சிறுநீரக கோளாறினால் பாதிப்புற்ற சிறுவன், தனக்கு நிதி உதவி வழங்குமாறு கிளிநொச்சியில் தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினராக சிறிதரனிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளான். ஆனால் அதற்கு நிதி உதவி வழங்காத சிறிதரன் அதனை ஊடகங்களுக்கு அனுப்பி பொதுமக்களிடம் இருந்து காசு கறக்க முற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரணிலின் அரசாங்கத்தைக் காப்பாற்றியமைக்காக 15 கோடி ரூபா அளவில் கொழும்பில் வீடாகவும் பணமாகவும் பெற்றுக் கொண்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிய நிலையிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு கொடுக்கப்படும் பல கோடிக்கணக்கான நிதியிலும் குறித்த சிறுவனைக் காப்பாற்ற முடியாத சிறீதரன் பொதுமக்களிடம் இருந்து பணத்தை சேகரிக்க முற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சிறிதரனின் ஏமாற்று வேலைகளுக்கு உட்படாது குறித்த சிறுவனுக்கான நிதிஉதவியினை அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு நேரடியாக கொடுப்பதற்கு கருனையுள்ளம் படைத்தவர்கள் முயற்சிசெய்ய வேண்டும்.