வம்புதும்பு நக்கல் நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வம்புதும்பு நக்கல் நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 மார்ச், 2019

யாழ் ஈச்சமோட்டையில் பொண்ணுக்குட்டிக்கும் செல்லம்மாவுக்கும் கள்ளக்காதல்!! பிறந்த குழந்தைக்கு நடந்தது என்ன?

 85 வருசத்துக்குது முதல் மரமேறுற பொன்னுக்குட்டி சாதாரணமா செய்த வேலையைத்தான் இப்போதய மகப்பேற்று நிபுணர்கள் பெரிய பந்தா காட்டி செய்கின்றார்கள்...

இந்தச் செய்தி 85 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அந்தக்காலத்து தமிழப் பத்திரிகையில் வந்த செய்தியாகும்.

கீழே அந்தச் செய்தி தரப்பட்டுள்ளது.


யாழ் கொக்குவிலில் வாள் வெட்டு!! 60 வயது விதாணையார் வழ வழ, கொழ கொழ

இந்தச் செய்தி 1935ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அந்தக்காலத்து தமிழப் பத்திரிகையில் வந்த செய்தியாகும்.

கீழே அந்தச் செய்தி தரப்பட்டுள்ளது.



வெள்ளி, 8 மார்ச், 2019

மன்னார் பாதிரியார்களே!! கட்டாயம் இந்த வீடியோவைப் பாருங்கள்!! புரிவீர்கள் (Video)

ஸ்பெயின் நாட்டில் கிறீஸ்தவ ஆலயம் முன்புற வீதியில் விநாயகர் ஊர்வலம் செல்வதற்காக அந்த கிறீஸ்தவ ஆலய நிர்வாகத்திடம் அனுமதி கேட்ட போது ஆலய நிர்வாகம் பிள்ளையாரை தமது ஆலயத்திற்குள்ளேயே அனுமதித்து வழிபட்டார்கள். அவர்களின் மன நிலை நம்ம மன்னார் கிறீஸ்தவ சமூகத்திற்கு வருமா?



புதன், 6 மார்ச், 2019

ஊரெழுச்சி திட்டத்தில் கொள்ளையடிக்கும் வன்னி நாட்டாமை சிறிதரன்!!

கம்பரெலிய( ஊரெழுச்சி) திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் செப்ப னிடும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனா்.

கிளிநொச்சியில் கம்பரெலிய திட்டத்தை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சின் போது ரணிலுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்கான வெகுமதிகளில் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு எனக் கூறி கம்பரெலிய திட்டம் ஊடக பெருந்தொகை பணம் சன்மானமாக வழங்கப்பட்டிருந்தது.

அப் பணித்தில் முடிந்தவரையான கொள்ளையடிப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் சிறிதரனின் ஊழல் முறைகேடு உச்சம் பெற்றுத் திகழ்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதித் திருத்தப் பணிகளின் போது, முறையான தொழிநுட்ப மேற்பார்வை இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நியமங்களுக்கு அமைவாகபணிகள் மேற்கொள்ளப் படாது, தரமற்ற அபிவிருத்திப் பணிகளை ஒப்பந்தகாரர்கள் முன்னெ டுத்து வருகின்றனர்.

வீதி அபிவிருத்திப் பணிகளின் தரம் தொடர்பில் முறையான தொழிநுட்ப மேற்பார் வை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, மாவட்ட உயரதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 5 மார்ச், 2019

பகிடி வதையால் தனது படிப்பைக் கைவிட்டான் யாழ் பல்கலைக்கழக மாணவன்!! (Photos)


பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்!
யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார்.
குறித்த மாணவன் இது தொடர்பில் தனது முகநூல் வாயிலாக பகிரங்கமாக தனது வேதனைகளையும், பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டும் , அவமானப்படுத்தப்பட்டும் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட முதலாம் வருட மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது தனது உயிருக்கே ஆபத்தானது என்னும் நிலையில் தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை இடைநிறுத்தியுள்ளார்.
கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து கஸ்டப்பட்டு பாடசாலைக் கல்வியைக் கனவுடன் கற்ற போதிலும் தொடர்ந்தும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை சிரேஸ்ட மாணவர்களது மனித உரிமை மீறல்களால் தொடர முடியவில்லையே தான் கண்ட கனவு வீணாகியுள்ளதாக வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் வாழ்ந்து பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளுடன் பல கஸ்டங்களை எதிர்நோக்கி கல்வி கற்றவர் என்பதும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து அனைத்தையும் இழந்து கஸ்டப்பட்டு அவலங்களை எதிர்நோக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் அடித்துத் துன்புறுத்தல் தாங்க முடியாது ஏன் எனக்கு அடிக்கிறியள்? நான் என்ன குற்றம் செய்தேன் என்று வினவிய போது திருப்பிக் கதைக்காதை எனக்கூறி மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளதாகவும், வீதியில் வைத்து அவமானப்படுத்தியுள்ளதாகவும் தனது முகநூலில் இம்மாணவன் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் சிலரால் இம்மாணவனது முகநூல் போன்று இன்னொரு முகநூலை உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனது ஒழுக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் சில பதிவுகள் இடப்பட்டுள்ளது.
மேற்படி மாணவனை பல தடவைகள் தாக்கி வன்கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அதனால் யாழ்.போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
யுத்த காலம் உட்பட தற்போது வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாணவன் மீது வதை புரிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வருவதுடன். பாதுகாப்புடன் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள உயர்கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கால் வைக்கும்போது நான் கண்ட கனவுகள் இலட்சியப் பாதைகள் அனைத்தும் என் கண்முன்னே வந்தது! அவை அனைத்தும் வந்த சில நொடிகளில் என் கன்னத்தில் இடி விழுந்தது போன்று சத்தம். யார் என்று பார்த்தால் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களாம் அடித்ததற்கும் காரணம் எதுவும் சொல்லாது நகர்ந்து சென்றார்கள் என பாதிக்கப்பட்ட மாணவன் கண்ணீருடன் பதிலளித்துள்ளார்.
இவை அனைத்திற்கும் மேலாக பகிடிவதை என்னும் போர்வையில் தாங்கள் தங்கும் அறைகளில் எங்களை கூட்டிச்சென்று இரக்கம் இன்றி தாக்குகின்றனர்.
எனினும் பல்கலைக்கழகம் சென்றால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எனக்கே தோன்றுகின்றது. எனது கனவுகள் அனைத்தும் புதைந்தது பகிடிவதையால் பட்டப்படிப்பும் இடையில்முற்றுப்பெற்றது. எனவும் தெரிவித்துள்ளார்.
Image may contain: textImage may contain: textNo photo description available.Image may contain: text

