ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இன்று தமது சொத்து மதிப்பை வெளியிட்டனர்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உள்ளடக்கம்.

அவரது சொத்து மதிப்பு இங்கு தரப்பட்டுள்ளது. சுமந்திரனின் சொத்து மதிப்பு, நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய விிதமாகவோ, பிரபல சட்டத்தரணிக்குரிய விதமாகவோ அல்லாமல் ஓரளவு எளிமையான சொத்து விபரமாகவே உள்ளது. வயல் நிலம், இரண்டு வீடுகள், 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பிள்ளைகள் பெயரில் சிறிய வைப்பு, இதைவிட, ஹற்றன் நசனல் வங்கியில் 30இலட்சம் ரூபா கடன் என்ற தனது சொத்து விபரத்தை வெளியிட்டுள்ளார்.

சுமந்திரனின் சொத்து மதிப்பு பல கோடிக்கணக்கானது என  சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட பல கோடி சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அனைத்தும் அவரது பினாமி பெயரிலேயே உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.