ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

இலங்கைக்கு மூட்டை தூக்குபவர்களால் பெரும் ஆபத்தாம்!! கூறும் பெண் யார்?

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் கொள்கலன்களில் சுமார் 20 வீதமானவை உண்மையான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரப்படுவதில்லை என சுங்கத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வரும் வர்த்தகர்கள் வரப் தங்களது பெயர்களில் கொள்கலன்களை கொண்டு வராமல், வேறு நபர்களின் பெயர்களில் கொள்கலன்கள் கொண்டு வரப்படுவதாக சார்ள்ஸ் கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மூட்டை தூக்குபவர்கள், வாடகை வாகனச் சாரதிகள், காவலாளிகள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பெயர்களிலேயே கொள்கலன்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இந்த கொள்கலன்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளின் போது யாரின் பெயரில் கொண்டு வரப்பட்டதோ அவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், மிளகு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் வேறு நபர்களின் பெயர்களில் கொண்டு வரப்பட்டிருந்தது.

கொள்கலன்களை மெய்யான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.