திங்கள், 25 பிப்ரவரி, 2019

வன்னி நாட்டாமை சிறிதரனின் ஒட்டுக்குழுக் காவாலிகளின் திருவிளையாடல்கள் (Video)

வன்னி நாட்டாமையாகச் செயற்படும் சிறீதரன் தற்போது மிகக் கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன் தனக்கென போதைப்பொருள் பாவிப்பவர்களையும் ஆதரவாளர்களாக வைத்திருந்து அவர்களுக்கு போதைப்பொருட்களைக் கொண்டு தனது அடிமைகளாக்கி பலரையும் அச்சுறுத்திவரும் அதிர்ச்சித் தகவல்கள் பரவலாக கிளிநொச்சியில் வெளியாகி வருகின்றன. இந் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் போராட்டத்தின் போது சிறிதரனின் அடியாட்கள் குறித்த போராட்டத்தைக் குழப்பியதுடன் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த போதைப்பொருள் காவாலிகளின் புகைப்படங்கள் இதோ....






மனுசி போய்ச்சேர்ந்திட்டுது… பாவம்! கணபதியப்புவின் காதலர் தினம்!! (Video)

தம்பியவை… தங்கச்சியவை… நல்ல சுகமாக இருக்கிறியளோ…. வயசு
போட்டுதுதானே… என்ரைபாடும் அப்பிடியும் இப்பிடியும்தான்… என்ரை மனுசி
நெடுகச் சொல்லும்

நீதிமன்றால் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவன மோசடிக்கு யாழ் மேயரும் உடந்தையா??

வடபகுதியில் உள்ள பாமர மக்கள் தொடங்கி படித்த மக்கள் வரை மிகவும் நுட்பமான முறையில் ஏமாற்றி வரும் பிரமிட் எனும் பணம் கொடுக்கல் வாங்கல் நிறுவனமாக குளோபல் லைப்ஸ்ரைல் லங்கா நிறுவனம் யாழில் ஒரு கிளை திறக்கவுள்ளதாகவும் அதற்கு யாழ் மாநகரமேயர் ஆனோல்ட் தலைமைதாங்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் 5 ஆயிரம் ரூபாக்கும் குறைவான மிகக் குறைந்த பெறுமதியான பொருட்களை ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்து அந்தப் பொருட்களை வாங்குபவர்களை மேலும் இருவரை தமது பொருட்களை வாங்கச் செய்தால் அதற்கு புள்ளிகள் தருவதாக கூறி மிக மோசமாக பலரையும் ஏமாற்றி வருகின்றது.
குறிப்பாக இந்த நிறுவனம் சமூக அந்தஸ்து மிக்கவர்களை குறி வைத்து  அவர்களை தமது வலையமைக்குள் உள் வாங்கச் செய்து அவர்கள் ஊடாக ஏனையவர்களையும் மிகக் கேவலமான முறையில் ஏமாற்றி வருகின்றது. இந்த நிறுவனத்தில் ஒருசில பிரதேசசெயலாளர்கள், சில சட்டத்தரணிகள், மற்றும் ஒரு சில வைத்தியர்கள் பங்காளிகளாக இருக்கின்றார்கள் எனவும் அவர்களை முன்னிலைப்படுத்தியே குறித்த நிறுவனம் ஏனைய அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றது எனவும் இந்த நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஒரு போலி நிறுவனத்தை யாழ் மாநகரசபை மேயர் திறந்து வைப்பதன் பின்னணி தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கந்தர்மடத்தில் திறக்கப்படவுள்ள குறித்த நிறுவனத்தின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் தாயார் இறந்த கவலையில் தற்கொலை செய்த 21 வயதான யுவதி!!

தாயார் இறந்த சோகம் தாளாமல் மகளான இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடியில் இன்று (25) இந்த சம்பவம் இடம்பெற்றது.

தற்கொலை செய்த யுவதியின் தாயார் நான்கு நாட்களின் முன்னர் உயிரிழந்திருந்தார். அதனால்
மனமுடைந்திருந்த யுவதி, இன்று காலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைதடியை சேர்ந்த கணேசலிங்கம் அருட்சிகா (21) என்பவரே தவறான முடிவெடுத்து உயிரை
மாய்த்துள்ளார்.

யுவதியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் போராட்டம் சிறிதரன் குழுவினரால் குழப்பப்பட்டது!!!

காணாமல் போனோருக்கு நீதி கோரி இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பெரும் கரும் புள்ளியாக, தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நடந்து கொண்ட மோசமான சம்பவம் அமைந்துள்ளது. போராட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டது மட்டுமல்ல, பிரதேசசபை உறுப்பினர் தாக்கப்பட்டது, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது என, கேவலமான ரௌடித்தனத்தில் இன்று கிளிநொச்சி தமிழரசுக்கட்சியின் “கடைநிலை“ உறுப்பினர்கள் ஈடுபட்டனர். அனைத்து தரப்பும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, காணாமல் போனோரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை வலுப்படுத்த, ஒன்று திரள வேண்டிய களத்தை, சின்னத்தனமான அரசியல்களமாக மாற்றியுள்ளனர். இன்றைய தமிழ் தலைவர்கள், கட்சிகள் யாருமே தமிழர்களின் கோரிக்கையை வென்றெடுக்க வல்லவர்கள் கிடையாது. ஒரு இடைமாறு காலகட்டத்தின் அரங்கில் முன்னிலைக்கு வந்துள்ளவர்கள். காணாமல் போனவர்கள், அரசியல்கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகளிடம் பொறுப்பு இருந்த காலமொன்றிருந்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி அவர்களால் அந்த இலக்கை நோக்கி நகரவோ, அதை வெற்றிபெற வைக்கவோ முடியவில்லை. ஆகவேதான், இப்பொழுது மக்கள் போராட்டங்கள் நடக்கின்றன. மக்களே தமது கோரிக்கைகளை முன்வைத்து, போராடுகிறார்கள். இந்த மக்கள் போராட்டங்கள் தனியே சிங்கள அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை மட்டும் வெளிக்காட்டவில்லை. மறுவளமாக, கையலாகாத நமது தலைமைகளின் முகத்தையும் வெளிக்காட்டுகிறது. இந்த நிலைமையில், இன்று குழப்பம் செய்தவர்கள் அரசியலை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள்? மணவீட்டில் மாப்பிள்ளையாகவும், மரணவீட்டில் சடலமாகவும் கிடக்கும், வெறும் தேர்தல்… கட்சி அரசியலையா நடத்துகிறார்கள்? அரசியலென்று அதையா புரிந்து வைத்திருக்கிறார்கள்? *இன்று நடந்தது என்ன?* கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பேரணி ஆரம்பித்ததும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வரிசையில்- போராட்டத்தை தலைமை தாங்கி செல்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் அதன்பின்னால் செல்வதாகவே ஏற்பாடு. ஆனால் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாமல்- ரௌடிகளை போல- முன்வரிசைக்கு வந்தனர். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்காக முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பெற்று, ஒலிபெருக்கியை பொருத்தி, போராட்டம் குறித்து நேற்று கிளிநொச்சி முழுவதும் அறிவிப்பதற்கான ஏற்பாட்டை சமத்துவம் சமூக நீதிக்கான அமைப்பினர் செய்திருந்தனர். போராட்டம் ஆரம்பித்ததும், அந்த முச்சக்கரவண்டியை, காணாமல் போனோரின் உறவினர்களான பெண்களிடம் கையளித்தனர்- நீங்களே அறிவிப்பையும் செய்யுங்கள் என. அந்த முச்சக்கரவண்டி தமது