முன்னாள் போராளி ஒருவருக்கு பிரதேச செயலகத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட வீட்டுத்திட்டம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்கழுவில் முன்னாள் போராளி ஒருவர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

ஆலங்குளம் கிராம அலவலகர் பிரிவு துணுக்காய் பிரதேச செயலகப்பகுதியிலுள்ள முன்னாள் போராளியான சுப்பிரமணியம் குகதாஸ் துணுக்காய் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து கிடைத்த உரிமை கோரப்படாத பொறுப்பற்ற கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து பிரதேச செயலாளரினால் தனக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எனக்கு வழங்கவேண்டிய வீட்டுத்திட்டத்தில் கிராம அலவலகர் மற்றும் பிரதேச செயலாளரினால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கான வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து சாதகமான பதில் ஒரு வாரத்திற்குள் கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை உள்நாட்டு அலுவலக அமைச்சு மற்றும் மாவட்ட செலயகத்தின் முன்னால் மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னாள் போராளி மேலும் தெரிவித்துள்ளார்.