காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.

திருநெல்வேலிச் சந்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மீறி வர்த்தகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

அதேவேளை நகர்ப்பகுதி கடைகளும் மூடப்பட்டுள்ளன. வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
Image may contain: outdoorImage may contain: one or more people, people walking, people standing and outdoorNo photo description available.