திங்கள், 25 பிப்ரவரி, 2019

நீதிமன்றால் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவன மோசடிக்கு யாழ் மேயரும் உடந்தையா??

வடபகுதியில் உள்ள பாமர மக்கள் தொடங்கி படித்த மக்கள் வரை மிகவும் நுட்பமான முறையில் ஏமாற்றி வரும் பிரமிட் எனும் பணம் கொடுக்கல் வாங்கல் நிறுவனமாக குளோபல் லைப்ஸ்ரைல் லங்கா நிறுவனம் யாழில் ஒரு கிளை திறக்கவுள்ளதாகவும் அதற்கு யாழ் மாநகரமேயர் ஆனோல்ட் தலைமைதாங்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் 5 ஆயிரம் ரூபாக்கும் குறைவான மிகக் குறைந்த பெறுமதியான பொருட்களை ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்து அந்தப் பொருட்களை வாங்குபவர்களை மேலும் இருவரை தமது பொருட்களை வாங்கச் செய்தால் அதற்கு புள்ளிகள் தருவதாக கூறி மிக மோசமாக பலரையும் ஏமாற்றி வருகின்றது.
குறிப்பாக இந்த நிறுவனம் சமூக அந்தஸ்து மிக்கவர்களை குறி வைத்து  அவர்களை தமது வலையமைக்குள் உள் வாங்கச் செய்து அவர்கள் ஊடாக ஏனையவர்களையும் மிகக் கேவலமான முறையில் ஏமாற்றி வருகின்றது. இந்த நிறுவனத்தில் ஒருசில பிரதேசசெயலாளர்கள், சில சட்டத்தரணிகள், மற்றும் ஒரு சில வைத்தியர்கள் பங்காளிகளாக இருக்கின்றார்கள் எனவும் அவர்களை முன்னிலைப்படுத்தியே குறித்த நிறுவனம் ஏனைய அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றது எனவும் இந்த நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஒரு போலி நிறுவனத்தை யாழ் மாநகரசபை மேயர் திறந்து வைப்பதன் பின்னணி தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கந்தர்மடத்தில் திறக்கப்படவுள்ள குறித்த நிறுவனத்தின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.