எதிர்தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை அறிந்திருந்த தமிழரசுக்கட்சியினர், கை ஒலிவாங்கிகளை தயாராக கொண்டு வந்திருந்தனர். ஏற்கனவே காணாமல் போனோரின் உறவினர்கள் அறிவித்தல் செய்ய, அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக, தமிழரசுக்கட்சியினர் அறிவித்தல் செய்தார்கள். காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம் என, காணாமல் போனோரின் உறவுகள் கோசமிட, அதற்கு போட்டியாக, காணாமல் போனோர் அலுவலகம் வேண்டுமென தமிழரசுக்கட்சியினர் கோசமிட்டனர். ஏற்பாட்டு குழு தலைவரான பாதிரியார் பலமுறை ஒலிவாங்கியை பெற்று, தமிழரசுக்கட்சியினரை பின்னால் செல்லுமாறும், காணாமல் போனோரின் உறவினர்களை முன்வரிசையில் விடுமாறும் கேட்டுக் கொண்டார். அதற்கு பலனில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த, ரெலோ அமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன், அந்த முச்சக்கரவண்டியில் ஏறி ஒலிவாங்கியை பெற்று அறிவித்தல் விடுத்தார். பேஸ்புக்கில் பதிவிட வேண்டுமென்பதற்காக முன்வரிசைக்கு வந்து, போராட்டத்தை குழப்பாமல், காணாமல் போனோரின் உறவினர்களை முன்வரிசையில் விடும்படி கேட்டார். அவர் கேட்டது, தமிழரசுக்கட்சியினருக்கு எரிச்சை ஏற்படுத்த, நான்கைந்து பேர் முச்சக்கரவண்டியை சூழ்ந்து, அவரை கீழே இழுத்து தாக்கினார்கள். அதில் தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை தவிசாளர் ஒருவரும் உள்ளடக்கம். இன்றைய பேரணி முடியும் வரை, அடிக்கடி மதுசுதனுடன் அந்த தவிசாளர் உள்ளிட்ட கும்பல் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றதை அவதானிக்க முடிந்தது. காணாமல் போனோரின் உறவினர்களான பெண்கள் அறிவிப்பில் ஈடுபட்டு வந்த முச்சக்கர வண்டியின் ஒலிபெருக்கி வயரை தமிழரசுக்கட்சி பிரதேசசபை உறுப்பினர் சத்தியானந்தன் அறுத்தெறிந்தார். பேரணியை குழப்பாமல் பின்னுக்கு செல்லுங்கள் என ஏற்பாட்டு குழு தலைவரான பாதிரியார் மன்றாட்டமாக தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் பலமுறை கேட்டும், அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். பிரதேசசபை உறுப்பினர்களான வட்டிக்கடை ஜீவன், குமாரசிங்கம், சத்தியானந்தன் ஆகிய பிரதேசசபை மக்கள் பிரதிநிதிகளும் அந்த குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலில் நின்றார்கள். அவர்களை விட, கறுப்பு பூனைகளான பல ஆதரவாளர்களும் நின்றார்கள். எவ்வளவு பொறுப்பான… அரசியல் விழிப்புணர்வுள்ள மக்கள் பிரதிநிதிகள் நமக்கு கிடைத்துள்ளனர்! இந்த சம்பவங்களை படம்பிடித்த ஊடகவியலாளர்களுடனும் “அரசியல் ரௌடிகள்“ மல்லுக்கட்டினர். பல்வேறு இடங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அனைத்து ஊடகவியலாளர்களுடனும் மல்லுக்கட்டினர். முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவரை தாக்கினார்கள். மற்ற ஊடகவிலாளர்களை பார்த்து, “எமது செய்திகளை போட்டி, பிச்சையெடுத்து பிழைப்பவர்கள்தானே நீங்கள்“ என அநாகரிகமாக திட்டினார்கள். பேரணி முடிவடையும் வரை ஊடகவியாளர்களை திட்டிக் கொண்டே வந்தது அந்த கும்பல்.

