திங்கள், 25 பிப்ரவரி, 2019

காணாமல் போனவர்களின் போராட்டம் சிறிதரன் குழுவினரால் குழப்பப்பட்டது!!!

காணாமல் போனோருக்கு நீதி கோரி இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பெரும் கரும் புள்ளியாக, தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நடந்து கொண்ட மோசமான சம்பவம் அமைந்துள்ளது. போராட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டது மட்டுமல்ல, பிரதேசசபை உறுப்பினர் தாக்கப்பட்டது, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது என, கேவலமான ரௌடித்தனத்தில் இன்று கிளிநொச்சி தமிழரசுக்கட்சியின் “கடைநிலை“ உறுப்பினர்கள் ஈடுபட்டனர். அனைத்து தரப்பும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, காணாமல் போனோரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை வலுப்படுத்த, ஒன்று திரள வேண்டிய களத்தை, சின்னத்தனமான அரசியல்களமாக மாற்றியுள்ளனர். இன்றைய தமிழ் தலைவர்கள், கட்சிகள் யாருமே தமிழர்களின் கோரிக்கையை வென்றெடுக்க வல்லவர்கள் கிடையாது. ஒரு இடைமாறு காலகட்டத்தின் அரங்கில் முன்னிலைக்கு வந்துள்ளவர்கள். காணாமல் போனவர்கள், அரசியல்கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகளிடம் பொறுப்பு இருந்த காலமொன்றிருந்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி அவர்களால் அந்த இலக்கை நோக்கி நகரவோ, அதை வெற்றிபெற வைக்கவோ முடியவில்லை. ஆகவேதான், இப்பொழுது மக்கள் போராட்டங்கள் நடக்கின்றன. மக்களே தமது கோரிக்கைகளை முன்வைத்து, போராடுகிறார்கள். இந்த மக்கள் போராட்டங்கள் தனியே சிங்கள அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை மட்டும் வெளிக்காட்டவில்லை. மறுவளமாக, கையலாகாத நமது தலைமைகளின் முகத்தையும் வெளிக்காட்டுகிறது. இந்த நிலைமையில், இன்று குழப்பம் செய்தவர்கள் அரசியலை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள்? மணவீட்டில் மாப்பிள்ளையாகவும், மரணவீட்டில் சடலமாகவும் கிடக்கும், வெறும் தேர்தல்… கட்சி அரசியலையா நடத்துகிறார்கள்? அரசியலென்று அதையா புரிந்து வைத்திருக்கிறார்கள்? *இன்று நடந்தது என்ன?* கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பேரணி ஆரம்பித்ததும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வரிசையில்- போராட்டத்தை தலைமை தாங்கி செல்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் அதன்பின்னால் செல்வதாகவே ஏற்பாடு. ஆனால் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாமல்- ரௌடிகளை போல- முன்வரிசைக்கு வந்தனர். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்காக முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பெற்று, ஒலிபெருக்கியை பொருத்தி, போராட்டம் குறித்து நேற்று கிளிநொச்சி முழுவதும் அறிவிப்பதற்கான ஏற்பாட்டை சமத்துவம் சமூக நீதிக்கான அமைப்பினர் செய்திருந்தனர். போராட்டம் ஆரம்பித்ததும், அந்த முச்சக்கரவண்டியை, காணாமல் போனோரின் உறவினர்களான பெண்களிடம் கையளித்தனர்- நீங்களே அறிவிப்பையும் செய்யுங்கள் என. அந்த முச்சக்கரவண்டி தமது எதிர்தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை அறிந்திருந்த தமிழரசுக்கட்சியினர், கை ஒலிவாங்கிகளை