இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 மார்ச், 2019

பெண்களைச் பாலியல் சித்திரவதை செய்யும் பார் நாகராஜ்! முழுமையான வீடியோ

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கிவருவதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில், பார் நாகராஜன் என்பவர் பெண்களை சித்திரவதை செய்யும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விரிவான விடயங்களை கீழ்வரும் யூரியுப் இணைப்பை அழுத்தி subscrib செய்த பின்னர் காணுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber 


வெள்ளி, 8 மார்ச், 2019

இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணை விஷம் வைத்துக்கொண்ட கணவன்!! அதிர்ச்சித் தகவல்கள் (Photos)

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது., தமிழகம் குமரி மாவட்டத்தை சேர்ந்த திவ்யா (தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்) ,

பெல்லார்மினுக்கும் கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பெல்லார்மின் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன 2 மாதம் வரை திவ்யா, பெல்லார்மின் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சமாதானம் ஆவதும் என வாழ்க்கை இருந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திவ்யா நேற்று காலையில் வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திய அவர், அந்த பகுதியில் நின்றவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். உடனே அவர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அயலிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே திவ்யா விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் அவருடைய உடல் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த தகவலை அறிந்த அப்பகுதி போலீசார் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை ஜான் அலெக்சாண்டர் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா கணவர் பெல்லார்மின், மாமனார் பெர்க்மான்ஸ், மாமியார் அமலோற்பவம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் தன்னுடைய மனைவி சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்ததையடுத்து உடனே போலீசார் பெல்லார்மினை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



புதன், 6 மார்ச், 2019

பாக்கிஸ்தானில் இந்திய விமானி அபிநந்தன் பிடிபட முன் செய்த மயிர்கூச்செறியும் வீரச்செயல்

தன் செத்தாலும் பரவாயில்லை எதிரி நாட்டுக்கு ஆவனம் சிக்கிவிட கூடாது என்பதற்காக செய்யும் நடவடிக்கையைப் பாருங்கள்...

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber



திங்கள், 4 மார்ச், 2019

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்!! மன்னார் மாவட்ட ஆயர் அறிக்கையால் அதிர்ச்சி!!

ஆக மொத்தம் மன்னார் மறை மாவட்ட ஆயர் மத தீவிரவாதத்தை வெள்ளை அடிப்பாதாக உள்ளது. சம்பவ இடத்து கிறிஸ்தவ தேவாலயம் அமைந்த இடமே திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணி என நீதி மன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பல அரசியல் தலையீடு மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக தீர்ப்பை பல வருட காலமாக இழுத்தடிக்கப்படுகின்றது.

Image may contain: textImage may contain: textமன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் அறிக்கை
*********************************************
மன்னார் மாந்தை பகுதியில் ஆலய இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டபூர்வமற்ற செயல்பாட்டில் இறங்குவது கண்டிக்கப்பட வேண்டியது.

மன்னார் மாந்தைப் பகுதியில் ஆலயக் காணி, குளம் போன்ற வழக்கு கொழும்பு
மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும்
இவ்வேளையில் ஒரு சில இந்து மதத்தலைவர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக இந்து
மக்களை தூண்டிவிட்டு மன்னாரில் இந்து கத்தோலிக்க மக்களின் ஒற்றுமையை
சீர்குழைத்து வருவதாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்
தெரிவித்துள்ளது.

மன்னார் மாந்தைப் பகுதியில் இரு சமூகத்தினரிடையே நிலவியுள்ள முறுகல் நிலை
தொடர்பாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் விடுத்திருக்கும்
அறிக்கையில்

மன்னார் மாந்தை ஆலய காணி, குளம் உட்பட்டிருக்கும் வழக்கு ஒன்றில்
இவ்விடத்தில் வீதி மற்றும் வளைவு சம்பந்தமாகவும் பிரஸ்தாபிக்கப்பட்ட
நிலையில் கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில்
இருந்து வருகின்றது.

இது இவ்வாறு இருக்க சிவராத்திரி தினத்தை சாட்டாக வைத்து மன்னார் மாந்தை
ஆலயத்துக்கு முன்பாக மாந்தைப் பகுதியில் புதிதாக நிலையான வளைவு ஒன்று
அமைப்பதற்கான நடவடிக்கையை இந்து சமய நிர்வாகம் நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.

இவ் வழக்கில் இருக்கும் ஒரு முக்கியஸ்தர் இவ் இடத்தில் வளைவை அமைப்பில்
பின்னனியில் இருந்து செயல்படுவதாலேயே இவ் வளைவு அமைப்பதற்கான
முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றின் தீர்ப்பு வருவதற்கு முன் இந்த வளைவு
அமைப்பது ஒரு தன்னிச்சையான செயல்பாடாக அமைந்துள்ளது.

