ஞாயிறு, 10 மார்ச், 2019

இலங்கையின் ஒரு பகுதியில் கடும் மழை!! மறுபகுதியில் கடும் வெப்பம்!!

நாட்டில் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் வரையில் வெப்பத்துடனான வானிலை நீடிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் வடக்கு கிழக்கில் 15-25 வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி. காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பகுதிகளில் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மதம் மாற்ற வந்த பெண்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்கள் அதிரடி!! (Video)

மதம் மாற்ற வந்த பெண்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்கள் அதிரடி!! (Video)

மன்னார் புதைகுழி முஸ்லீம்களின் மயானமாம்!! இது எப்புடி??

மன்னார் புதைகுழிக்கு முஸ்லீம்கள் உரிமை கோரி தங்களது பல்லாண்டுகால இலங்கை வரலாற்றை கூறி முற்பட்டுள்ளனர் போல தெரிகின்றது. இதோ ஒரு முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்த கருத்துக்கள்.... 

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆதாரங்களுக்கான ஆதார, மையங்களாக,
மீஸான்களும்,சியாறங்களுமே மிஞ்சி உள்ளன, அந்த வகையில் எலும்புக்கூடுகளும், புதைகுழிகளும் கூட வரலாற்றை ஒரே நாளில் புரட்டிப் போடக்கூடிய பலமான ஆதாரங்களாக உள்ளன,

அந்த வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் அண்மைக்காலமாக மன்னார் சதொச பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகள் தொடர்பாக பல ஊகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, ஆனாலும் அவை தொடர்பான காலப்பகுதி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டாலும், சம்பவம் பற்றிய,உறுதியான வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட வில்லை,ஆனால் அவை முஸ்லிம்களுக்குரியதாக உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான ஊக ஆதாரங்களை முன்வைக்கும் பதிவே இதுவாகும்,

#மன்னார்_மாவட்டம்,

மன்னார் மாவட்டம் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்களில் முக்கியமான இடம், அறபுக்கள், இந்திய, ஆபிரிக்க, முஸ்லிம்களும், வியாபாரிகளும் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த இடமாகும், இதன் அத்தாட்சிகளாக இன்றும் அங்குள்ள பெருக்க மரங்களையும், அறபுக்கள் பயன்படுத்திய துறைகளையும், நீண்ட புராதன 40 முழ சியாறங்களான கப்றுகளையும் காண முடியும்,

#மன்னார் #புதைகுழியும், #அறிக்கையும்,

மன்னார் புதை குழியில் இதுவரை 323 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, அதில் 28 சிறார்களுடையதாகும், இவை களனிப் பல்கலைக்கழகப் Prof ,Raj Somadava தலைமையிலான தொல்லியல் குழுவினரால் அகழ்ந்தெடுக்கப்பட்டு காபன் அணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது,

அறிக்கையின்படி குறித்த சடலங்கள் கி்பி,1450-கி்பி.1650 காலப்பகுதிக்குரியன என புளோரிடா வில் உள்ள பீட்டா ஆய்வு மையம் காபன் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது, இதனை மன்னார் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது,

#சர்ச்சைகள்

குறித்த காலப்பகுதியில் இலங்கையில் போர்த்துக்கேய (1505-1658) ஆட்சிக்காலமாகும், இக்காலத்தில் இடம் பெற்ற பாரிய இன அழிப்பு புதை குழியாக இது இருக்கலாம் என உறுதியாக நம்பலாம், ஆனாலும் இவை யாழ்பாண மன்னன் சங்கிலியன் படை எடுப்பில் கொல்லப்பட்ட கிறிஸ்த்தவர்களின் சடலங்கள் என்றும், போர்த்துக்கேய காலத்தில் கொல்லப்பட்ட சைவர்களினது எனவும் சிலரால் ஊகிக்கப்படுகின்றது,

ஆனால் போர்த்துக்கேயரின் பிரதான நோக்கம் மதமாற்றமும், வியாபாரமுமாக இருந்த்தனால் அவை முஸ்லிம்களுக்கு எதிரான இருண்டகாலம் என்பதே வரலாறாகும், ஏனெனில் தமிழர்கள் மதமாற்றத்தை ஏற்றனர், ஆனால் முஸ்லிம்கள் முற்றாக எதிர்த்தனர், அதன்படி நோக்கினால் குறித்த புதை குழி முஸ்லிம்களுடையதாக இருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன,

#வரலாற்று_ஆதாரங்களும்_மறுப்பும்,

1).சங்கிலி மன்னனின் அரச தண்டனை

குறித்த எலும்புக்கூடுகள் சங்கிலி மன்னனால் 1540ல் பாதிரியார் உட்பட கொல்லப்பட்ட 600 பேருடையதாக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வாய்ப்பில்லை, காரணம், அது பேசாலைப்பகுதியில் ” #தோட்ட_வெளி எனுமிடத்தில் ஏற்கனவே அடையாளங்காணப்பட்டு தோட்ட வெளி வேத சாட்சிகளின் அன்னை ஆலயமும் அமைக்கப்பட்டு கத்தோலிக்கர்களால் பராமரிக்கப்படுகின்றது,