தயாராக கொண்டு வந்திருந்தனர். ஏற்கனவே காணாமல் போனோரின் உறவினர்கள் அறிவித்தல் செய்ய, அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக, தமிழரசுக்கட்சியினர் அறிவித்தல் செய்தார்கள். காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம் என, காணாமல் போனோரின் உறவுகள் கோசமிட, அதற்கு போட்டியாக, காணாமல் போனோர் அலுவலகம் வேண்டுமென தமிழரசுக்கட்சியினர் கோசமிட்டனர். ஏற்பாட்டு குழு தலைவரான பாதிரியார் பலமுறை ஒலிவாங்கியை பெற்று, தமிழரசுக்கட்சியினரை பின்னால் செல்லுமாறும், காணாமல் போனோரின் உறவினர்களை முன்வரிசையில் விடுமாறும் கேட்டுக் கொண்டார். அதற்கு பலனில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த, ரெலோ அமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன், அந்த முச்சக்கரவண்டியில் ஏறி ஒலிவாங்கியை பெற்று அறிவித்தல் விடுத்தார். பேஸ்புக்கில் பதிவிட வேண்டுமென்பதற்காக முன்வரிசைக்கு வந்து, போராட்டத்தை குழப்பாமல், காணாமல் போனோரின் உறவினர்களை முன்வரிசையில் விடும்படி கேட்டார். அவர் கேட்டது, தமிழரசுக்கட்சியினருக்கு எரிச்சை ஏற்படுத்த, நான்கைந்து பேர் முச்சக்கரவண்டியை சூழ்ந்து, அவரை கீழே இழுத்து தாக்கினார்கள். அதில் தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை தவிசாளர் ஒருவரும் உள்ளடக்கம். இன்றைய பேரணி முடியும் வரை, அடிக்கடி மதுசுதனுடன் அந்த தவிசாளர் உள்ளிட்ட கும்பல் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றதை அவதானிக்க முடிந்தது. காணாமல் போனோரின் உறவினர்களான பெண்கள் அறிவிப்பில் ஈடுபட்டு வந்த முச்சக்கர வண்டியின் ஒலிபெருக்கி வயரை தமிழரசுக்கட்சி பிரதேசசபை உறுப்பினர் சத்தியானந்தன் அறுத்தெறிந்தார். பேரணியை குழப்பாமல் பின்னுக்கு செல்லுங்கள் என ஏற்பாட்டு குழு தலைவரான பாதிரியார் மன்றாட்டமாக தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் பலமுறை கேட்டும், அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். பிரதேசசபை உறுப்பினர்களான வட்டிக்கடை ஜீவன், குமாரசிங்கம், சத்தியானந்தன் ஆகிய பிரதேசசபை மக்கள் பிரதிநிதிகளும் அந்த குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலில் நின்றார்கள். அவர்களை விட, கறுப்பு பூனைகளான பல ஆதரவாளர்களும் நின்றார்கள். எவ்வளவு பொறுப்பான… அரசியல் விழிப்புணர்வுள்ள மக்கள் பிரதிநிதிகள் நமக்கு கிடைத்துள்ளனர்! இந்த சம்பவங்களை படம்பிடித்த ஊடகவியலாளர்களுடனும் “அரசியல் ரௌடிகள்“ மல்லுக்கட்டினர். பல்வேறு இடங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அனைத்து ஊடகவியலாளர்களுடனும் மல்லுக்கட்டினர். முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவரை தாக்கினார்கள். மற்ற ஊடகவிலாளர்களை பார்த்து, “எமது செய்திகளை போட்டி, பிச்சையெடுத்து பிழைப்பவர்கள்தானே நீங்கள்“ என அநாகரிகமாக திட்டினார்கள். பேரணி முடிவடையும் வரை ஊடகவியாளர்களை திட்டிக் கொண்டே வந்தது அந்த கும்பல்.

குறித்த கும்பல் சிறிதரனின் அடிவருடிகள் என்பது குறிப்பிடத்தக்து. ஜீவன் எனும் குறித்த பிரதேசசபை உறுப்பினர் வட்டிக்கு பணம் கொடுத்து நாட்டாமை வேலை செய்வதுடன் பல பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.