ஒவ்வொரு வங்கிகளும் எங்களிடம் பணம் சேமியுங்கள் அதிக வட்டி தருகிறோம் என்றுதான் அழகிய விளம்பரங்கள் அலங்காரமாய் வைக்கிறார்கள். எந்தவொரு வங்கியாவது இந்த தொகைக்குக்கீழே இருந்தால் புடுங்கிக் கொள்வோம் என்று ஒரு மூன்று ரூபா போட்டோ கொப்பியாகிலும் ஒட்டுகிறார்களா.?

ஒரு காலத்தில் அதிகம் வைத்திருப்பவனிடம் பறித்தார்கள்.
இப்போ இல்லாத ஏழைகளிடம் பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.
வண்ண வண்ண சுவரொட்டி விளம்பரத்திற்கு பதிலாக இந்த நடைமுறையை பகிரங்க தட்டியில் காட்டி ஏழைகளிடமிருந்து புடுங்குவதை #தவிர்க்கலாமே.
ஏழைகள் எல்லாம் தெரிந்துகொண்டு வங்கியில் பணம் போட்டு வைப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு அவகாசமுமில்லை.அடுத்த வேளைக்கு உழைக்க போக வேண்டும்.

3000.00 க்கு குறைவாக இருந்தால் கடிதம் மூலம். அதிக தொகை போடும்படி அறிவிக்கலாம். அல்லது குறைந்த தொகை உள்ளதால் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கலாமே.
பணத்துக்கு சட்டம் இயற்றியவனுக்கு ஏழைகள் பாதிக்கப்படுவது மனச்சாட்சிக்கு படவில்லையா.

ஏழைக்கு வங்கி எட்டாத தூரமா.
சிறு துளி பெரு வெள்ளம் என்று ஏழை நினைப்பது தவறா.
"கடலில் சென்றால் கடற்கொள்ளையர்கள் வங்கிக்கு சென்றால் வங்கிக் கொள்ளையர்கள். வித்தியாசம் அதிகமில்லை."