ஆவா காவாலிகளை பிரபலமாக்கும் ஊடகப் புறம்போக்குகள்!! செம்மணியில் நடந்தது என்ன?



யாழில் இருக்கும் படையினரின் துாண்டுதலில் போதைப்பொருளுக்கு அடிமையாகி தங்களை சினிமா ஹீரோக்கள் போல சித்தரித்துக் கொண்டு யாழில் திரியும் சில காவாலிகளை ஊடகங்களும் பொலிசாருமாகச் சேர்ந்து ஹீரோக்களாக்குகின்றார்கள் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்கள் சிலவற்றி வந்த செய்தி இங்கு தரப்பட்டுள்ளது.

யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் “ஆவா 001 இராஜ்ஜியம்” என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த பதத்தை எழுதிய பின்னணியில் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

யாழில்.ஆவா எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக பொலிஸார் கூறி வருகின்றனர்.

அந்தவகையில் வாள் வெட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பல இளைஞர்கள் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு,குற்றச்செயல்களின் பின்னணியின் பாரிய சக்தி ஒன்று இருப்பது மக்கள் அனைவரும் அறிந்ததே.

இருந்தும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை ஸ்ரீலங்கா பொலீசார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினாலும் அவர்களை ஒருசில சட்டத்தரணிகள் பிணையில் எடுப்பதற்காக முந்தியடித்துக்கொண்டு இருக்கின்றதை மக்கள் அவதானித்துள்ளார்கள்.

ஆவா குழுவை யாழில் வைத்து இயக்குவதன் ஊடாக வடக்கில் தமிழ் மக்களை அடக்கி ஆழ ஸ்ரீலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக மக்களை என்றும் அச்சத்தில் வைத்திருப்பதையே ஸ்ரீலங்கா அரசும் படை புலனாய்வாளர்களும் அவர்களுக்கு பின்னால் இருந்து செயற்படும் அரசியல் வாதிகளும் விரும்பி வருகின்றார்கள் அதன் வெளிப்பாடாகே யாழில் இவ்வாறான குழுக்கள் குற்றச்செயல்களை செய்யவைத்து மக்களை அச்சத்திற்குள் கொண்டு செல்கின்றார்கள் இவர்களின் பின்னணியில் பாரிய சக்தி ஒன்று இயங்கிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்மக்களின் ஒற்றுமையினை சீர்குலைத்து படித்த சமூகத்தினையும் பணம் படைத்தவர்களையும் என்றும் அச்சத்திற்குள் வைத்திருக்கும் முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

திங்கள், 4 மார்ச், 2019

அப்பாவி அகதியும்..!! ஐபிசி முதலாளியும்..!!

அப்பாவி அகதி – ஐயா வணக்கம். நான் திருச்சியில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை விடுதலை செய்யுமாறு கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.

ஐபிசி முதலாளி – ஓ! அப்படியா? சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவி அகதி – என்னுடைய கையில் ஐபிசி ஊடகம் இருந்திருந்தால் பத்தாயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருப்பேன் என்று கனடாவில நீங்கள் பேசினதை அறிந்தேன். அப்படியென்றால் எனக்காகவும் கொஞ்சம் குரல் கொடுக்க முடியுமா?

ஐபிசி முதலாளி – எனக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று விருப்பம்தான் தம்பி. ஆனால் அப்பறம் இந்திய உளவுப்படைகாரங்கள் கோவிப்பாங்களே. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தனீங்கள். அகதிகளுக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா?

ஐபிசி முதலாளி- தம்பி நான் ஒரு முதலாளி என்பதை நீர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். போட்ட பணத்தை எப்படி இரட்டி மடங்காக எடுக்கலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அகதிகளுக்கு உதவுவதால் எனக்கு என்ன லாபம்?

அப்பாவி அகதி – என்ன ஐயா இப்படி பேசறீங்க? வன்னியில் உள்ள முன்னாள் போராளிகளை எல்லாம் சந்தித்து உதவி வருகிறீர்கள் என்று கூறுகிறார்களே?

