இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மார்ச், 2019

போதைப் பொருள் மன்னனின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாண வர்த்தகர் துஸ்யந்தன்!! அதிர்ச்சித் தகவல்!!

இந்தத் தகவலை சிங்கள ஊடகமான லங்காதீப வெளியிட்டுள்ளது. மாகந்துரே
மதூஷின் கைதையடுத்து அந்த ஊடகம் வெளியிட்டுவரும் விசாரணை தொடர்பான
அறிக்கையிடலியே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>



<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடை
பாதாளக் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷ் கடந்த ஜனவரியில் டுபாய்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் வைத்து
அவரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.</p>



<p>இந்த நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் முன்னெடுக்கும் தொடர்
விசாரணைகளில் மாகந்துரே மதூஷின் குழுவைச் சேர்ந்த பலர் தென்னிலங்கையில்
கைது செய்யப்படுகின்றனர். நேற்றுமுன்தினம் தி்ங்கட்கிழமையும் அவரது சகா
ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 180 கோடி ரூபா பெறுமதியான 171 கிலோ கிராம்
ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.</p>

செவ்வாய், 12 மார்ச், 2019

மட்டக்களப்பில் தண்ணீரில் அமுக்கிக் கொல்லப்பட்ட விவசாயி!! (Photos)

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள றாணமடு மலையார்கட்டு வயல் பிரதேசத்தில் வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் வயலின் நீர் ஓடும் வாய்காலிவல் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக நேற்று திங்கட்கிழமை (11) இரவு மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனா.

வெல்லாவெளி றாணமடு பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய விவசாயியான கணவதிப்பிள்ளை திருநாவுக்கரசு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவதிப்பிள்ளை திருநாவுக்கரம் அவரது மருமகன் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு தமது வயலுக்கு இரு மோட்டார் சைக்கிளில் சென்று அதனை வயல் பாதையில் நிறுத்திவிட்டு தமது வயல் சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்தபோது அவர்களின் இரு மோட்டார் சைக்கிளை மூவர் கொண்ட குழு தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடிய போது அதில் ஒருவரை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில் மாமனாரின் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் செல்லும் அளவிற்கு இருந்ததையடுத்து அவரை மருமகள் அவரின் வீடு செல்லும்படி தெரிவித்துவிட்டு ஒடமுடியாத நிலையில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை வீதிக்கு கொண்டுவந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்று மோட்டார் சைக்கிளை அங்கு இறக்கி வைத்துவிட்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது மற்றும் மாமானாரின் மோட்டார் சைக்கிளை 3 பேர் கொண்ட குழு அடித்து சேதப்படுத்திதாக முறைப்பாடு தெரிவித்தார்.

இதனையடுத்து மருமகள் மாமனாரின் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீடுதிரும்ப வில்லை என அறிந்த நிலையில் மாமனாரை காணவில்லை என உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தாh.

இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலையில் கிராம மக்கள் பொலிசாருடன் ஒன்றினைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் வயல் பகுதியில் காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் இருப்பதை கண்டுபித்தனர்.

பொலிசார் மேப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் காணாமல் போனவரை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வயலில் நீர் ஓடும் வாய்காலில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள போக்கினுள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சந்தேகத்தில் இன்னொருவர் உட்பட இருவரை கைது செய்ததுடன் குறித்த விவசாயிக்கும் இவர்களுக்குமிடைய இடம்பெற்று வந்த வயல் காணிப் பிரச்சனை காரணமாக விவசாயின் கைகளை கட்டி அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணயில் தெரியவந்துள்ளது .

இதேவேளை மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேர்கொண்டுவருகின்றனர்.
Image may contain: outdoorImage may contain: one or more people, grass, outdoor and nature

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (12.03.2028)

மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி  செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். 

ரிஷபம்: காலை 7.30 மணிமுதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்கமுடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.உறவினர், நண்பர்களால் வியாபாரத்தில்வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்:  ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கக் கூடும். அண்டை, அயலார் சிலரின்செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

கடகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம்முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். வியாபாரத்தில்வாடிக்கையாளர்களை கவர சலுகைகளைஅறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும்  நாள்.  

கன்னி: கணவன்-மனை விக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புது  அத்தியாயம் தொடங்கும் நாள்.   

