கொழும்பு பேருந்துகளில் இரவு நேரங்களில் இளைஞர் யுவதிகள் மோசமான முறையில் நடந்து கொள்வதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் காதலர்கள் போன்று காணப்பட்ட இளைஞனும் யுவதியும் ஏனைய பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பஸ் நடத்துனர் அந்த இளைஞனையும் யுவதியை எச்சரிக்காமல் பணத்தை பெற்றுக் சென்றமையினால் பயணிகள் கடும் கோபமடைந்துள்ளனர்.

பயணிகள் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து கொண்டதனை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.

கொழும்பில் சில பகுதிகளுக்கு பயணிக்கும் பேருந்துகளில் இதனைவிடவும் மோசமாக இளைஞர் யுவதிகள் பயணிப்பதாக அங்கிருந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.