ஐபிசி முதலாளி – அது எனக்கு தரப்பட்ட அஜெண்டா தம்பி. தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக குழப்புறவேலை எனக்கு தரப்பட்டிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! உங்களின் ஊடகத்தை தமிழ் தேசிய ஊடகம் என்கிறாங்களே?

ஐபிசி முதலாளி – தேசிய ஊடகமும் இல்லை. தேசிக்காய் ஊடகமும் இல்லை. அதெல்லாம் என்னை வைத்து பிழைப்பதற்கு என்கூட இருக்கிறவங்கள் கட்டி விடுகிற கதைகள்.

அப்பாவி அகதி – சரி ஐயா. ஒரு சின்ன வேண்டுகோள். உங்களை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக என்ரை மகள் காப்பிலியுடன் ஓடிவிட்டாள் என்று வீடீயோ மட்டும் போட்டிடாதையுங்கோ.

ஐபிசி முதலாளி – சரி சரி பார்க்கலாம்.

வணக்கதுக்குரிய மன்னார் குரு முதல்வர் சோசை அவர்களுக்கு வணக்கம்!!





மன்னார் மாவட்ட குரு முதல்வரின் அறிக்கை வாசிக்காதவர்குள் இங்கே அழுத்தவும்.
https://www.vampan.org/2019/03/blog-post_45.html


 
 தங்கள் அறிக்கை வாசித்தேன் .

 மத நல்லெண்ணத்துக்கு எதிராக நடந்தார்கள் என்று நீங்க சுட்டி காட்டி இருக்கும் விடயம் " புனித லூதூர் கோயிலுக்கு முன்னால் இருந்த வீதி வளைவை புதுப்பிக்க வந்தமையே "

தங்கள் கருத்தில் ஒரு நியாயம் இருக்கு . ஏற்று கொள்கிறேன்

இருந்த வளைவு ஒன்றை , உங்க சேர்ச் க்கு முன்னால் இருந்தததை புதுப்பிக்க வந்தது மத நல்லிணக்கத்தை குழப்பும் என்றால் , மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டு , மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே #சிவபூமி என்றழைக்கும் வகையில் சிவபூமியா இருந்த எங்கள் இடத்தில பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு வந்த போர்த்துகேயர் கட்டிய சேர்ச் மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைச்ச செயல் தானே ???

ஒரு வளைவு க்கும் சேர்ச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்க உணராதவர் அல்ல . வளைவு ஏற்படுத்திய மத நல்லிணக்க குழப்பம் பெரிதா ? சிவ பூமியில் சேர்ச் கட்டியதால் நல்லிணக்க குழப்பம் பெரிதா ? என்பதை தாங்களே ஊகித்தறிந்து கொள்ளுங்கள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறது எங்கள் பழமொழி .அதாவது கோயில் இல்லாத ஊர்களே இல்ல . கோயில்கள் இருந்த ஊர்களில் எல்லாம் சேர்ச் கட்டப்பட்டு இருக்கே அதெல்லாம் மத நல்லிணக்கத்தை குழப்பும் செயல் என்று மக்கள் இடிக்க வெளிக்கிட்டால் நிலைமை என்னாகும் ??

மனதுக்குள் ஒரு ஓரத்தில்  எனக்கு ஒரு பயம் இருந்து கொண்டிருந்தது உங்கள் அறிக்கை வாசிக்கும் வரை . " உண்மையில் இது எங்கட நடுநிலைவாதிகளும் , நல்லிணக்கவாதிகளும் சொல்கிற மாதிரி நாங்க தப்பாக நினைத்து கொண்டு கதைக்கிறமோ என்று

ஆனால் உங்கள் அறிக்கை என் பயத்தை போக்கிவிட்டது . ஒரு குறிப்பிட்ட போதகரால் மட்டும் வழிநடத்தப்படவில்லை என்பது தெட்ட தெளிவாகிறது .

ஏனெனில் உங்கள் அறிக்கையில் எந்த இடத்திலும் நடந்த சம்பவத்துக்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்கவில்லை

கசைவத்தின் கொடியாக பிரகடனப்படுப்பட்ட , ஏலவே இனத்தின் கொடியாக நூற்றாண்டு காலமாக இருந்த கொடி காலால் மிதிக்கப்பட்டதுக்காவது மன்னிப்பு கேட்பீங்க என்று நினைத்தேன் . ஆனால் அதையும் செய்ய நீங்க தயார் இல்லை எனினும் இறுதியில் நல்லிணக்கத்தை பேண அழைப்பு விட்டு இருக்கிறீங்க

இது எப்படி இருக்கு தெரியுமா ? அண்மையில் ரணில் வந்து " மறப்போம் மன்னிப்போம் " என்று சொன்னதுக்கு சமனானது

எனினும் தங்கள் அறிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக

அவனா இவன்?? கேதீஸ்வர வளைவு அழிப்பில் முன்நின்ற ஒருவன்தான் இவன்!! (Photos)


திருக்கேதீஸ்வர சந்தியில் சிவராத்திரிக்காக அமைக்கப்பட்ட வளைவை தகர்த்த குழுவில் இவனும் ஒருவன்.... பெயர் தாருசாந்த். இவனது முகப்புத்தகம் இதுதான்.


Image may contain: 3 people, people standing and stripes

கேதீஸ்வர வளைவை அகற்ற முன்நின்ற பாதிரி பொம்பிளைக் கள்ளன்!! புலிகளால் தண்டனை பெற்றவன்!!


