யாழ் இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து திருடிய கொள்ளையனின் புகைப்படங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. குறித்த கொள்ளையன் இராசாவின் தோட்டப்பகுதியில் வசித்துவரும் யாழ் மாநகரசபையைச் சேர்ந்த பெண் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில், யாரும் இல்லாத வேளையில் புகுந்து, வீட்டு ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து 5 பவுண் சங்கிலியைக் கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த கொள்ளையன் கொள்ளையடித்த பின்னர் அவ் வீதியால் சென்ற காட்சிகளை பொலிசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களின் உதவியுடன் பெற்றுள்ளனர். இது தொடர்பாக யாழ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவனைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம்.