நாடாளுமன்றத்துக்குள் கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்துவோர் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்ய முடியும் என்றும் நாய் போன்று மோப்பம் பார்த்து கூற முடியாது எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் போன்று சிலர் நாடாளுமன்றத்துக்குள் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அமைச்சரும் கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என்றும் அது தொடர்பில் நாய் போன்று மோப்பம் பார்த்து கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
சந்தேகம் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.