வங்காலை பங்குக்குரிய மார்கஸ் பாதிரியார் கடந்த 6 மாதங்களாக கடமையாற்றுகிறார்.இவர் செட்டிக்குளம் பகுதியில் இதற்கு முதல் கடமையாற்றினார் ரிசாத் அமைச்சரின் மூலமாக பல சலுகைகளைப்பெற்றார். இவரின் சொந்த இடம் எழுத்தூர். இவர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டிவிரிச்சான் பகுதியின் பாதராக கடமையாற்றினார். அக்காலத்தில் பெண்கள் விடயத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கைது செய்யப்பட்டதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு யோசப் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார். வாங்கலையில் உள்ள தமிழ் மக்களின் 3000ற்கு மேற்பட்ட வாக்குகளில் கணிசமானவற்றை ரிசாத்துக்கு எடுத்துக்கொடுப்பதில் இந்த பாதிரியாருக்கும் பெரும் பங்கு உண்டு..

யாழில் டாண் ரீவி குகநாதனுக்கும் அங்கஜனுக்கும் இடையில் குடும்பிச் சண்டை உக்கிரம்!!

யாழ்.குடாநாட்டினில் டாண் தொலைக்காட்சி மற்றும் கெப்பிடல் தொலைக்காட்சிகளிற்கிடையேயான கேபிள் இணைப்பு மோதல் உச்சம் பெற்றுள்ளது.

டாண் ரீவி கோத்தபாயாவின் பினாமியாக குகநாதன் என்பவனால் நடாத்தப்பட்டு வருகின்றது. இதே வேளை கெப்பிட்டல் ரீவி மகிந்தவின் மகனுடன் நெருக்கமாக இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் நடாத்தப்பட்டு வருகின்றது.

டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கூட்டமைப்பின் வசமுள்ள யாழ்.மாநகரசபை மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.அத்துடன் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்களை அகற்றியும் வருகின்றது.

குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயனின் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்கள் இன்றும் யாழ்.மாநகர எல்லைக்குள் நாட்டப்பட்டுள்ளது.கெப்பிடல் தொலைக்காட்சிக்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரியே வழங்கியுள்ளார்.

அதேவேளை டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன் மைத்திரியின் போதைப்;பொருளிற்கு எதிரான அணியின் இணைப்பாளராக(?) நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாநகர துணை முதல்வர் செய்த முறைப்பாட்டையடுத்து காவல்துறை அதனை இன்று தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு முறுகல் நிலை தோன்றியிருந்தது.சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றிருந்த டாண் ரீவி ஊடகவியலாளருடன் அங்கயனின் ஆதரவாளர்கள் முரண்பட்டுமுள்ளனர்.



ஞாயிறு, 3 மார்ச், 2019

திருப்பதியில் ரணிலின் திருவிளையாடல் இதோ!! எடைக்கு எடை தங்கம் கொடுத்தாராம் (Photos)

திருப்பதிக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கிய பிரதமா் ரணில், இரவல் சீலையில் இதுநல்ல கொய்யகமாம்.. திருப்பதி தாிசனத்திற்கு சென்றிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையான் தாிசனத்தில் ஈடுபட்டதுடன் தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை வழங்கியிருக்கின்றாா். இந்த தரிசனத்துக்காக நேற்று மாலை திருப்பதிக்கு சென்ற பிரதமர், அவரது பாரியார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்துள்ளார். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்திற்காக ஏழுமலையான் ஆலய முன் வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசிக்க அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரவது பாரி யாருக்கும் ஆசி வழங்கினர். இதனையடுத்து தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை பிரதமா் திருப்பதிக்கு வழங்கியதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.

திருகோணமலையில் விபச்சார விடுதி இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்ட காட்சிகள் (Video)

திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையில் மசாஜ் நிலையங்களுக்கு அனுமதி கொடுக்காத நிலையில் சட்ட விரோதமாக தொழிற்பட்ட மசாஜ் நிலையங்கள் அப்பகுதியில் உள்ள உணர்வு மிக்க இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த மசாஜ் நிலையங்களில் மசாஜ் என்னும் போர்வையில் விபச்சாரமே நடைபெற்று வந்ததாக  அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Image may contain: indoorImage may contain: one or more people, sunglasses, selfie and close-upNo photo description available.No photo description available.Image may contain: one or more people, people standing and nightImage may contain: one or more peopleImage may contain: 1 person

யாழ் - கொழும்பு அதி சொகுசு பஸ்களின் அந்தரங்கம்!! 100 வீத மரணம் நிச்சயம்!!

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பயணிகள் பேருந் துகள் தொடா்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவரும் நிலையில், உயிாிழப்புக்களும், படு காயங்களும் அன்றாட வழக்கமாகியிருக்கின்றது.இந்நிலையில், மக்கள் என்ன நம்பிக்கையில் பேருந்துகளில் பயணிக்க முடியும்? என சமூக ஆா்வலா்களிடமிருந்து சரமாாியான கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்ற து. யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்குச் செல்­லும் அதி சொகுசு பேருந்­து­க­ளின் அண்­மைக்­கால விபத்­தால் இது­வரை சுமார் ஐம்­பது பேர் வரை காய­ம­டைந்­துள்­ள­னர். 5 பேர் வரை­யில் உயி­ரி­ழந்­துள்­ள­னர். பல்­வேறு பகு­தி­க­ளி­லும் கொழும்பு பய­ணத்­துக்­கான ஆசன முற் பதி­வு­கள் நடை­பெற்று மாலை 7.30 மணிதொடக்­கம் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்­கான பய­ணம் ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது.