இதனால் இந்த செயல்பாட்டினால் கத்தோலிக்க மக்களின் மனம் புண்பட்டதினதால்தான் நேற்று முன்தினம் (03.03.2019) ஞாயிற்றுக் கிழமை
இந்து கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஒரு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலுவையிலிருக்கும் இவ் இடம் சம்பந்தமான வழக்கு தீர்ப்பு வரும் வரைக்கும் இரு பகுதினரும் பொறுமையாக இருந்து செயல்பட வேண்டியிருப்பதற்கு
பதிலாக ஒரு சமூகத்தினரை தூண்டிவிட்டு சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டதாலேயே இரு சமூகத்தின் மத்தியில் தற்பொழுது முறுகல் நிலை தோன்றியுள்ளது.

அதுமட்டுமல்ல சிலர் உண்மைநிலை அறியாமல் சமூக வளை தலங்களில் கத்தோலிக்கரே
முதலில் இருந்த வளைவை உடைத்ததாகவும் கத்தோலிக்கராலேயே பிரச்சனை
ஆரம்பிக்கப்பட்டதாகவும் தவறான பதிவுகளை வெளியிட்டு வருவது கண்டிக்கப்பட
வேண்டியதொன்றாகும்.

உண்மையான நிலை என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பை இன்னும் எட்டாமல் மாந்தை
ஆலயத்துக்கு முன்பாக கனகரக வாகனம் மூலம் நிலையான வளைவு ஒன்றை
அமைக்கப்பட்டபோதே அமைக்கப்பட்ட வளைவை தடுத்து நிறுத்த கத்தோலிக்கர்
முற்பட்டனர்.

கடந்த காலங்களில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை பிரதான பாதையில்
இவ்வாறான தற்காலிக வளைவு இடப்பட்டு பின் அது தற்பொழுது நிலையான வளைவாக
அமைக்கப்பட்டபோது கத்தோலிக்கர் செறிந்து வாழும் இவ் பகுதியில் இவர்கள்
அவற்றுக்கு எதிராக எந்த செயல்பாட்டிலும் இறங்கவில்லை என்பதையும்
இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

ஆனால் தங்கள் சுய இலாபத்துக்காக ஒரு சில இந்து சமய தலைவர்கள் இந்து
மக்களை தவறான வழியில் வழிநடத்தி கத்தோலிக்க மக்கள் மீது தேவையற்ற பழி
சுமத்தி வருகின்றனர்.

ஆகவே எவராக இருந்தாலும் உரியவர்களிடம் சரியான விபரங்களை கேட்டறிந்து
அவற்றை வெளியிடுவது சிறந்ததாகும். இவ்வாறு இருக்குமாகில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டிலே குழப்ப நிலை தோன்றாது இருப்பதற்கு இது வழி சமைக்கும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

சனி, 2 மார்ச், 2019

கம்பீரமாக அபிநந்தனுடன் நடந்து வந்த பெண் யார்?

பாகிஸ்தான் ராணுவத்தால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விங் காமாண்டர் நேற்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அபிநந்தனுடன் ஒரு பெண் இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. வழக்கம்போல் சமூக வலைத்தள போராளிகள் அந்த பெண் அபிநந்தனின் மனைவி என்றும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்றும் தங்கள் இஷ்டம் போல் கருத்துக்களை ஆர்வக்கோளாறில் பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் அவர் ஒரு பாகிஸ்தான் அதிகாரி. அபிநந்தனை அழைத்து வந்த பெண்ணின் பெயர் டாக்டர் ஃபஹிரா பக்டி. இவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய விவகாரங்களை கையாளும் பிரிவின் இயக்குநராக இவர் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 1 மார்ச், 2019

பாக்கிஸ்தான் ஆமிகளுடன் நடனமாடிய இந்திய விமானி அபினந்தன்!! பரபரப்பு வீடியோ

பாக்கிஸ்தான் ஆமிகளுடன் நடனமாடிய இந்திய விமானி அபினந்தன்!! பரபரப்பு வீடியோ

பாக்கிஸ்தானால் இந்திய விமானப்படை வீரர் ஒப்படைக்கப்பட்ட காட்சிகள் இதோ!!

பாகிஸ்தானில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகளின் பாலகோட் பயிற்சி முகாமை கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் விமானப்படை மறுநாள் புதன்கிழமை காஷ்மீரில் உள்ள 4 ராணுவ நிலைகளை குண்டு வீசி அழிக்க முயற்சி செய்தது.

பாகிஸ்தானின் 20 அதிநவீன விமானங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்துக்குள் வட்டமடித்த அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்து விரட்டின. இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் தங்கள் வான் பகுதிக்குள் திரும்பின.

அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 2 பாகிஸ்தான் விமானங்களை விரட்டி சென்ற போது இந்தியாவின் மிக்-21 விமானம் தாக்கப்பட்டு பழுதடைந்தது.