இன்னும் ஆரியச் சக்கரவர்த்தியின் வாரிசுகளும் சங்கிலி மன்னனது வரலாற்றை அறிந்தவர்களும், சில யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர்களும் இதனை மறுக்கின்றனர், அதன்படி சங்கிலி மன்னன் குழந்தைகளைக் கொல்ல வில்லை என மன்னனின் வாரிசான ரெமிஜியஸ் கனகராஜா குறிப்பிடுகின்றார், ஆகவே இந்தப் புதை குழிக்கும் சங்கிலி மன்னனது அரச தண்டனைக்கும் தொடர்பில்லை என்ற ஊகத்திற்கும் வர முடியும்,

அடுத்த ஊகமாக கொள்ளப்படுவது ,இது ஒரு புராதன #மயானமாக இருந்திருக்கலாம் என்பது, ஆனால் அது தொடர்பான எந்தப் பதிவுகளும் மன்னார் மாவட்ட அலுவலகங்களில் இதுவரை இல்லை ஆகவே இந்த ஊகமும் நிராகரிக்கப்பட வேண்டியதே,

அவ்வாறாயின் இது யாருடையது,??

குறித்த கேள்விக்கான பதிலை குறித்த புதை குழியில் சடலங்கள் இருந்த அமைப்பு முறையை ஆராய்வதன் மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும்,

1). இங்கு காணப்பட்ட உடல்கள் தலைகள் எல்லாம் ஒரே திசையை நோக்கியும், கால்கள் எல்லாம் ஒரு திசையை நோக்கியும் முறையாக அடக்கப்பட்டிருக்கின்றன, இது இன்றும் முஸ்லிம்கள் அடக்கும் கிப்லாவை நோக்கிய முறைக்கு ஒப்பானது, அத்தோடு இரு உடல்களுக்கிடையில் இடைவெளியும் காணப்படுகின்றது,

இன்னும் சில வேறாக, எலும்புகளாக குவிக்கப் பட்டிருக்கின்றன, இவை காலப்போக்கில் ஏதோ ஒரு மாற்றத்துக்குள்ளாகி இருக்கக் கூடும், அல்லது அவை முஸ்லிம் அல்லாத ஏனைய சைவ, இந்து, பௌத்தர்களுடையதாகவும் இருக்க முடியும்,

இன்னுமொரு அடையாளமாக இவ் உடல்களோடு எவ்வித ஆடை,ஆபரண அலங்காரங்களும் இல்லை.

முஸ்லிம்கள் தமது சடலங்களை ஒரு வெற்றுத்துணியினாலேயே சுற்றுவர்,,ஆனால் ஒரே ஒரு காப்பு வடிவிலான வளையம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, இது கைதிகளாகப் பிடிக்கப்பட்டதன் அடையாளமாகவோ, தளபதிகளின் அடையாளமாகவோ இருக்க முடியும்,

இந்த வகையில் போர்த்துக்கேயரின் மத மாற்றத்திற்கு எதிராக போராடிய மக்களின் புதை குழியாக இது இருக்க முடியும் என்ற ஊகம் இன்னும் வலுக்கின்றது, அது முஸ்லிம்களுக்கே மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது, இறுதிச் சடங்கையாவது தமது சமய முறைப்படி செய்ய எஞ்சி இருந்தவர்களை அனுமதித்து இருக்கவும் முடியும்,

இந்த வகையில் மன்னார் மாவட்ட புதை குழி இலங்கை முஸ்லிம் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாகவும் இருக்கின்றது,

#முஸ்லிம்_வரலாற்று_ஆதாரங்கள்,

போர்த்துக்கேய காலம் இலங்கையில் முஸ்லிம்களின் இருண்ட காலமாக இருப்பதற்கு பல நிகழ்வுகளும், இன அழிப்புக்களும் காரணமாக உள்ளன, அது நாட்டின் பல பாகங்களில் இடம் பெற்றுள்ளது ,

அந்தவகையில் இலங்கையின்பல பாகங்களில் முஸ்லிம் இன அழிப்பு இடம் பெற்றதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்,

அதன்படி,
RL Brohier தனது Historical Series என்ற நூலில் முஸ்லிம்களில் பல பள்ளிவாசல்களும், புனித அடக்கஸ்தலங்களும்,போர்த்துக்கேயரால் தீயிட்டு அழிக்கப்பட்டதாகவும், அதில் Gal Baak என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் முக்கியமானது என்கின்றார்,

அதே போல சமோரியப் பேரரசின் உதவியுடன் குஞ்சலி மரைக்காய தளபதிகள் வந்து சிங்கள மன்னருடனும், மக்களுடனும் இணைந்து 1518ல் போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், அதற்கான பழி வாங்கலை போர்த்துக்கேயர் இன அழிப்புச் செய்து தீர்த்துக் கொண்டனர் எனவும் பதிவுகள் உள்ளன.