சொகுசுப் பேருந்து என்ற படி­யால் இல­கு­வாக உட்­கார்ந்­தும் பய­ணி­கள் சார­தியை நம்பியும் தூங்கி விடு­கின்­ற­னர்.ஆனால், கூடிய வேகத்­தால் கடந்த மூன்று மாதங்­க­ளுக்­குள் சுமார் 5 பேருந்­து­கள் பெரும் விபத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன. 27ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து வீதி­யில் தரித்து நின்ற டிப்­ப­ரு­டன் மோதி பாரிய விபத்­துக்­குள்­ளா­ன­தில் சுமார் 15 பய­ணி­கள் ஆபத்­தான நிலை­யில் கிளி­ நொச்சி மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ ள­னர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி வவு­னி­யா­வில் இருந்து கொழும்பு நோக்கிப் பய­ ணித்த பேருந்து ஒன்று விபத்­துக்­குள்­ளான­தில் 4 பேர் உயி­ரி­ழந்­த­னர்.அத்­து­டன், மேலும் பலர் படு­கா­யம் அடைந்­துள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.மஹ­வெவ, சிலா­பம் பகு­தி­யில் வைத்து பேருந்து மின்­மாற்றி ஒன்­றில் மோதி­ய­தால் இந்த விபத்து நடந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்­தொன்று ஏ–9 வீதி­யின் மாங்­கு­ளம் பகு­தி­யில் வைத்து வி­பத்­துக் ­குள்­ளாகி­யது. இந்த சம்­ப­வத்­தில் சார­தி­யின் உத­வி­யா­ளர் விபத்து இடம்­பெற்ற இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த நவம்­பர் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்­கிப் பய­ ணித்த சொகுசு பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோ­டை­யில் வீழ்ந்து விபத்­துக்குள் ளா­கி­யது.

நாத்­தாண்­டிய வல­ஹப்­பிட்­டிய பகு­தி­யில் இடம் பெற்ற இந்த விபத்­தில் மூன்று பெண்­கள் உயி­ரி­ழந்­த­னர் . மேலும் 19 பேர் காய­ம­டைந்த­னர் .இவ்­வாறு தொடர்ச்­சி­யாக அதி சொகுசு பேருந்­து­கள் விபத்­துக்கு உள்­ளா­வ­தால், யாரை நம்பி பேருந்­தில் பய­ணிப்­பது என்று மக்­கள் கேள்வி எழுப்புகின்­ற­னர்.

சனி, 2 மார்ச், 2019

சிறிதரனின் வடிவேலு பாணியிலான திட்டம் பிசகியது!! பகிரங்கமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்!!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின்போது, தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் காடைத்தனமாக நடந்து கொண்டதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார்.

கிளிநொச்சியில் போராட்டத்தை குழப்பும் விதமாக நடந்து கொண்டமை தவறானது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

“அந்த போராட்டத்திற்கு எங்களிற்கும் அழைப்பு தரப்பட்டது. மக்களிற்காக பங்குகொண்டோம். போராட்டத்தில் ஒருவனாகத்தான் நான் கலந்துகொண்டிருந்தேன். முன்வரிசையில் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டிருக்காத காரணத்தால், மக்களுடன் மக்களாக சென்றேன். அதனால் அங்கு நடந்த குழப்பங்களை உடனடியாக அவதானிக்க முடியவில்லை.

எங்களது கட்சி சார்ந்த இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர் ஒருவர் என மூவர் முரணாக நடந்தமை எங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பத்திரிகையாளர்களிற்கும், அவர்களிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பெரியளவில் பாதிப்பை கொண்டு வந்தது. எங்களது கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், உறுப்பினர்களின் நாகரிகத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

அது தவறு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் நாட்களில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் கடமையும், பொறுப்பும் மக்களை வழிநடத்தும் கட்சியென்ற வகையிலும், மக்களிற்கு பொறுப்பு சொல்லும் தலைமை பாத்திரத்தை இந்த மாவட்டத்தில் வகிக்கின்ற காரணத்தால் உண்மைகளை ஏற்று, ஆராய்வு செய்து, பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்“ என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சியில் கடந்த 25ம் திகதி இடம்பெற்றமையும், அதில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் காடைத்தனமாக நடந்து கொண்டமை பலத்த விமர்சனத்தை தோற்றுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

இலங்கையில் உள்ள வங்கிகளின் நடக்கும் பகல் கொள்ளை!!

ஒவ்வொரு வங்கிகளும் எங்களிடம் பணம் சேமியுங்கள் அதிக வட்டி தருகிறோம் என்றுதான் அழகிய விளம்பரங்கள் அலங்காரமாய் வைக்கிறார்கள். எந்தவொரு வங்கியாவது இந்த தொகைக்குக்கீழே இருந்தால் புடுங்கிக் கொள்வோம் என்று ஒரு மூன்று ரூபா போட்டோ கொப்பியாகிலும் ஒட்டுகிறார்களா.?

