யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அவசர அறிவித்தலுக்கமைய விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.