குறித்த கும்பல் சிறிதரனின் அடிவருடிகள் என்பது குறிப்பிடத்தக்து. ஜீவன் எனும் குறித்த பிரதேசசபை உறுப்பினர் வட்டிக்கு பணம் கொடுத்து நாட்டாமை வேலை செய்வதுடன் பல பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

காணாமல் போனவர்களுக்காக கிளிநொச்சியில் திரண்ட தமிழ் உறவுகள்!! பதற்றம்(Video)!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (25) காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம், தற்போது பேரணியாக டிப்போ சந்தி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி ஊடான போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பிதமடைந்தது. இதையடுத்து, பேரணியின் நகர்விற்கு ஏற்க, மாற்று பாதையூடான போக்குவரத்து ஒழுங்குகளை பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
காணாமல் போனவர்களிற்கான பணியகத்தை நிராகரிக்கிறோம், ஐ.நாவில் காலஅவகாசம் வழங்கக்கூடாது, காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசு பொறுப்பக்கூற வேண்டும் என வானதிர கோசங்கள் எழுக்கப்பட்டன.
Image may contain: 4 people
Image may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, people riding horses, people standing and outdoorImage may contain: 3 people, people standing, people walking, crowd and outdoorImage may contain: 6 people, people standing, crowd, child and outdoorImage may contain: 3 people, people standing, crowd and outdoorImage may contain: 2 people, crowd and outdoorImage may contain: 6 people, people standing and outdoorImage may contain: 3 people, people smiling, crowd and outdoorImage may contain: 10 people, people smiling, people standing and outdoorImage may contain: 5 people, outdoorImage may contain: 1 person, standing, crowd and outdoor

வடக்கு முடக்கம்!! யாழ் திருநெல்வேலிச் சந்தையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.

திருநெல்வேலிச் சந்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மீறி வர்த்தகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

அதேவேளை நகர்ப்பகுதி கடைகளும் மூடப்பட்டுள்ளன. வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
Image may contain: outdoorImage may contain: one or more people, people walking, people standing and outdoorNo photo description available.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை தொடர்ந்து இடம்பெவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.

அத்தோடு, மார்ச் 20ஆம் திகதி, இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், அதன் பிரதான பொறுப்பை பிரித்தானியா வகிக்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றை பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்தத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.

இதேவேளை ஜெனீவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தையும் மற்றும் தமிழர் தரப்பினரையும் பிரிதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (25.02.2028)


மேஷம்
இன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5

ரிஷபம்
இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். அதற்கான ஊதியமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்
இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும். சட்டதிட்டங்களுக்கும், நீதி நேர்மை நியாயத்திற்கு கட்டுபட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். ஆனாலும் மனோ தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3

கடகம்
இன்று தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7

சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9
ராசி பலன்கள்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்
இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்
இன்று அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

தனுசு
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனக்கவலை தீரும். சமயோசித்தம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மகரம்
இன்று கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். மன நிம்மதி குறையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். போட்டிகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ஆவா குழுவின் ஆரம்பகாலத்தலைவர் ‘சன்னா‘ வீ்ட்டின் மீது நடந்த தாக்குதல்!!(video)

ஆவா குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் தற்போது தலைமறைவாக உள்ளவருமான சண்ணா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா குழு தாக்குதல் நடத்தியுள்ளது. மானிப்பாய் கட்டப்பாழி லேனில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இன்று மாலை நடத்தப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பித்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image may contain: one or more peopleImage may contain: one or more peopleImage may contain: one or more peopleImage may contain: people sitting and motorcycleNo photo description available.No photo description available.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

இலங்கைக்கு மூட்டை தூக்குபவர்களால் பெரும் ஆபத்தாம்!! கூறும் பெண் யார்?

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் கொள்கலன்களில் சுமார் 20 வீதமானவை உண்மையான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரப்படுவதில்லை என சுங்கத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வரும் வர்த்தகர்கள் வரப் தங்களது பெயர்களில் கொள்கலன்களை கொண்டு வராமல், வேறு நபர்களின் பெயர்களில் கொள்கலன்கள் கொண்டு வரப்படுவதாக சார்ள்ஸ் கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மூட்டை தூக்குபவர்கள், வாடகை வாகனச் சாரதிகள், காவலாளிகள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பெயர்களிலேயே கொள்கலன்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இந்த கொள்கலன்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளின் போது யாரின் பெயரில் கொண்டு வரப்பட்டதோ அவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், மிளகு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் வேறு நபர்களின் பெயர்களில் கொண்டு வரப்பட்டிருந்தது.

