புலம்பெயர் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலம்பெயர் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மார்ச், 2019

அவுஸ்ரேலியாவுக்குப் போய் தமிழ்ப் பெண் நடாத்தும் கேவலத் திருவிளையாடல் (Video)

வுஸ்ரேலியாவில உள்ள நம்ம தமிழ் அக்கா சொல்லுவது சரியா?

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber




60வயது ஜேர்மன் தமிழ்காதலனிடம் மன்னிப்புக் கேட்டார் ஓடிய காதலி!! யாழில் சம்பவம்!! (Photos)

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் காதலியிடம் ஏமாந்த 60 வயது காதலனை பற்றிய செய்தி சில நாட்களின் முன்னர் வெளியாகியிருந்தது. கல்வியங்காட்டை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர், பேஸ்புக்கில் இளம் பெண்ணொருவரை காதலித்திருந்தார்.

ஆரம்பத்தில் சாதாரண நட்பாக ஆரம்பித்து, பின்னர் காதலனாது. காதலி தன்னை வவுனியாவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தியிருந்தார். பேஸ்புக் காதலிக்காக, காதலன் கமலநாதன் பல இலட்சம் ரூபாவை செலவிட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய தயாரான நிலையில், கள்வியங்காட்டிலுள்ள காதலனின் இல்லத்தில் யுவதியும் வந்து தங்கி நின்றார். பின்னர், காதலன் வழங்கிய பணம், நகைகளுடன் தலைமறைவானார். இது குறித்து காதலன் கமலநாதன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் யுவதி முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், யுவதி தற்போது அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், காதலன் கமலநாதனின் வீட்டுக்கு, அவரிடம் மன்னிப்பு கோர யுவதி நேற்று வந்தார். அவரை அழைத்துக் கொண்டு, பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் கமலநாதன். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் திருமணமானவர் என்பதும், மூன்று குழந்தைகளின் தாயார் என்பதும் தெரியவந்தது. கணவன் காலை இழந்தவர். கமலநாதன் முதல் அனுப்பிய 7 இலட்சம் ரூபா பணத்தில் காணி வாங்கி, கடன்காசு கொடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் அனுப்பிய பணத்தில், லோன் காசு கட்டியதாகவும், தாலியை ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நகை விற்பனை செய்யப்பட்ட இடங்களிற்கு பொலிசார் விசாரணைக்கு சென்றனர். அந்த பெண்ணின் குடும்ப நிலையை அறிந்த கமலநாதன் இரக்கப்பட்டு, வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவிசெய்ததாக அமையட்டும், இந்த பணம் எனக்கு தேவையில்லை, ஆனால் பெண்ணிடமிருந்த தனது சில ஆவணங்களை தருமாறு கேட்டார். எனினும், கமலநாதன் வழக்கு பதிவுசெய்ததன் அடிப்படையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு தாம் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் மூலம், மிகுதி பணத்தையும் பெறலாம் என பொலிசார் குறிப்பிட்டனர். எனினும், கமலநாதன் அதை மறுத்து விட்டார். இன்று மதியம் வரை, குறிப்பிட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை.

வெளிநாட்டுத் தமிழனின் செத்த வீடும் பீசா சாப்பாடும்.. (Video)!! சிரிப்பதற்கு மட்டும் பார்க்கவும்.

பிரான்ஸ் லா-சப்பல் பகுதியில் தமிழ்க் காவாலிகளுக்கிடையில் மோதல்!! ஒருவர் குத்திக் கொலை!!

பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் காவற்துறையினர் வருவதைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்

ஆயினும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காவற்துறையினர் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கபட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டுகுழுக்களுக்கு இடையிலான பழைய குரோதமே இந்த சம்பவத்துக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்மக்களின் வர்த்தக மையமாக கருதப்படும் லா-சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறைச்சம்பவத்தால் பரிஸ்வாழ் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள இளைஞன் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

வியாழன், 7 மார்ச், 2019

சுவிஸில் வாழும் இலங்கையர்கள் பலருக்கு ஆபத்து அமுலாகும் புதிய நடைமுறை!!