இதையடுத்து அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. “அவரை தாக்கக் கூடாது. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இந்தியா எச்சரித்தது. ஜெனீவா ஒப்பந்தத்தின் பேரில் அபினந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்று தூதர் மூலம் வலியுறுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேற்று காலை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று அபினந்தனை விடுவிக்க வலியுறுத்தினார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சவூதி அரேபிய இளவரசர் முகமதுபின் சல்மான், அபுதாபி இளவரசர் ஜாயித் அல் நயேன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் போனில் பேசினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அபினந்தனை உடனே விடுவிக்கக் கோரி பிரதமர் இம்ரான்கானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இதற்கிடையே, பாகிஸ்தான் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்தியாவும் ஓசையின்றி நேற்று முன்தினம் இரவு முதல் முப்படைகளையும் தயார்படுத்தியது.

இதனால் வேறு வழியின்றி பணிந்த இம்ரான்கான் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் பேசுகையில், “அபினந்தன் நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார்” என்று அறிவித்தார்.

அபினந்தனை வரவேற்க இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து வாகாவுக்கு புறப்பட்டு சென்றது. அதுபோல அபினந்தனின் பெற்றோர் வர்தமான்-டாக்டர் ஷோபா மற்றும் உறவினர்களும் டெல்லியில் இருந்து விமானத்தில் அமிர்தசரசுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து காரில் வாகா எல்லைக்கு சென்றனர்.

இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். 35 வயது நிரம்பிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் சிறைபிடித்ததும் எல்லையில் இருந்து ராவல்பிண்டிக்கு அழைத்து சென்று இருந்தனர். அங்கு ராணுவ முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

அங்கு வைத்துதான் அவரிடம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேசினார்கள். நேற்றும் அவர் அங்குதான் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் முறைப்படி இந்தியாவிடம் மாலை ஐந்தரை மணியளவில் ஒப்படைத்தனர். பிரபாகரன், ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

அபினந்தனின் விடுதலை தொடர்பாக இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டியளிக்க உள்ளார்.
Image may contain: one or more people and people standingImage may contain: 1 person, smilingImage may contain: 2 people

புதன், 27 பிப்ரவரி, 2019

பாக்கிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரரை சித்திரவதை செய்யும் காட்சிகள்!! (Video)

பாக்கிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரரை சித்திரவதை செய்யும் காட்சிகள்!! (Video)

இந்திய விமானங்கள் இரண்டு பாக்கிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் (Video)

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம்கள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை முதலில் மறுத்த பாகிஸ்தான் அரசு, இந்தியா போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது'' என்றது.

இந்த நிலையில், இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளாயின.  இந்தியா தரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில், `இந்திய விமானங்களை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். ஒரு வீரரை பிடித்துவைத்துள்ளோம்'' என்றனர். இதற்கு, இந்தியா மறுப்பு தெரிவித்ததாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.


இந்த நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த விமானி அபினந்தன் வர்தன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.
Image may contain: fire and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: 3 people, crowd and outdoor

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பேஸ்புக் காதல்!! மாணவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து காவாலிகள் அலங்கோலம்!!

கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25), என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவியும் முகநூல் மூலம் நண்பர்களாக பழகினார்கள். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கல்லூரி உணவு இடைவேளையின் போது அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து அந்த மாணவி அங்கு சென்றார்.
அப்போது அங்கு சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சதீஷ் (28), பக்கோதிபாளையம் தங்கராஜ் என்பவரது மகன் வசந்தகுமார் (24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் திருநாவுக்கரசு (26) ஆகியோருடன் அங்கு காரில் காத்து இருந்தார்.
பின்னர் மாணவி ஏறியதும் கார் அங்கிருந்து புறப்பட்டு தாராபுரம் ரோட்டில் சென்றது. காரின் பின்புறம் மாணவி, சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் இருந்தனர். முன்இருக்கையில் சதீஷ் அமர்ந்தார். திருநாவுக்கரசு என்பவர் காரை ஓட்டினார்.
தாராபுரம் ரோட்டில் கார் சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவி அணிந்து இருந்த சுடிதாரை விலக்கியதாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்ததுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும், ஆபாச படத்தை காட்டி 4 பேரும் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் காரில் இருந்து அந்த மாணவியை இறக்கி விட்டு விட்டு அவர்கள் காரில் தப்பிச்சென்றனர். நடுவழியில் தவித்த மாணவி அங்கிருந்தவர்களின் உதவியுடன் வீட்டுக்கு சென்றார். இருப்பினும் சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்து பணம் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் இருக்கும் திருநாவுக்கரசை காரில் அழைத்து வருவதற்கு மற்ற 3 பேரும் ஜோதி நகரில் தயாராக நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீது பாலியல் தொந்தரவு செய்தல், படம் எடுத்து மிரட்டுதல், நகை பறிப்பு, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம். மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசை போலீசார் தேடி வருகின்றனர்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.