துலாம்:  காலை 7.30 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு: இதமானப் பேச்சால்எல்லோரையும் கவருவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன்  மனம்  விட்டு  பேசிமகிழ்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து  உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலைமுடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மீனம்: தைரியமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

திங்கள், 11 மார்ச், 2019

சீட்டுக்காசு 2000 ரூபாய் கொடுக்காத விரக்தி!! மட்டக்களப்பில்19 வயது இளம் தாய் துாக்கில் (Photos)

மட்டக்களப்பில் யுத்தகாலத்தில் கிராமபுறங்களில் ஆயுதக்குழுக்கள் ஆட்சேர்ப்பு பீதியில் சிறுவயதில் திருமணம் முடித்தார்கள் அப்பொழுது ஏற்றுக்கொள்ள கூடியதாகயிருந்தது.இப்பொழுதும் சிறுவயது திருமணங்கள் மலிந்து காணப்படுவது குறைந்த பாடில்லை.அதிகமாக சிறுவயது திருமணங்கள் செங்கலடி பிரதேசத்திலுள்ள மயிலவெட்டுவான் ,பாலர்சேனை,ஆயித்தியமலை ,ஈரலகுளம்,வாகனேரி,உறுகாமம் ,பகுதிகளிலே உள்ளது,இப்பகுதி மருத்துவ மாது கர்ப்பணி கிளினிக் நிலையங்களில் உள்ள தரவுகளில் காணலாம்,
எவளவுக்கு சிறுவயது திருமணம் நடைபெறுகின்றதோ அவளவுக்கு விவாகரத்தும் தற்கொலையும் நடைபெறுகின்றது.உரிய வயதில் குடும்ப சுமையை சமாளிக்கு பக்குவம் ,கணவன் மனைவியிடையான புரிந்துணர்வு அற்று காணப்படுகின்றது.
இதனால்தான் இன்று மற்றுமொரு தற்கொலை சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பில் சம்பவம்.

மேசன் தொழில் செய்துவரும் முரளீதரன் என்ற இளைஞன்,
தனது 17 ஆவது வயதிலும், ஜானு என்ற யுவதி தனது ஆவது 15 வயதிலும் திருமணம் முடித்து தற்போது மூன்று வயதுடைய பெண் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய நிலையில்,

குடும்பச்சுமைகளை எவ்வாறு சமாளிப்பதென்றே தெரியாத பருவத்தில், சுமைகளை தலையில் தூக்கி வைத்ததால் ஏற்பட்ட வினையே தற்கொலை.

கணவனின் வருமானத்துக்கேற்ப செலவினை வகுக்க தெரியாத பருவத்தில்,
ஆடைக் கொள்வனவு முதல் இன்னோரன்ன தேவைகளை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி ஜானு,
மாதாந்தம் 2000 /=, 200/=என சீட்டுக்காசி கட்டுவதற்கும் சேர்ந்ததால், நாளடைவில் இவற்றுக்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட தற்கொலைக்கு சென்றிருக்கிறார் என கணவர் முரளிதரன் தெரிவித்தார்.

, மணிவாசகர் வீதி, மாவடிவேம்பு -02,ஐ சேர்ந்த, சிவானந்தம் ஜானு (19) என்ற இளம் தாயே இவ்வாறு.
இன்று (10 /03) காலை 10.00 மணியளவில் தனது வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்தவராவார்.

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and people sittingImage may contain: one or more peopleImage may contain: 1 person, smiling, outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoor

யாழ் பொன்னாலை ஐஸ் தொழிற்சாலைக்கு பன்னாலையில் நீர் எடுப்பதற்கு தடை


 நீர்கொழும்பில் உள்ள கம்பனி ஒன்றினால் பொன்னாலையில் இயக்கப்படும் ஐஸ் தொழிற்சாலைக்கு அளவெட்டி - பன்னாலையில் தண்ணீர் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பிரதேச மக்களாலும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுப்பதால் தமது பிரதேச நன்னீர் வளம் பாதிக்கப்படும் என்பதாலேயே குறித்த நிறுவனம் தண்ணீர் எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நீர்கொழும்பில் உள்ள சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரின் கம்பனியின் பெயரால் பொன்னாலைச் சந்தியில் ஐஸ் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு ஐஸ் உற்பத்தி இடம்பெற்று வருகின்றது. இதற்காக வலி.மேற்கு மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்குள் உள்ள கிணறுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான லீற்றர் நீர் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில், அளவெட்டி – பன்னாலை – நகுலேஸ்வரம் வீதியில் மேற்படி கம்பனியின் பெயரில் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் குழாய்க் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு சமீபமாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் மலசலகூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தங்குவதற்கு ஏற்ற வகையில் சிறிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பவுஸர் வாகனம் சென்று வருவதற்கு ஏதுவாக அங்கு புதிய தார் வீதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கம்பனியின் செலவிலேயே இந்த வீதியும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இம்மாதம் 3 ஆம் திகதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி குழாய்க் கிணற்றில் இருந்த முதன் முதலாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பிரதேச மக்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து அவர்களும் மக்களும் இணைந்து 5 ஆம் திகதி தண்ணீர் எடுக்க முற்பட்டபோது நேரடியாக அங்கு சென்று நீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்தினர். அத்துடன், அவர்களின் ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டன. இதன்போதே அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்தது.

இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கும் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களும் அங்கு சென்று விடயங்கள் தொடர்பாகக் கேட்டறிந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

நிலத்தடி நீர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிமேல் அங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டாம் என குறித்த நபர்களுக்கு மக்களால் அறிவுறுத்தப்பட்டது.