ஒரு காலத்தில் அதிகம் வைத்திருப்பவனிடம் பறித்தார்கள்.
இப்போ இல்லாத ஏழைகளிடம் பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.
வண்ண வண்ண சுவரொட்டி விளம்பரத்திற்கு பதிலாக இந்த நடைமுறையை பகிரங்க தட்டியில் காட்டி ஏழைகளிடமிருந்து புடுங்குவதை #தவிர்க்கலாமே.
ஏழைகள் எல்லாம் தெரிந்துகொண்டு வங்கியில் பணம் போட்டு வைப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு அவகாசமுமில்லை.அடுத்த வேளைக்கு உழைக்க போக வேண்டும்.

3000.00 க்கு குறைவாக இருந்தால் கடிதம் மூலம். அதிக தொகை போடும்படி அறிவிக்கலாம். அல்லது குறைந்த தொகை உள்ளதால் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கலாமே.
பணத்துக்கு சட்டம் இயற்றியவனுக்கு ஏழைகள் பாதிக்கப்படுவது மனச்சாட்சிக்கு படவில்லையா.

ஏழைக்கு வங்கி எட்டாத தூரமா.
சிறு துளி பெரு வெள்ளம் என்று ஏழை நினைப்பது தவறா.
"கடலில் சென்றால் கடற்கொள்ளையர்கள் வங்கிக்கு சென்றால் வங்கிக் கொள்ளையர்கள். வித்தியாசம் அதிகமில்லை."


திங்கள், 25 பிப்ரவரி, 2019

சிறிதரன் குழுவினரே!! பாலியல் லஞ்சம் கேட்காதீர்கள்!! தளபதியின் மனைவி!!

