதேவிதமான மரபணு பரிசோதனை முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்மூலம் இராணுவ அதிகாரிகளால் வளர்க்கப்பட்ட ஏராளயம் பிள்ளைகள், தமது உண்மையான பெற்றோரை கண்டறிந்தனர். அப்படி மீட்கப்பட்ட ஒரு பெண் குழந்தை (விக்ரோறியா) பின்னர், ஆர்ஜென்ரீன பிரதமராக பதவி வகித்தார்.

அவர் தனது வாழ்க்கை கதையை நூலாக வெளியிட்டிருந்தார். அது என்பெயர் விக்ரேரியா என்ற பெயரில் தமிழில் வெளியாகியிருந்தது. மன்னாரை சேர்ந்த தேவா அதை மொழிபெயர்த்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.