Image may contain: one or more people, tree and outdoorImage may contain: 3 people, people standing, tree, outdoor and natureImage may contain: 5 people, people standing and outdoorImage may contain: one or more people, tree, outdoor and natureImage may contain: 4 people, people standing, outdoor and nature

ஞாயிறு, 10 மார்ச், 2019

கஞ்சா போதையில் இளைஞனை கசக்கிப் பிழிந்த யாழ்ப்பாணப் பொலிஸ்!! நடந்தது என்ன?

மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செத்து விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதில் இளைஞனை தாக்கிய பொலிஸார் மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்தாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.



 

இலங்கையின் ஒரு பகுதியில் கடும் மழை!! மறுபகுதியில் கடும் வெப்பம்!!

நாட்டில் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் வரையில் வெப்பத்துடனான வானிலை நீடிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் வடக்கு கிழக்கில் 15-25 வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி. காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பகுதிகளில் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மன்னார் புதைகுழி முஸ்லீம்களின் மயானமாம்!! இது எப்புடி??

மன்னார் புதைகுழிக்கு முஸ்லீம்கள் உரிமை கோரி தங்களது பல்லாண்டுகால இலங்கை வரலாற்றை கூறி முற்பட்டுள்ளனர் போல தெரிகின்றது. இதோ ஒரு முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்த கருத்துக்கள்.... 

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆதாரங்களுக்கான ஆதார, மையங்களாக,
மீஸான்களும்,சியாறங்களுமே மிஞ்சி உள்ளன, அந்த வகையில் எலும்புக்கூடுகளும், புதைகுழிகளும் கூட வரலாற்றை ஒரே நாளில் புரட்டிப் போடக்கூடிய பலமான ஆதாரங்களாக உள்ளன,

அந்த வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் அண்மைக்காலமாக மன்னார் சதொச பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகள் தொடர்பாக பல ஊகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, ஆனாலும் அவை தொடர்பான காலப்பகுதி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டாலும், சம்பவம் பற்றிய,உறுதியான வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட வில்லை,ஆனால் அவை முஸ்லிம்களுக்குரியதாக உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான ஊக ஆதாரங்களை முன்வைக்கும் பதிவே இதுவாகும்,

#மன்னார்_மாவட்டம்,

மன்னார் மாவட்டம் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்களில் முக்கியமான இடம், அறபுக்கள், இந்திய, ஆபிரிக்க, முஸ்லிம்களும், வியாபாரிகளும் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த இடமாகும், இதன் அத்தாட்சிகளாக இன்றும் அங்குள்ள பெருக்க மரங்களையும், அறபுக்கள் பயன்படுத்திய துறைகளையும், நீண்ட புராதன 40 முழ சியாறங்களான கப்றுகளையும் காண முடியும்,

#மன்னார் #புதைகுழியும், #அறிக்கையும்,

மன்னார் புதை குழியில் இதுவரை 323 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, அதில் 28 சிறார்களுடையதாகும், இவை களனிப் பல்கலைக்கழகப் Prof ,Raj Somadava தலைமையிலான தொல்லியல் குழுவினரால் அகழ்ந்தெடுக்கப்பட்டு காபன் அணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது,

அறிக்கையின்படி குறித்த சடலங்கள் கி்பி,1450-கி்பி.1650 காலப்பகுதிக்குரியன என புளோரிடா வில் உள்ள பீட்டா ஆய்வு மையம் காபன் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது, இதனை மன்னார் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது,

#சர்ச்சைகள்

குறித்த காலப்பகுதியில் இலங்கையில் போர்த்துக்கேய (1505-1658) ஆட்சிக்காலமாகும், இக்காலத்தில் இடம் பெற்ற பாரிய இன அழிப்பு புதை குழியாக இது இருக்கலாம் என உறுதியாக நம்பலாம், ஆனாலும் இவை யாழ்பாண மன்னன் சங்கிலியன் படை எடுப்பில் கொல்லப்பட்ட கிறிஸ்த்தவர்களின் சடலங்கள் என்றும், போர்த்துக்கேய காலத்தில் கொல்லப்பட்ட சைவர்களினது எனவும் சிலரால் ஊகிக்கப்படுகின்றது,

ஆனால் போர்த்துக்கேயரின் பிரதான நோக்கம் மதமாற்றமும், வியாபாரமுமாக இருந்த்தனால் அவை முஸ்லிம்களுக்கு எதிரான இருண்டகாலம் என்பதே வரலாறாகும், ஏனெனில் தமிழர்கள் மதமாற்றத்தை ஏற்றனர், ஆனால் முஸ்லிம்கள் முற்றாக எதிர்த்தனர், அதன்படி நோக்கினால் குறித்த புதை குழி முஸ்லிம்களுடையதாக இருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன,