அறைக்கதவை உள்பக்கமாக தாளிட்டுவிட்டு சுவரோடு சாய்ந்து நின்றேன்,என் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்துபோய் இருந்தது,நிலத்தில் கால்களை வைக்கவே முடியாமல் இருந்தது.மொத்தத்தில் பிரமைபிடித்தவளிற்குரிய நிலையில் இருந்தேன், என் இரண்டாவது மகனிற்கு நான் எப்படி இந்த நிலையை விளங்கப்படுத்தபோகிறேன், அம்மா அந்தமாமா தானே சொக்லேற் கொண்டுவந்து தாறன் எண்டவர்.ஏனம்மா அந்தமாமா உங்களைக் கட்டிப்பிடிச்சவர்,ஏனம்மா அந்தமாமாவை தள்ளிவிட்டீங்க..,?அவர்கூடாதவரா..? அப்படியின்றா அண்ணாவும் நானும்போய் அடிச்சுப்போட்டுவரட்டுமாம்மா என்றகேள்விகளை அடுக்கியவாறு இருந்தான் என்இளைய மகன், நான் என்ன செய்வேன் கடவுளே,என்ர பிஞ்சுபாலன்ர மனசில இந்தசம்பவம் பதிஞ்சு போகப்போகுது,கட்டாயம் காரணம் கேட்பானே நான் என்ன செய்வேன் கடவுளே எனக்கு நல்ல தெளிவைத்தரவேண்டும் என்று எண்ணுவதற்குள் என் மகன் அம்மா கதவை திறவுங்கம்மா கதவைத்திறவுங்கம்மா என்று கத்துவது கேட்கிறது, கீழ்த்தரமான எண்ணம்கொண்ட ஒரு பச்சோந்தியானவனை பற்றி எப்படி கூறுவேன் என்மகனிற்கு..?.எத்துன்பம் வந்தாலும் நமக்குத்தானே அனைத்தும் வருகுது, 2009 ஆம்ஆண்டிற்கு முற்பட்ட காலமாக இருந்திருந்தால் அவனிற்கு என்நிலையை நன்றாக புரியவைய்த்திருப்பேன்.என்ன செய்வது இக்காலத்தில் இந்த சமூகத்தில் நல்லதிற்கு காலமில்லை,ஒரு பெண் தனித்திருந்தால் அவளை வாயில்வந்தவாறு கதைப்பார்கள்.அதனால் நான் அவதானமாக இருந்தும் இன்று இப்படி நடந்துவிட்டதே. நான் என்ன செய்வேன் ..? என் பழைய நினைவுகளோடு ஒன்றித்துப்போகிறேன்…. எனது கணவன் * இன்று ஓர் மாவீரன்,நான் பொதுப்பெண்ணாகவே அதாவது போராட்டத்தோடு தொடர்பற்ற ஒரு பெண்ணாகவே இருந்தேன்.எனது மாமாவின் மகன் ஓர் போராளியாக இருந்தபோது விடுமுறை நாட்களில் அவனுடன் வருபவர்தான் என் கணவரானவர் .அவரிற்கு என்னைப்பிடித்தப்போக விரும்பம்கேட்டு போராட்டமுறைப்படி திருமணம்செய்து என்னை மனைவியாக்கிக்கொண்டார். என் குடும்பத்தில் அம்மா எப்போதும் கறாராக இருந்தபடியால் என்வீட்டினருக்கு நான்போராளியை திருமணம் செய்துகொள்வது விருப்பம் இல்லை.அதனால் விருப்பமில்லா திருமணமாகவே நடந்துமுடிந்தது, ஆனால் எனக்கு என் வாழ்க்கை மகிழ்வாகவே கழிந்தது, போராளியை திருமணம் செய்தால் சந்தோசமாக இருக்கமாட்டாய் என்று அம்மா சொன்னது இன்று என் மனதைத்தொட்டுச் சென்றது. ஏன் என் கணவன் இல்லாவிட்டாலும் அவனிற்கு பிறந்த இரண்டு புலிக்குட்டிகள் இருக்கு அதுபோதும் எனக்கு என்று பலதடவை என் மனதை நான் தேற்றிய நாட்கள் பலஉண்டு, இன்று நடந்த சம்பவத்திற்கு நான்கூறப்போகும் கருத்தில்தான் என் மகனின் எதிர்காலமே தங்கியுள்ளது,என் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்,எமது இல்லறவாழ்க்கையின் மகிழ்வில் கிடைத்த முத்துக்கள்தான் என் இரு செல்வங்களும் மூத்தவன் அகவீரன். இளையவன் முகிலன், இப்பெயர்களை என் கணவன் வைப்பதற்குக்காரணம்கூட தன்னோடு களமுனைகளில் ஒன்றாக இருந்து போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெயர்களே, மூத்தவனிற்கு 15 வயதும் இளையவனிற்கு 12 வயதும் கடந்திருந்தது, திருமணம் முடித்து பிள்ளைகள் பிறந்தபடியால் எனது கணவன் பெரிதாக களமுனை செல்வதில்லை,பின்தளத்தில்தான் வேலைகள் செய்தார். ஏதும் களமுனைஅலுவல் என்றால் மட்டுமே போய்வருவார்,அப்படிபோய்வரும்போதுதான் இராணுவ செல்தாக்குதலில், 2008 ஆம் ஆண்டு 02 மாதம் 27ஆம் திகதி எனது கணவன் களமுனையில் லெப்.கேணலாக வீரச்சாவைத்தழுவிக்கொண்டார், பலநூறு போராளிகளின் ஓர்பிடி மண்ணோடு கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டார். போராளியை திருமணம் செய்தபடியால்தானோ என்னவோ நான் எதற்கும் கலங்கிநின்றதில்லை,இராணுவத்திடம் சரணடைந்து முகாம்வாழ்வு முடிந்து மீள்குடியேற்றமாகி வீட்டுத்திட்டம் தந்து கடன்பட்டு கிழமைலோன் எடுத்தே இப்போது நாம்இருக்கும் வீட்டுவேலையையும் முடித்திருந்தேன், இரு பிள்ளைகளையும் இன்றைய சூழலில் வளர்ப்பதென்பது சவால் நிறைந்தவையாக உள்ளது,நாங்கள் சாப்பிட்டமோ இல்லையோ யாரிட்டயும் உதவியென்று போனதில்லை.உதவி செய்யவருபவர்கள் பலர் தமது சுயநலத்திற்காக வருபவரும் உண்டு, தேவையில்லாமல் அவமானப்படக்கூடாது என்பதே என் ஆசை., நான் கிளிநொச்சியில் உள்ள வாணிபம் ஒன்றில் கணக்காளர்வேலை பார்த்துவருகிறேன்,அந்த சிறுதொகை பணத்தை வைத்துத்தான் சாப்பாடுட்டுச்செலவு பிள்ளைகளிற்கு உடுப்பு,ரியூசன் காசு என்று எல்லாவற்றையும் சமாளிச்சுவருகிறேன், எனது கணவனை தெரியும் என்றுகூறி புலம்பெயர் தேசமொன்றில் இருந்து ஒருவர் சிலநாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்திருந்தார்,என் வீட்டிற்குவந்து எனக்கு உதவுவதாக கேட்டபோதுகூட நான் மறுத்துவிட்டேன் ,இல்லை இது என்கடமை,எங்களிற்காக போராடபோய் மாவீரனானவனின் குடும்பத்திற்கு நாங்கள் உதவவேண்டும்,புலம்பெயர் மக்கள் உதவாமல் யார் உதவுவது,.? நான் நிறைய உளைச்சு போதியளவு வச்சிருக்கிறன்,உங்களாலதான் நாங்கள் இன்று வீசாகிடைச்சு மகிழ்வா லீவிலவந்துபோறம், ஓர்மாவீரனின் குடும்பத்திற்கு உதவ நான் கொடுத்துவைத்திருக்கவேனும் என்று பலகதைசொல்லி நின்றான், சொல்லி மறுகிழமை ஓர் நல்இன பசுவும் கொட்டில்போட தகரமும் கொண்டுவந்து தந்துவிட்டுபோகும்போது மறுமுறை வரும்போது என் பிள்ளைகளிற்கு சொக்லேற் கொண்டுவருவதாக கூறியிருந்தான்,எனக்கு இவற்றில் உடன்பாடில்லை,என் இளைய மகனிற்கு சொக்லேற் என்றால் விருப்பம், ஆனாலும் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்,சில நாட்கள் சென்றபின் என் பிள்ளைகள் இருவரும் தனியார் வகுப்பிற்கு சென்றபின் நயவஞ்சக எண்ணத்தோடு வந்த கண்ணன் என் பிள்ளைகள் இல்லை என்பதை அறிந்துகொண்டு நாட்டிற்காக போராடப்போன மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காமல் தன்உடல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள என்னை பலவந்தபடுத்தினான், நானும் என்னாலான பலபோராட்டம் நடத்தினேன்,எத்தனையோ நல்ல உள்ளங்கள் வெளிநாட்டில் இருந்துவந்து போராளி மாவீரர் குடும்பங்களிற்கு உதவி புரிந்துவிட்டு போகிறார்கள்,இவனைப்போல கேவலங்கெட்ட வக்கிரபுத்தியுடையவனை நான் காணவில்லை.என்ன செய்வது கத்தினால்கூட பெண்ணை தப்பாக பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், என்னைத்தான் தப்பாக கதைப்பார்கள்,இந்த கல்நெஞ்சம் கொண்டவனிடமிருந்து விடுபட போராடும்போராடிக்கொண்டிருக்கும்போதே வகுப்பு முடிந்து என் இளைய மகன் வந்திருந்தான்,கையில்கிடைத்த பூவாசால் எறிந்ததில் வெளிநாட்டுகாறனுக்கு மண்டையும் உடைந்துவிட்டது,அந்தகோபமே அவன் என்னை மேலும் பலவந்தபடுத்தகாரணமாக அமைந்துபோனது,எனது மகனைக்கண்டதும்தான் என்னை தள்ளிவிட்டு வெளியில் ஓடினான், எனக்கு என்னசெய்வதென்றே தெரியாமல் போனது,அம்மா என்று ஓடிவந்த மகனை விலத்திவிட்டு அறைக்குள் சென்றுகதவை தாளிட்டேன். இளையமகன் வெளியில் நின்று அம்மா கதவை திறவுங்கம்மா பிளீஸ் அம்மா,கதவதிறவுங்கம்மா என்று கதறுவது கேட்டகிறது,அவன் பயந்துபோயிருக்கிறான் இன்று நான் கூறும் பதிலே அவனது எதிர்காலத்திற்கு உதவும், அம்மாவை கொடுமைப்படுத்த நினைத்தவனை பழிவாங்கவேணும் என்று என்மகன் நினைக்ககூடாது,வெளிநாட்டுக்காறனின் மாடு வீட்டில் நின்றால் என்மனம் இந்த நினைவில் இருந்துமீளாது,பணம் இருக்கின்றது என்பதற்காக ஒரு விதவையை அனுபவிக்க துடிக்கிறானே , அதுவும் ஓர் மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காது. இவளவு கீழ்த்தரமான சிந்தனையுடன் என்னை அணுகியவன் இன்று எனக்கு செய்ததுபோல்தானே இந்த பணத்தை காட்டி நாளை இன்னொரு குடும்பத்திற்கு செய்யப்போகிறான்..? கடவுளே என்கணவன் தாய் மண்ணைத்தானே முதலாவதாகவும் உயிராகவும் நேசித்தான். தன்மனைவி பிள்ளைகளை இரண்டாவதாகவே நேசித்தவன்,எம்மக்கள் சந்தோசமாக வாழவேணும் என்று போராடிமடிந்துபோனவன் ஆனால் இன்று அவன் குடும்பத்திற்கு மற்றவர்கள் தரும் கௌரவம்…..? மாட்டை காணும்பேதெல்லா அந்த காமுகனின் நினைவுதான்வரும்,நாங்கள் ஏழைகள்தான் ஆனால் இவர்களைப்போல கோழைகள் இல்லை. அதனால போய் மாட்டை அவிட்டு எங்காவது விட்டிட்டுவந்து என் செல்லமகனிற்கு நல்ல தெளிவான பதிலைக்கொடுக்கவேண்டும் என்று கதவைத்திறந்துவெளியே போகிறேன் தெளிந்த சிந்தனையோடு.