கொள்கலன்களை மெய்யான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டை அச்சுறுத்தும் போதைப்பொருள் – ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

தூக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தும் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அதிக அளவில் காணப்படுகின்றது.
தற்போது கிடைக்கபெற்றுள்ள புள்ளிவிபரங்கள் படி, இந்த ஆண்டில் தற்போது வரையான காலப்பகுதியில் 520 கிலோ 762 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 6651 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று 294 கிலோ 49 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்டமையும் அடங்குகின்றது.
இதேவேளை கடந்த ஆண்டு மட்டும் 732 கிலோ 129 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 40,998 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு ஆண்களையும் ஒப்பிடுகையில் ஒரு பெரும் தொகை போதைப்பொருள் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஆண்டும் அதிகளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூநகரி சங்குப்பிட்டியில் நடந்த கோர விபத்து!! இளைஞன் பலி!!(Photos)


பூநகரி சங்குப்பிட்டி வீதியில் நடந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அதி வேகமே உயிரிழப்புக்குக் காரணம் எனவும் தெரியவருகின்றது. 
No photo description available.
Image may contain: motorcycleImage may contain: motorcycle

பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பு கொள்ளுபிட்டிய பகுதியில் பாரியளவிலான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்களிடமிருந்து, 294 கிலோ 49 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இலங்கையில் கைப்பற்றப்பட்ட மிகப் பாரியளவிலான கொக்கேய்ன் தொகை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் இரண்டாயிரத்து 945 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தால் தற்போதும் தமிழர்கள் சித்திரவதை..!!!!

சித்திரவதைத் தொடர்பில் ‘சகிப்புத்தன்மை முற்றிலுமின்மை’ எனும் கொள்கை குறித்து ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படையினரால் தொடர்ச்சியாக தமிழர்கள் சித்திரவைதக்கு உள்ளாவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சித்திரவதையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரான, கடந்த 2017 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் தடுத்துவைகக்ப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளான ஸ்ரீலங்கா பிரஜைகள் தொடர்பில் குறித்த அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட 16 வைத்திய அறிக்கைகள் இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த வைத்திய அறிக்கைகளைக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைய, தடுத்துவைக்கப்பட்ட மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட அனைவரும் தமிழர்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலக்குவைக்கப்பட்ட மற்றும் தடுத்துவைகக்ப்பட்ட இவர்களில் அதிகமானோர் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கை பின்னணியையும் தற்போது வெளிக்காட்டாதிருந்த போதிலும் யுத்தத்திற்குப் பின்னர் ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் வசம் சரணடையாமை காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரச அதிகாரிகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகப்பட்டவர்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோடு இவர்ளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது வேறு சட்டங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் எதவும் பதிவு செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரவதைக்கு உள்ளான நால்வர் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையோர் வட மாகாண மாவட்டங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச அதிகாரிகள் குறித்த நபர்களிடம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச விரோத நடவடிக்கைகள் தொடர்பில் சித்திரவதை ஊடாகவே ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு உபகரணங்களைக்கொண்டு தாக்குதல் எரியூட்டுதல் உடலின் குறிப்பான இடங்களில் சித்திரவதை செய்தல் மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்துதல் அத்துடன் அச்சுறுத்தல் மற்றும் அவமானப்படுத்தல் போன்றன உள்ளிட்ட உடல் ரீதியான மற்றும் உள ரீதியான சித்திரவதையினை அவர்கள் அனுபவித்துள்ளனர்.
இதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகியிருப்பதோடு மேலும் அனேகமானோர் பாலியல் சித்திரவதைக்கும் ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றம் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவின் புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உறுதிமொழியினை வழங்கியதோடு இது நல்லிணக்கத்திற்கான இன்றியமையாத அம்சமாகவும் திகழ்ந்தது.
எனினும் ஸ்ரீலங்காவில் நல்லிணககம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடந்த 2015 செப்டம்பரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசானது உறுதியளித்த வாக்குறுதிகளை தொடர்ந்தும் உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு குறித்த சித்திரவதைகள் தொடர்பிலான ஆதாரங்கள் ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நல்லிணக்க செயற்பாடுகளுக்கான கடப்பாட்டினைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டியதோடு எந்தவொரு முன்னேற்றமும் துரித கதியில் தலைகீழாகத் திரும்பக்கூடியது என்பதனையும் நிரூபித்துள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கமானது வாய்மொழி உத்தரவாதங்களுக்கும் அப்பால் செல்லவேண்டியுள்ளதோடு, தனது பொறுப்புக்கூறல் தொடர்பில் நாட்டு மகக்ளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அது வழங்கிய உறுதிமொழிகளை அமுல் படுத்தும் நோக்கில் ஒரு கால வரையறையினுள் தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு உடன்படவேண்டியுள்ளது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் பற்றிய நியமங்கள் மற்றும் உள் நாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழான அதன் கடப்பாடுகள் மூலம் ஒரு யதார்த்தபூர்வ சித்திரவதை தொடர்பில், சகிப்புத்தன்மை முற்றிலுமின்மை’ பற்றிய அதன் கொள்கையினை உருவாக்குதல் வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சித்திரவதைத் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கடமையிலிருந்து இடைநிறுத்தி வைப்பதோடு அத்தகைய நபர்கள் அரசாங்கத்தினுள் அல்லது இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புச் சேவைகளினுள் எந்தளவு அதிகாரம் மிக்கவர்களாகவோ மிக்கவர்களாக காணப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணையினை ஆரம்பித்து வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சகிப்புத்தன்மை முற்றிலுமின்மை பற்றிய கொள்கையினை எடுத்துக் கூறும் வகையில் சர்வதேச ரீதியில் பொதுமக்களுக்கான தகவல் பிரச்சாரம் ஒன்றினை ஆரம்பித்து வைப்பதோடு சித்திரவதையிலிருந்து உயிர் தப்பியவர்கள் புனர்வாழ்வு மற்றும் பொறுப்புக்கூல் போன்றன பற்றிய தகவல்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்தான தகவல்களையும் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட எந்தவொரு நபரும் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட பிரதிநிதிகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சுயாதீன வைத்தியப் பரிசோதனைகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அதன் பணிப்பாணையினை வினைத்திறனுடன், நாடு முழுவதும் முன்னெடுக்க முடிவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அதற்குப் போதுமான நிதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் குறித்த கடப்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவானததொரு கால வரையறையினைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட மனித உரிமைகள் சபைத் தீர்மானம் ஒன்றின் ஊடாக குறித்த கடப்பாட்டினை மீள வலியுறுத்த வேண்டும் எனவும் சித்திரவதையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றதாம் - பௌத்த பிக்குவின் விளக்கம் இதோ!!

சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகில் காணப்படும் சமயங்கள் அனைத்தும் இந்தியாவிலே ஆரம்பிக்கப்பட்டன.

புத்த பெருமானின் பிறப்பு சைவ சமயமாகும். முதலாவதாக அவர் வழங்கிய போதனை இந்தியாவிலே வாழ்ந்த சைவர்களுக்காக வழங்கப்பட்ட போதனையாகும்.

அந்தக் காலத்தில் உலகத்தில் பௌத்த மதம் தோற்றம் பெற்றிருக்கவில்லை. சிவனுக்கு பூஜை செய்த 5 பேர் புத்த பெருமானிடம் போதனை பெற்ற பின்னர்தான் அவர்கள் துறவறம் சென்றுள்ளார்கள். எனவே சைவ சமயமும் பௌத்த சமயமும் சகோதரர்கள் போன்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் கோயில்கள் அகற்றப்பட்டு, பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாய்போன்று மோப்பம் பார்க்க முடியாதாம்

நாடாளுமன்றத்துக்குள் கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்துவோர் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்ய முடியும் என்றும் நாய் போன்று மோப்பம் பார்த்து கூற முடியாது எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் போன்று சிலர் நாடாளுமன்றத்துக்குள் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அமைச்சரும் கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என்றும் அது தொடர்பில் நாய் போன்று மோப்பம் பார்த்து கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
சந்தேகம் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

யாழில் மூதாட்டி அடித்து கொலை! சகோதரர்கள் இருவருக்கு ஏற்பட்ட கதி!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பெண்மணி ஒருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கடந்த 6 மாதத்துக்குள் உரும்பிராய் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மகனைத் தேடிச் சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர்களான மூவரை பொலிஸார் தேடி வந்தனர்.