#வரலாற்று_ஆதாரங்களும்_மறுப்பும்,

1).சங்கிலி மன்னனின் அரச தண்டனை

குறித்த எலும்புக்கூடுகள் சங்கிலி மன்னனால் 1540ல் பாதிரியார் உட்பட கொல்லப்பட்ட 600 பேருடையதாக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வாய்ப்பில்லை, காரணம், அது பேசாலைப்பகுதியில் ” #தோட்ட_வெளி எனுமிடத்தில் ஏற்கனவே அடையாளங்காணப்பட்டு தோட்ட வெளி வேத சாட்சிகளின் அன்னை ஆலயமும் அமைக்கப்பட்டு கத்தோலிக்கர்களால் பராமரிக்கப்படுகின்றது,

இன்னும் ஆரியச் சக்கரவர்த்தியின் வாரிசுகளும் சங்கிலி மன்னனது வரலாற்றை அறிந்தவர்களும், சில யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர்களும் இதனை மறுக்கின்றனர், அதன்படி சங்கிலி மன்னன் குழந்தைகளைக் கொல்ல வில்லை என மன்னனின் வாரிசான ரெமிஜியஸ் கனகராஜா குறிப்பிடுகின்றார், ஆகவே இந்தப் புதை குழிக்கும் சங்கிலி மன்னனது அரச தண்டனைக்கும் தொடர்பில்லை என்ற ஊகத்திற்கும் வர முடியும்,

அடுத்த ஊகமாக கொள்ளப்படுவது ,இது ஒரு புராதன #மயானமாக இருந்திருக்கலாம் என்பது, ஆனால் அது தொடர்பான எந்தப் பதிவுகளும் மன்னார் மாவட்ட அலுவலகங்களில் இதுவரை இல்லை ஆகவே இந்த ஊகமும் நிராகரிக்கப்பட வேண்டியதே,

அவ்வாறாயின் இது யாருடையது,??

குறித்த கேள்விக்கான பதிலை குறித்த புதை குழியில் சடலங்கள் இருந்த அமைப்பு முறையை ஆராய்வதன் மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும்,

1). இங்கு காணப்பட்ட உடல்கள் தலைகள் எல்லாம் ஒரே திசையை நோக்கியும், கால்கள் எல்லாம் ஒரு திசையை நோக்கியும் முறையாக அடக்கப்பட்டிருக்கின்றன, இது இன்றும் முஸ்லிம்கள் அடக்கும் கிப்லாவை நோக்கிய முறைக்கு ஒப்பானது, அத்தோடு இரு உடல்களுக்கிடையில் இடைவெளியும் காணப்படுகின்றது,

இன்னும் சில வேறாக, எலும்புகளாக குவிக்கப் பட்டிருக்கின்றன, இவை காலப்போக்கில் ஏதோ ஒரு மாற்றத்துக்குள்ளாகி இருக்கக் கூடும், அல்லது அவை முஸ்லிம் அல்லாத ஏனைய சைவ, இந்து, பௌத்தர்களுடையதாகவும் இருக்க முடியும்,

இன்னுமொரு அடையாளமாக இவ் உடல்களோடு எவ்வித ஆடை,ஆபரண அலங்காரங்களும் இல்லை.

முஸ்லிம்கள் தமது சடலங்களை ஒரு வெற்றுத்துணியினாலேயே சுற்றுவர்,,ஆனால் ஒரே ஒரு காப்பு வடிவிலான வளையம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, இது கைதிகளாகப் பிடிக்கப்பட்டதன் அடையாளமாகவோ, தளபதிகளின் அடையாளமாகவோ இருக்க முடியும்,

இந்த வகையில் போர்த்துக்கேயரின் மத மாற்றத்திற்கு எதிராக போராடிய மக்களின் புதை குழியாக இது இருக்க முடியும் என்ற ஊகம் இன்னும் வலுக்கின்றது, அது முஸ்லிம்களுக்கே மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது, இறுதிச் சடங்கையாவது தமது சமய முறைப்படி செய்ய எஞ்சி இருந்தவர்களை அனுமதித்து இருக்கவும் முடியும்,

இந்த வகையில் மன்னார் மாவட்ட புதை குழி இலங்கை முஸ்லிம் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாகவும் இருக்கின்றது,

#முஸ்லிம்_வரலாற்று_ஆதாரங்கள்,

போர்த்துக்கேய காலம் இலங்கையில் முஸ்லிம்களின் இருண்ட காலமாக இருப்பதற்கு பல நிகழ்வுகளும், இன அழிப்புக்களும் காரணமாக உள்ளன, அது நாட்டின் பல பாகங்களில் இடம் பெற்றுள்ளது ,

அந்தவகையில் இலங்கையின்பல பாகங்களில் முஸ்லிம் இன அழிப்பு இடம் பெற்றதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்,

அதன்படி,
RL Brohier தனது Historical Series என்ற நூலில் முஸ்லிம்களில் பல பள்ளிவாசல்களும், புனித அடக்கஸ்தலங்களும்,போர்த்துக்கேயரால் தீயிட்டு அழிக்கப்பட்டதாகவும், அதில் Gal Baak என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் முக்கியமானது என்கின்றார்,

அதே போல சமோரியப் பேரரசின் உதவியுடன் குஞ்சலி மரைக்காய தளபதிகள் வந்து சிங்கள மன்னருடனும், மக்களுடனும் இணைந்து 1518ல் போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், அதற்கான பழி வாங்கலை போர்த்துக்கேயர் இன அழிப்புச் செய்து தீர்த்துக் கொண்டனர் எனவும் பதிவுகள் உள்ளன.

