கொழும்பு கொள்ளுபிட்டிய பகுதியில் பாரியளவிலான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்களிடமிருந்து, 294 கிலோ 49 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இலங்கையில் கைப்பற்றப்பட்ட மிகப் பாரியளவிலான கொக்கேய்ன் தொகை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் இரண்டாயிரத்து 945 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.