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையில், பிரதான சூத்திரதாரிகளான இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குள் நடமாடுவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வடகிழக்கில் சிங்கள வைத்தியர்களின் இரகசிய இனவழிப்பு ஆயுதம்

வடகிழக்கில் திட்டமிட்ட முறையில் இரகசியமாக இலங்கை சிங்கள வைத்தியர்கள் தமிழர்களுக்கு எதிரான இன வழிப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வருவதை எமது ஊடகம் கண்டறிந்துள்ளது. அதனை பகிரங்கப் படுத்துவதனூடாக மட்டுமே எமது மக்களை ஓரளவேனும் பாதுகாத்துக் கொள்ள கூடியதாக இருக்கும் தவறின் இலங்கையில் தமிழினம் இன்னும் 100 ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் அதனுடன் தொல் வரலாற்றை கொண்ட தமிழும் இலங்கையிலிருந்து அழிந்துபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் வடகிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் கட்டாய கருத்தடைகள், கருத்தடை ஊசிகள், லூப் முறை என்பன மேற்கொள்ளப்பட்ட போதும் அவை பெரியளவிலான வெற்றியை தராததால் தற்போது ஒரு புதிய உத்தியை பயன்படுத்துகின்றனர். இது கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதே மேலும் அதிர்ச்சியான செய்தி.

அதாவது தமிழ்மக்களின் வாக்கில் பதவிக்கு வந்த அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் தற்போதய அரசும் இயங்குகின்றது என்ற போதும் இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்கின்றது என்றால் தமிழர் தரப்பு சிங்கள நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளது என்றோ அல்லது கூட்டமைப்பின் ஆசியுடன் தான் நடைபெறுகிறதோ என்று கருத இடமுண்டு.

காரணம் கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் , மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ணவின் நண்பருமாகிய வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களிடம் யுத்தத்தில் அழிந்த கிளிநொச்சியில் கட்டாய கருத்தடை நடக்கின்றது அதனை தடுத்து நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்த போது கருத்தடை செய்வது அவரவர் சுதந்திரம் தடுக்க முடியாது என பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவித்து மக்களின் மத்தியில் கடும் எதிர்ப்பினை சம்பாதித்திருந்தார்.

இந்த நிலையில் சிங்கள வைத்தியர்கள் VOP ஆக உள்ள வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் குழந்தை பேறிற்கு செல்லும் இளம் தமிழ் பெண்களை ஒரு குழந்தையுடன் இரகசியமாகவும், வற்புறுத்தலுடனும் ஜடே முறையில் கருத்தடை செய்கின்றனர். இது தமிழர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல்.

அண்மையில் வவுனியா ஈச்சங்குளம் மற்றும் கிடாச்சுரியை சேர்ந்த இரு இளம் பெண்களுக்கு வவுனியா வைத்திய சாலையின் சிங்கள VOP இரு பெண்களையும் அச்சுறுத்தி இச் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

ஜடே முறை

ஜடே முறை என்பது பெண்ணின் முழங்கைப் பகுதியில் உள்ள நரம்புப் பகுதில் குழாய் போன்ற ஒரு பொருளைப் பொருத்துதல். இதன் பின்னர் அதனை அகற்றும் வரை மீளக் கருத்தரிக்க முடியாது. இதனை இளம் பெண்களுக்கு அவர்களின் அனுமதியில்லாது வற்புறுத்தலில் பொருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இவ்விடயத்தில் அரசியல்வாதிகள், சமூக நலன் விரும்பிகள் , ஊடகவியலாளர்கள் தலையிட்டு இவற்றை வெளிக் கொண்டு வந்து தமிழின அழிவை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்

சனி, 23 பிப்ரவரி, 2019

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதுமா இந்தியா? - விராட் கோலி பதில்!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து மனம் திறந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலைப்படையினர் நடந்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஸி-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் தாக்குதல் தொடர்பாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு இந்திய அளவில் பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. தவிர, உலக நாடுகளும் தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தன. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 200 சதவிகிதம் வரி விதித்து மத்திய அரசு அதிரடி காட்டியது. மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடைபெறும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று, ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பி.சி.சி.ஐ. அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முதலாவது டி20 கிரிக்கெட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்க வந்த கேப்டன் கோலியிடம் செய்தியாளர்கள் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து கேட்டனர். அதற்கு அவர், ``பயங்கரவாத தாக்குதலில் வீரரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் துணை நிற்போம். இந்திய அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை நாங்கள் மதிப்போம்'' என்றார்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.