இப்பழிவாங்கல்கள் 1613, 1622,1623, 1626 போன்ற காலங்களில் இடம்பெற்றதுடன்,வடக்கின் பன்னல்துறை என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் அழிக்கப்பட்டு 1614ல் டொம் பெட்டோ எனும் தளபதி அவ்விடத்தில் தேவாலயத்தை அமைத்ததாகவும் பதிவுகள் உள்ளன,

இதே போல் 1560-1646 வரை தென்பகுதியிலும் இவ் இன அழிப்பு இடம்பெற்று இருக்கின்றது,இது முஸ்லிம் இருப்பிலும் ,சனத்தொகையிலும் அதிக வீழ்ச்சியைக்கொண்டுவந்த்தற்கான ஆதாரங்கள் உள்ளன,

அதே போல வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் யோகி சிக்கந்தர் தலைமையில் மென்டன்ஷா என்பவனின் படையை இந்துக்களுடன் இணைந்து எதிர்த்தனர், அதிலும் பலர் கொல்லப்பட்டனர், இது 1591ல் கொழும்புத்துறையில் இடம்பெற்றது,

Abeysinghe T, என்ற வரலாற்று ஆய்வாளரின் Jaffna Under the Portuguese என்ற நூலில் யாழ்ப்பாண மன்னராட்சியில் பல தேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் செல்வாக்குடன் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார், அதிலும் கேரளாவைச் சேர்ந்த ” #மாப்பிள்ளை ” முஸ்லிம் குடியினர் அரச சபையில் அதிக இடம்பெற்றிருந்தனர்,

அது்போல சோனர் எனப்பட்ட அறபுக்களும், குஞ்சலிகள் எனப்பட்ட குஜராத்திகளும், பாப்பராவர் எனப்பட்ட ஆபிரிக்கர்களும், மாப்பிள்ளை எனப்பட்ட கேரளாக்களும் அக் காலத்தில் தமது குடியிருப்பை மன்னார் மற்றும் வட இலங்கையில் கொண்டு வாழ்ந்து இருந்தனர்,

#புதிய_ஆய்வுகளும்_நிரூபணங்களும்,

இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாற்றை விடி வெள்ளி பத்திரிகையில் தொடராக, எழுதிவரும் பேராசிரியர் #MSM_அனஸ் தனது புதிய வரலாற்று களத் தேடல்களில் மன்னார் தொடர்பான பல புதிய உண்மைகளை முன்வைக்கின்றார், அதன்படி மன்னார் முத்துக்குளிப்பை கைப்பற்ற போர்த்துக்கேயர் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றதாக்க் குறிப்பிடுவதுடன், “அறுபது மரைக்கால் தாலி அறுபட்ட குளம்” ,மினாறா, போன்ற பகுதிகள் அதிகமாக முஸ்லிம்களை போர்த்துக்கேயர் கொன்ற இடங்கள் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார், இதனை ஒத்த தகவல்கள் எம் ,கே, எச் முஹம்மது (2004) அவர்களின் பதிவுகளிலும் உண்டு,

அதே போல சங்கிலியன் படைகளுடன் இணைந்து முஸ்லிம்கள் போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், படைகளுக்கான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், வரலாறுகள் உண்டு,

#இறுதி_முடிவுகள், ,

இந்த வகையில் பல வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து நோக்குகின்ற போது மன்னார் சதொச பகுதியில் கண்டெடுக்கப்பட்டு ஆய்வை முடிவில் போர்த்துக்கேய கால படு கொலைகள் என அகழ்வாராய்ச்சி அறிக்கை பெறப்பட்டுள்ள புதை குழி, முற்றாகவோ, பகுதியளவிலோ, முஸ்லிம்களுடைய எலும்புக்கூடுகளாக இருப்பதற்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன, அவை எமது மன்னார் பூர்வீக இருப்பின் பலமான அடையாளங்கள்

#நமது_பலவீனம்,

வழமை போன்று முஸ்லிம்களின் வரலாற்று அக்கறை இன்மையும், தொல்லியல் அறிவும், ஆளணியும் இல்லாமையும் இவ்வாறான ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் பற்றிய கண்டு பிடிப்பை ஏனைய சமூகத்தின் உரிமைக் கூடைக்குள் வாரி வழங்கி விடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன,

அந்த வகையில் இது தொடர்பான இன்னும் ஆழமான வரலாற்றைத் தேடுகின்ற போது இவ் ஆதாரங்கள் எமது முன்னோரின் தியாகங்கள் என உறுதிப்படுத்தும் சான்றுகள் மிக இலகுவாக வந்தடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன, ,

#இறுதி_வேண்டுகோள், நாம் #என்ன_செய்யவேண்டும்??

