ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

நாட்டை அச்சுறுத்தும் போதைப்பொருள் – ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

தூக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தும் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அதிக அளவில் காணப்படுகின்றது.
தற்போது கிடைக்கபெற்றுள்ள புள்ளிவிபரங்கள் படி, இந்த ஆண்டில் தற்போது வரையான காலப்பகுதியில் 520 கிலோ 762 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 6651 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று 294 கிலோ 49 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்டமையும் அடங்குகின்றது.
இதேவேளை கடந்த ஆண்டு மட்டும் 732 கிலோ 129 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 40,998 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு ஆண்களையும் ஒப்பிடுகையில் ஒரு பெரும் தொகை போதைப்பொருள் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஆண்டும் அதிகளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.