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறை குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக, சுவிட்சர்லாந்து நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளின் மூலம், புகலிடம் பெற தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படவுள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு தேவையில்லை என அடையாளம் காணப்படுவோர் உடனடியாக நாடு கடத்தப்படவுள்ளனர். புதிய விதிகளுக்கு அமைய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் முதல் நாளிலிருந்து இலவச சட்ட ஆலோசனையை பெறுவதற்கு உரிமையை பெற்றுள்ளனர். இது அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும். அந்த ஆலோசனைக்களுக்கான விடயங்கள் சுவிட்சர்லாந்து மத்திய அரசிடம் வழங்கப்படும். அற்குமைய புகலிடம் கோருவோருக்கு சட்ட ஆதரவாளர்களால் வழங்கப்படும் சட்ட ஆலோசனைக்களுக்கமைய செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் 140 நாட்களுக்குள் ஃபெடரல் புகலிட கோரிக்கை மையங்களில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் பெருமளவு இலங்கையர்கள் புகலிடம் கோரியுள்ளனர். அவர்களில் பலரின் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதன், 6 மார்ச், 2019

லண்டன் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழன்!! நடந்தது என்ன?

ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளர். 36 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஜெனிவாவிற்கு செல்லவிருந்த நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாகீசன் தங்கவேல் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் பயங்கரவாதிகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எர்ல்ஸ் கோர்ட்டில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்குக் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் இரவு 11 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகீசன் தங்கவேல் சுதந்திரத்திற்கான பறையின் குரல் எனும், இசைக்குழுவின் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்கு சென்ற போதே வாகீசன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வந்த கிளிநொச்சி பொம்பிளை காதலனுடன் ஓட்டம்!! கணவனின் கதறல் இதோ!! (Video)

கடந்த ஓகஸ்ட் மாதம் பிரான்சிலிருந்து வந்து கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியை திருமணம் முடித்துள்ளான் முல்லைத்தீவு இளைஞன். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது இளம் மனைவியை கடந்த மாதம் பிரான்சிற்கு அழைத்துள்ளான். பிரான்ஸ் வந்த மனைவி இரு கிழமையே குறித்த இளைஞனுடன் குடும்பம் நடாத்திவிட்டு அதன் பின்னர் தான் காதலித்து வந்த காதலனுடன் மாயமானதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களையும் தெரிவிக்கின்றார் பிரான்ஸ் இளைஞன்.

 வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber

திங்கள், 4 மார்ச், 2019

அப்பாவி அகதியும்..!! ஐபிசி முதலாளியும்..!!

அப்பாவி அகதி – ஐயா வணக்கம். நான் திருச்சியில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை விடுதலை செய்யுமாறு கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.

ஐபிசி முதலாளி – ஓ! அப்படியா? சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவி அகதி – என்னுடைய கையில் ஐபிசி ஊடகம் இருந்திருந்தால் பத்தாயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருப்பேன் என்று கனடாவில நீங்கள் பேசினதை அறிந்தேன். அப்படியென்றால் எனக்காகவும் கொஞ்சம் குரல் கொடுக்க முடியுமா?

ஐபிசி முதலாளி – எனக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று விருப்பம்தான் தம்பி. ஆனால் அப்பறம் இந்திய உளவுப்படைகாரங்கள் கோவிப்பாங்களே. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தனீங்கள். அகதிகளுக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா?

ஐபிசி முதலாளி- தம்பி நான் ஒரு முதலாளி என்பதை நீர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். போட்ட பணத்தை எப்படி இரட்டி மடங்காக எடுக்கலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அகதிகளுக்கு உதவுவதால் எனக்கு என்ன லாபம்?

அப்பாவி அகதி – என்ன ஐயா இப்படி பேசறீங்க? வன்னியில் உள்ள முன்னாள் போராளிகளை எல்லாம் சந்தித்து உதவி வருகிறீர்கள் என்று கூறுகிறார்களே?