1).கற்றவர்களும், ஆய்வாளர்களும் தமது அறிவையும், தேடலையும் சமூகத்தின் முன்வைப்பது கடமை. அந்த வகையில் பல ஆய்வாளர்கள் தமது சொந்த முயற்சியில் இவ்வாறான தேடல்களை மேற்கொள்கின்றனர், அவ்வாறானவர்களை பண ரீதியாகவும், மன ரீதியாகவும் ஊக்குவிப்பது ஆர்வமுள்ள சமூகத்தின் கடமை ,அவ்வாறான செயற்பாடுகளில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின், தனவந்தர்களும், உலமாக்களும் ,சமூக ஆர்வமிக்கவர்களும்,அமைப்புக்களும், ,உற்சாகமூட்டுவார்களாயின், இது போன்ற பல வரலாற்றுத் தடயங்களை எமது உரிமைக்கான ஆதாரங்களாக்கிக் கொள்ள முடியும்,

2).அடுத்தது, #தென்_கிழக்குப் #பல்கலைக்கழகத்தில் எமக்கான ஒரு தொல்லியல் துறையை (Archeology Department)உருவாக்கி, முஸ்லிம் பார்வையில் தொல்லியலை நோக்குதலும் ,வரலாற்று ஆதாரங்களை மறு பரிசீலனை செய்தலும், இது அரசியல் வாதிகள் ,குறிப்பாக தற்போது பதவியில் இருக்கும் உயர்கல்வி அமைச்சர் ரவூவ் ஹக்கீம், மற்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா செய்ய வேண்
டிய அவசரமான நடவடிக்கை . பதவிக்காலத்தில் இருக்கும்போதே இதனைச் செய்யவேண்டும் இதனை அனைவரும் வலியுறுத்த வேண்டும்,

3).அதே போல் எம்மிடையே இன்று எஞ்சி இருக்கும் சியாறங்களையும், மீஸான்களையும் இயக்க பேதமற்று, அனைவரும் பாதுகாப்பதே எமது இருப்பிற்கான வரலாற்று ஆதாரம், அதற்காக அமைச்சர் ரிஷாட்டின் கைளை பலப்படுத்துவோம் , பேசாலை உட்பட மன்னார் மாவட்டம் முஸ்லிம்களின் பூர்விக பூமி என்பதை அடையாளப்படுத்த அயராது பாடுபடுவோம் இன்றேல் அடையாளமற்ற சமூகமாகவே வாழ்ந்து அழிய வேண்டி வரலாம்,

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA,


சனி, 9 மார்ச், 2019

லொறி - பட்டா வாகன விபத்தில் கிளிநொச்சியில் ஒருவர் படுகாயம்!! (Photos)

கிளிசொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் நடந்த விபத்தில் பட்டா வாகனச் சாரதி படுகாயமடைந்துள்ளர். எதிராக வந்த லொறியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Image may contain: sky and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: sky and outdoor

யாழ் நீர்வேலியில் கோர விபத்து!! கணவன், மனைவி படுகாயம்(Photos)

யாழ்.நகரில் இருந்து நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த ஹயஸ்வாகனம் ரயர் வெடித்ததில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள கடையின் கேற்றினை உள்ளே நுழைந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது வானில் எட்டு பேர் பயணித்துள்ளனர் இதில் கணவன் மனைவி இருவருக்கு காயமடைந்துள்ளளனர்.
காயமடைந்தவர்கள் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.





இலங்கைப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறிஸ்கந்தராஜா ( அதிர்ச்சிப் புகைப்படங்கள்)

கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்தார். அப்பகுதியை நோக்கி இராணுவம் பின்பக்கமாக வருவதை கண்டு அங்கிருந்த பலர் தப்பியோடிவிட்டனர். ஏனையோர் விடுதலைப்புலிகள் என நினைத்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டார்களாம். பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் காந்தன் அவர்களுடைய தலைவெட்டப்பட்ட புகைப்படம் மட்டுமே கிடைத்திருந்தது. ஏனையோர்களின் நிலை இதுவரை தெரியவரவில்லை. இவர்களது விபரங்கள் தெரிந்தவர்கள். புகைப்படங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஒரு வேளை இவர்களையும் கண்டிருக்கலாம்.