தமிழனின் உணர்வுக்கு ஆதரவு தராத யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம் கடைகள்.

வடக்கு எங்கும் தமிழர்கள் கடையடைப்பு செய்து போராட்டம் செய்யும் போது யாழ்ப்பாணத்தில் இயங்கும் முஸ்லீம் கடைகள்.
வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் நடைபெறவேண்டிய போராட்டம் கிழக்கில் முஸ்லீங்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்பதால் வடக்குடன் மட்டும் போராட்டம் நடைபெற்றாலும், யாழ்ப்பாணத்தில் கடையை திறந்து குழப்பும் முஸ்லீம்கள். இதனை யாழ் வர்த்தகர் சங்கம் மிகயாக கண்டிக்க வேண்டும் இப்படியான குழப்பவாதிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.




வன்னி நாட்டாமை சிறிதரனின் ஒட்டுக்குழுக் காவாலிகளின் திருவிளையாடல்கள் (Video)

வன்னி நாட்டாமையாகச் செயற்படும் சிறீதரன் தற்போது மிகக் கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன் தனக்கென போதைப்பொருள் பாவிப்பவர்களையும் ஆதரவாளர்களாக வைத்திருந்து அவர்களுக்கு போதைப்பொருட்களைக் கொண்டு தனது அடிமைகளாக்கி பலரையும் அச்சுறுத்திவரும் அதிர்ச்சித் தகவல்கள் பரவலாக கிளிநொச்சியில் வெளியாகி வருகின்றன. இந் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் போராட்டத்தின் போது சிறிதரனின் அடியாட்கள் குறித்த போராட்டத்தைக் குழப்பியதுடன் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த போதைப்பொருள் காவாலிகளின் புகைப்படங்கள் இதோ....






மனுசி போய்ச்சேர்ந்திட்டுது… பாவம்! கணபதியப்புவின் காதலர் தினம்!! (Video)

தம்பியவை… தங்கச்சியவை… நல்ல சுகமாக இருக்கிறியளோ…. வயசு
போட்டுதுதானே… என்ரைபாடும் அப்பிடியும் இப்பிடியும்தான்… என்ரை மனுசி
நெடுகச் சொல்லும்

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.