ஐபிசி முதலாளி – அது எனக்கு தரப்பட்ட அஜெண்டா தம்பி. தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக குழப்புறவேலை எனக்கு தரப்பட்டிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! உங்களின் ஊடகத்தை தமிழ் தேசிய ஊடகம் என்கிறாங்களே?

ஐபிசி முதலாளி – தேசிய ஊடகமும் இல்லை. தேசிக்காய் ஊடகமும் இல்லை. அதெல்லாம் என்னை வைத்து பிழைப்பதற்கு என்கூட இருக்கிறவங்கள் கட்டி விடுகிற கதைகள்.

அப்பாவி அகதி – சரி ஐயா. ஒரு சின்ன வேண்டுகோள். உங்களை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக என்ரை மகள் காப்பிலியுடன் ஓடிவிட்டாள் என்று வீடீயோ மட்டும் போட்டிடாதையுங்கோ.

ஐபிசி முதலாளி – சரி சரி பார்க்கலாம்.

வெள்ளி, 1 மார்ச், 2019

யாழ்ப்பாண பெண் வெளிநாட்டில் கள்ளக்காதலனுடன் லீலை!! கணவன் பிடித்த காட்சி (Video)

யாழ்ப்பாண பெண் வெளிநாட்டில் கள்ளக்காதலனுடன் லீலை!! கணவன் பிடித்த காட்சி (Video)

கீழே உள்ள வீடியோவை பார்த்தபின்னர் அதனை  subscribe செய்யுங்கள். 

யூரிப் கணக்கு இல்லை எனின் அந்த கணக்கை திறந்து பின்னர் subscribe செய்யுங்கள்... பார்க்க முடியாத எமது சில வீடியோக்களை நீங்கள் அதனுாடாகப் பார்க்கலாம். 

சிறிதரனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புலம்பெயர் தமிழர்!! காரணம் என்ன?

வெளிநாடு ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனையும் அழைத்துக்கொண்டு பயணம் செய்யவிருந்த கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் சிவஞானத்தை எச்சரித்துள்ள வெளிநாட்டுத் தமிழர்கள்

வெளிநாடு ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனை அழைத்துக்கொண்டு பயணம் செய்யவிருந்த கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் சிவஞானத்தை எச்சரித்துள்ளார்கள் அந்த நாட்டில் வாழும் தமிழர்கள்

. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி அந்தத் தமிழர்கள் ஶ்ரீதரனோடு விரைவில் தொடர்புகொள்ளவுள்ள்தாகவும் இதற்குக் காரணம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மிகவும் நெருக்கமாக பிரதமர் ரணிலோடு தொடர்பில் இருந்து கொண்டு ஏனைய சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலை போடுவதாகவும் தற்போது ஶ்ரீதரன் இந்த வலைக்குள் அகப்பட்டு மிகவும் நெருக்கமாக செயற்படுவதாகவும் அந்த தமிழர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ரணில் சுமந்திரனோடு சேர்த்து ஶ்ரீதரன் சிவஞானத்தையும் அடிக்கல் நாட்டு விழா ஒன்றுக்கு சென்று வைபவத்தில் ஶ்ரீதரனுக்கும் கல் ஒன்றைக் கொடுத்து அதைஅத்திவாரத்தில் வைக்கும் படி வற்புறுத்தியதாகவும் இவ்வாறு நடந்து கொள்வது மனக்காயங்களுக்;கு உள்ளாகியுள்ள தாயக மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் அந்த தமிழர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணமற்போனவர்களின் உறவுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய சில நியாயமான அரசியல் வாதிகளுக்கும் இடையூறு செய்யும் வகையில் பல்கலைக் கழக மாணவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகவும் ,