புகைப்படம் கண்டெடுக்கப்பட்ட இராணுவமுகாம் ஒரு சித்திரவதை முகாம். இது திருநகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன பிரிவு இயங்கிய இரண்டு வீடுகளே படையினரின் சித்தரவதைமுகாம்களாக இருந்துள்ளது.
………

இந்தமுகாமிற்கு பிடித்துச்சென்று சித்திவதைக்குள்ளான ஒருவரின் வாக்குமூலத்தில் இருந்து…

ஸ்கந்தபுரத்தில் இருந்து வட்டக்கச்சி போவதற்காக சேவியர் கடைச்சந்திக்கு வந்திருந்த கிளிநொச்சியில் வசித்து வந்த(தற்பொழுது எங்கிருக்கின்றார் என்ற தெரியவில்லை) உந்துருளி திருத்துநரும் அவரது மருமகனும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு இம்முகாமில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர். பின்னர் பளைப்பகுதியில் உள்ள ஒரு முகாமிற்கு கொண்டு சென்ற போதே அங்கு ஏற்கனவே பிடித்துச்செல்லப்பட்ட கிளிநொச்சி தபால் அதிபர் இருந்திருக்கின்றார். அரச ஊழியர் என்பதற்காக அவரை படையினர் விடுவிப்பதாக சொல்லியிருந்தார்களாம். தபால் அதிபருக்கு தங்களை நன்கு அறிமுகம் என்பதால் இராணுவத்தினருடன் கதைத்துபடியால் தங்களுக்கு விடுதலை கிடைத்தது என்று தெரிவித்திருந்தார். (இதன் முழுவிபரம் பிறிதொருநாளில் பதிவேற்றுகிறேன்) 8.3.2019



Image may contain: 3 people, people standing and text

யாழ் கொடிகாமத்தில் கோர விபத்தில் இளைஞன் பலியானது ஏன்?? (Photos)

கொடிகாமம் கச்சாய் வீதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. மோட்டார் சைக்களிலில் பயணித்த குலேந்திரநாதன் பிருந்தன் (வயது-19) என்பவரே உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயாம்!! பொலிசார் செய்த அலங்கோலம்!! (Photos)

கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கச்சாய் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த  மோட்டார் சைக்கிள் சாரதி, தென்மராட்சி “சாவக் குழு” வன்முறைக் கும்பலின் தலைவர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர். கே.பிரியந்தன் (வயது-19) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீதியில் 800 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த விபத்து ஐந்து மணித்தியலங்களாகியும் பொலிஸாருக்குத் தெரியாது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நண்பகல் 12. 30 மணியளவில்  இடம்பெற்று சுமார் ஐந்து மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதுவரை விபத்திற்குள்ளான துவிச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மீட்க்கப்படாது இருந்துள்ளது. துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்.

அவர் விடுமுறை நேரத்தில் பழைய இரும்பு , போத்தல்கள் சேகரித்து விற்பனை செய்து வருபவர். அவ்வாறு சேகரித்த பொருள்களை மூட்டை கட்டியவாறு பயணித்த நிலையில் விபத்துக்குளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் யாரும் உடனடியாக மீட்க முன்வரவில்லை. இதனால் உச்ச வெயிலில் வெகு நேரம் விபத்துக்கு உள்ளானவர்கள் வீதியிலேயே கிடந்துள்ளார்கள்.
பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதேவேளை, விபத்து இடம்பெற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன், விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிளை இருபது பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டது.

விபத்தில் சிக்கிய துவிச்சக்கரவண்டி துண்டு துண்டாக சிதறிய நிலையில் பொலிஸார் மீட்டனர். பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


வெள்ளி, 8 மார்ச், 2019

தமிழீழக் கவிஞனின் திறமையைப் பாருங்கள் (Video)!! பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள்!!

கட்டராசுவின் கடைப் பக்கமா கசிப்படித்தவன் தத்துவம் பேசி.... சட்டநாதர் கோவில் பக்கம்......



கிளிநொச்சி விவசாயியின் திறமையைப் பாராட்டுவீர்களா?? பகிர்ந்து கொள்ளுங்கள்!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பரம்பரை பரம்பரையாக விவசாயத்தை நம்பியே பலர் வாழ்ந்து வரும் ஓர் கிராமம்.

இதில் சில இளம்வயதுடையோர் விவசாயத்தை விரும்புவதில்லை ஏன் எனில் செலவு தான் காரணம் நெல்லை வயலில் விதைத்தது தொடக்கம் வெட்டி வீடு கொண்டு வரும் வரை அவர்களுக்கு சீ என்று போய் விடும் அதட்குரிய லாபம் பாேதாமை ஓர் காரணம் ஆகும்.

கடந்த காலத்தில் வயல் நிலங்களில் வெள்ளம் பாய்ந்து விவசாயிகளுக்கு கடும் கஸ்டத்தினை கொடுத்துள்ளது.

பொதுவாக உழவு இயந்திரத்தில் பெட்டி சில் சிறிதாகவே காணப்படும்.
இதனால் பல உழவு இயந்திரங்கள் புதைவது அனைவரும் அறிந்ததே.

இதனை சுலபமாக்கும் வகையில் இந்த விவசாயி பெட்டி சில்லுக்கு பதிலாக உழவு இயந்திரத்தின் பெரிய சில்லை பொருத்தியுள்ளார்.

