தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வைப்புயல் வடிவேலு பாணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் தனிமையில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்டமிட்ட திருடர்கள் அங்கு கைவரிசையை காட்டியுள்ளனர்.

வீடு பிரித்து இறங்கிய திருடர்கள் சமையல் அறையில் உள்ள சமையல் பாத்திரங்கள், பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றை திருடியுள்ளனர். அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த புடவைகள், படுக்கையறையில் இருந்த கட்டில், மெத்தை என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

திருடிவிட்டு செல்லும்போது, வடிவேலு பாணியில் ஒரு காரியம் செய்துள்ளனர். தமது கை அடையாளங்கள், காலடி தடங்கள் பட்ட இடங்களில் மிளக்காய்த்தூள் தூவியுள்ளனர்.

பொலிஸ் மோப்பநாயிடமிருந்து தப்பிக்கவே இப்படி செய்துள்ளார்கள்.