வடகிழக்கில் திட்டமிட்ட முறையில் இரகசியமாக இலங்கை சிங்கள வைத்தியர்கள் தமிழர்களுக்கு எதிரான இன வழிப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வருவதை எமது ஊடகம் கண்டறிந்துள்ளது. அதனை பகிரங்கப் படுத்துவதனூடாக மட்டுமே எமது மக்களை ஓரளவேனும் பாதுகாத்துக் கொள்ள கூடியதாக இருக்கும் தவறின் இலங்கையில் தமிழினம் இன்னும் 100 ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் அதனுடன் தொல் வரலாற்றை கொண்ட தமிழும் இலங்கையிலிருந்து அழிந்துபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் வடகிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் கட்டாய கருத்தடைகள், கருத்தடை ஊசிகள், லூப் முறை என்பன மேற்கொள்ளப்பட்ட போதும் அவை பெரியளவிலான வெற்றியை தராததால் தற்போது ஒரு புதிய உத்தியை பயன்படுத்துகின்றனர். இது கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதே மேலும் அதிர்ச்சியான செய்தி.

அதாவது தமிழ்மக்களின் வாக்கில் பதவிக்கு வந்த அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் தற்போதய அரசும் இயங்குகின்றது என்ற போதும் இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்கின்றது என்றால் தமிழர் தரப்பு சிங்கள நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளது என்றோ அல்லது கூட்டமைப்பின் ஆசியுடன் தான் நடைபெறுகிறதோ என்று கருத இடமுண்டு.

காரணம் கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் , மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ணவின் நண்பருமாகிய வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களிடம் யுத்தத்தில் அழிந்த கிளிநொச்சியில் கட்டாய கருத்தடை நடக்கின்றது அதனை தடுத்து நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்த போது கருத்தடை செய்வது அவரவர் சுதந்திரம் தடுக்க முடியாது என பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவித்து மக்களின் மத்தியில் கடும் எதிர்ப்பினை சம்பாதித்திருந்தார்.

இந்த நிலையில் சிங்கள வைத்தியர்கள் VOP ஆக உள்ள வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் குழந்தை பேறிற்கு செல்லும் இளம் தமிழ் பெண்களை ஒரு குழந்தையுடன் இரகசியமாகவும், வற்புறுத்தலுடனும் ஜடே முறையில் கருத்தடை செய்கின்றனர். இது தமிழர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல்.

அண்மையில் வவுனியா ஈச்சங்குளம் மற்றும் கிடாச்சுரியை சேர்ந்த இரு இளம் பெண்களுக்கு வவுனியா வைத்திய சாலையின் சிங்கள VOP இரு பெண்களையும் அச்சுறுத்தி இச் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

ஜடே முறை

ஜடே முறை என்பது பெண்ணின் முழங்கைப் பகுதியில் உள்ள நரம்புப் பகுதில் குழாய் போன்ற ஒரு பொருளைப் பொருத்துதல். இதன் பின்னர் அதனை அகற்றும் வரை மீளக் கருத்தரிக்க முடியாது. இதனை இளம் பெண்களுக்கு அவர்களின் அனுமதியில்லாது வற்புறுத்தலில் பொருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இவ்விடயத்தில் அரசியல்வாதிகள், சமூக நலன் விரும்பிகள் , ஊடகவியலாளர்கள் தலையிட்டு இவற்றை வெளிக் கொண்டு வந்து தமிழின அழிவை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்