இதனூடாக விவசாய நிலங்களில் வேலையை சுலபமாக முடிக்க முடிந்தது என விவசாயிகள் பெருமை கொண்டனர்.
Image may contain: tree, sky and outdoorImage may contain: tree and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: tree and outdoorImage may contain: outdoor

நெடுங்கேணி சிறுவன் கடத்தல் விவகாரம் சிறுவனின் தாயாரின் திருவிளையாடலாம்!! (Photos)

தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பியமைக்கான 35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தை வழங்குமாறு 8 வயது மகனை வெளிநாட்டு முகவர் ஒருவரின் தரப்பினர் அழைத்துச் சென்றனர் என்று
தெரிவிக்கப்பட்டது.

“ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா கிடைப்பதற்காக சிறுவனின் தாயாரால் மகன் கடத்தப்பட்டதாக உண்மைக்குப் புறம்பாக முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்படார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டதாக முறைப்பாடு
வழங்கப்பட்டுள்ளது.

“சிறுவன் நேற்றுமுன்தினம் மாலை  தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு  சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

” இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை” என்று சிறுவனின் தாயரால் நேற்றுக் காலை நெடுங்கேணிப் பொலிஸ்
நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

சிறுவனை சிறுவனின் தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த  35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தைத் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன்,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசினார்.

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது” என்றும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுவன் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார் என்று கண்டறிப்பட்டது. சிறுவன் பணம் கேட்டுக் கடத்தப்பட்டதாக முறைப்பாட்டை வழங்கி அதன் ஊடாக பொலிஸ் அறிக்கையைப் பெற்று ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா அனுமதி பெற்றுக்கொள்வதற்காக தாயார் முயற்சித்தார் என்பது தெரியவந்த்து.

அதனால் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்படு விடுவிக்கப்பட்டார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.


கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு… !! மகளிர் தினத்தில் நடந்த கொடூரம்..!!(Photos)

பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலைபிரிவில் கல்வி பயின்று வரும் மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுமி சடலமாக மீட்கபட்டமைக்கான காரனம் இதுவரை கண்டறியப்படவில்லை.மகளிர் தினமான இன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



முதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம்! சற்று முன்னர் வெற்றிகரமாக தரையிறக்கம் (Video)

இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

அதற்கமைய சற்று முன்னர் UL 306 என்ற விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.



60வயது ஜேர்மன் தமிழ்காதலனிடம் மன்னிப்புக் கேட்டார் ஓடிய காதலி!! யாழில் சம்பவம்!! (Photos)

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் காதலியிடம் ஏமாந்த 60 வயது காதலனை பற்றிய செய்தி சில நாட்களின் முன்னர் வெளியாகியிருந்தது. கல்வியங்காட்டை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர், பேஸ்புக்கில் இளம் பெண்ணொருவரை காதலித்திருந்தார்.

ஆரம்பத்தில் சாதாரண நட்பாக ஆரம்பித்து, பின்னர் காதலனாது. காதலி தன்னை வவுனியாவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தியிருந்தார். பேஸ்புக் காதலிக்காக, காதலன் கமலநாதன் பல இலட்சம் ரூபாவை செலவிட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய தயாரான நிலையில், கள்வியங்காட்டிலுள்ள காதலனின் இல்லத்தில் யுவதியும் வந்து தங்கி நின்றார். பின்னர், காதலன் வழங்கிய பணம், நகைகளுடன் தலைமறைவானார். இது குறித்து காதலன் கமலநாதன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் யுவதி முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், யுவதி தற்போது அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், காதலன் கமலநாதனின் வீட்டுக்கு, அவரிடம் மன்னிப்பு கோர யுவதி நேற்று வந்தார். அவரை அழைத்துக் கொண்டு, பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் கமலநாதன். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் திருமணமானவர் என்பதும், மூன்று குழந்தைகளின் தாயார் என்பதும் தெரியவந்தது. கணவன் காலை இழந்தவர். கமலநாதன் முதல் அனுப்பிய 7 இலட்சம் ரூபா பணத்தில் காணி வாங்கி, கடன்காசு கொடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் அனுப்பிய பணத்தில், லோன் காசு கட்டியதாகவும், தாலியை ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நகை விற்பனை செய்யப்பட்ட இடங்களிற்கு பொலிசார் விசாரணைக்கு சென்றனர். அந்த பெண்ணின் குடும்ப நிலையை அறிந்த கமலநாதன் இரக்கப்பட்டு, வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவிசெய்ததாக அமையட்டும், இந்த பணம் எனக்கு தேவையில்லை, ஆனால் பெண்ணிடமிருந்த தனது சில ஆவணங்களை தருமாறு கேட்டார். எனினும், கமலநாதன் வழக்கு பதிவுசெய்ததன் அடிப்படையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு தாம் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் மூலம், மிகுதி பணத்தையும் பெறலாம் என பொலிசார் குறிப்பிட்டனர். எனினும், கமலநாதன் அதை மறுத்து விட்டார். இன்று மதியம் வரை, குறிப்பிட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.