எனவே ஶ்ரீதரன் சுமந்திரன் ஆகியோரது கபடத்தனமான செயற்பாடுகளை இனிமேல் புலம் பெயர் தமிழர்கள் சும்மா பார்த்துக்கொண்டு இரு;ககமாட்டார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கு தெரியப்படுத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் அவருக்கு தகவல் அனுப்பப்படும் என்று அறியப்படுகின்றது
அப்படி சுமந்திரனையும்; அழைத்துக்கொண்டு அந்த நாட்டுக்கு (கனடா அல்ல) சென்றால் சுமந்திரனுக்கு அவுஸ்த்திரேலியாவில் நடந்தது போலவே இருவருக்கும் நடக்கும் என்று அந்த நாட்டில் இயங்கும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

புதன், 27 பிப்ரவரி, 2019

லஞ்சம் கொடுத்து இலங்கையின் முன்னணி நிறுவனத்தை வாங்கிய புலம்பெயர் தமிழன்!! மைத்திரி சீற்றம்!!

லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்கோ நிறுவனம், 5 மில்லியன் டொலரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்தே, எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (Edirisinghe Trust Investment-ETI) நிறுவனத்தை கொள்வனவு செய்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

தேசிய பொருளாதார சபைக் கூட்டம் நேற்று (26) இடம்பெற்றபோது, ஜனாதிபதி காரசாரமாக இந்த விடயத்தை விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை பெட்கோ என்ற நிறுவனத்தின் ஊடாக, சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு கொள்வனவு செய்ய எந்த அடிப்படையில் அதிகாரிகள் அனுமதியளித்தனர், இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராயப்பட்டதா என சரமாரியான கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை முடிக்க, 5 மில்லியன் டொலர் இங்குள்ள சிலருக்கு பகிரப்பட்டுடதையும், இதில் 3 மில்லியன் டொலரை முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் பெற்ற தகவலையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ETI நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 60 மில்லியன் டொலருக்கு செய்ய பெட்கோ நிறுவனம் கேள்விகோரல் மனு சமர்ப்பித்திருந்தது. ஆனால் உள்நாட்டு நிறுவனம் ஒன்று 61 மில்லியன் டொலருக்கு இதனை வாங்க முன்வந்தது. ஆனால் யாருக்கும் தெரியாமல் 75 மில்லியனுக்கு பெட்கோ நிறுவனத்திற்கே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என ஜனாதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார்.

சுபாஸ் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறப்பதும், தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் முதலிடுவதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக தனியார் உளவு அமைப்பொன்று சில வருடங்களின் முன்னர் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.

ஆதவன் ஊடகக்குழுமம் என்ற ஊடக குழுமத்தை இலங்கையில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.வாங்கியது எப்படி?: கண்டித்த மைத்திரி!

லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்கோ நிறுவனம், 5 மில்லியன் டொலரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்தே, எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (Edirisinghe Trust Investment-ETI) நிறுவனத்தை கொள்வனவு செய்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

தேசிய பொருளாதார சபைக் கூட்டம் நேற்று (26) இடம்பெற்றபோது, ஜனாதிபதி காரசாரமாக இந்த விடயத்தை விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை பெட்கோ என்ற நிறுவனத்தின் ஊடாக, சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு கொள்வனவு செய்ய எந்த அடிப்படையில் அதிகாரிகள் அனுமதியளித்தனர், இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராயப்பட்டதா என சரமாரியான கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை முடிக்க, 5 மில்லியன் டொலர் இங்குள்ள சிலருக்கு பகிரப்பட்டுடதையும், இதில் 3 மில்லியன் டொலரை முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் பெற்ற தகவலையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ETI நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 60 மில்லியன் டொலருக்கு செய்ய பெட்கோ நிறுவனம் கேள்விகோரல் மனு சமர்ப்பித்திருந்தது. ஆனால் உள்நாட்டு நிறுவனம் ஒன்று 61 மில்லியன் டொலருக்கு இதனை வாங்க முன்வந்தது. ஆனால் யாருக்கும் தெரியாமல் 75 மில்லியனுக்கு பெட்கோ நிறுவனத்திற்கே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என ஜனாதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார்.

சுபாஸ் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறப்பதும், தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் முதலிடுவதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக தனியார் உளவு அமைப்பொன்று சில வருடங்களின் முன்னர் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.