இப்பழிவாங்கல்கள் 1613, 1622,1623, 1626 போன்ற காலங்களில் இடம்பெற்றதுடன்,வடக்கின் பன்னல்துறை என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் அழிக்கப்பட்டு 1614ல் டொம் பெட்டோ எனும் தளபதி அவ்விடத்தில் தேவாலயத்தை அமைத்ததாகவும் பதிவுகள் உள்ளன,

இதே போல் 1560-1646 வரை தென்பகுதியிலும் இவ் இன அழிப்பு இடம்பெற்று இருக்கின்றது,இது முஸ்லிம் இருப்பிலும் ,சனத்தொகையிலும் அதிக வீழ்ச்சியைக்கொண்டுவந்த்தற்கான ஆதாரங்கள் உள்ளன,

அதே போல வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் யோகி சிக்கந்தர் தலைமையில் மென்டன்ஷா என்பவனின் படையை இந்துக்களுடன் இணைந்து எதிர்த்தனர், அதிலும் பலர் கொல்லப்பட்டனர், இது 1591ல் கொழும்புத்துறையில் இடம்பெற்றது,

Abeysinghe T, என்ற வரலாற்று ஆய்வாளரின் Jaffna Under the Portuguese என்ற நூலில் யாழ்ப்பாண மன்னராட்சியில் பல தேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் செல்வாக்குடன் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார், அதிலும் கேரளாவைச் சேர்ந்த ” #மாப்பிள்ளை ” முஸ்லிம் குடியினர் அரச சபையில் அதிக இடம்பெற்றிருந்தனர்,

அது்போல சோனர் எனப்பட்ட அறபுக்களும், குஞ்சலிகள் எனப்பட்ட குஜராத்திகளும், பாப்பராவர் எனப்பட்ட ஆபிரிக்கர்களும், மாப்பிள்ளை எனப்பட்ட கேரளாக்களும் அக் காலத்தில் தமது குடியிருப்பை மன்னார் மற்றும் வட இலங்கையில் கொண்டு வாழ்ந்து இருந்தனர்,

#புதிய_ஆய்வுகளும்_நிரூபணங்களும்,

இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாற்றை விடி வெள்ளி பத்திரிகையில் தொடராக, எழுதிவரும் பேராசிரியர் #MSM_அனஸ் தனது புதிய வரலாற்று களத் தேடல்களில் மன்னார் தொடர்பான பல புதிய உண்மைகளை முன்வைக்கின்றார், அதன்படி மன்னார் முத்துக்குளிப்பை கைப்பற்ற போர்த்துக்கேயர் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றதாக்க் குறிப்பிடுவதுடன், “அறுபது மரைக்கால் தாலி அறுபட்ட குளம்” ,மினாறா, போன்ற பகுதிகள் அதிகமாக முஸ்லிம்களை போர்த்துக்கேயர் கொன்ற இடங்கள் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார், இதனை ஒத்த தகவல்கள் எம் ,கே, எச் முஹம்மது (2004) அவர்களின் பதிவுகளிலும் உண்டு,

அதே போல சங்கிலியன் படைகளுடன் இணைந்து முஸ்லிம்கள் போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், படைகளுக்கான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், வரலாறுகள் உண்டு,

#இறுதி_முடிவுகள், ,

இந்த வகையில் பல வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து நோக்குகின்ற போது மன்னார் சதொச பகுதியில் கண்டெடுக்கப்பட்டு ஆய்வை முடிவில் போர்த்துக்கேய கால படு கொலைகள் என அகழ்வாராய்ச்சி அறிக்கை பெறப்பட்டுள்ள புதை குழி, முற்றாகவோ, பகுதியளவிலோ, முஸ்லிம்களுடைய எலும்புக்கூடுகளாக இருப்பதற்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன, அவை எமது மன்னார் பூர்வீக இருப்பின் பலமான அடையாளங்கள்

#நமது_பலவீனம்,

வழமை போன்று முஸ்லிம்களின் வரலாற்று அக்கறை இன்மையும், தொல்லியல் அறிவும், ஆளணியும் இல்லாமையும் இவ்வாறான ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் பற்றிய கண்டு பிடிப்பை ஏனைய சமூகத்தின் உரிமைக் கூடைக்குள் வாரி வழங்கி விடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன,

அந்த வகையில் இது தொடர்பான இன்னும் ஆழமான வரலாற்றைத் தேடுகின்ற போது இவ் ஆதாரங்கள் எமது முன்னோரின் தியாகங்கள் என உறுதிப்படுத்தும் சான்றுகள் மிக இலகுவாக வந்தடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன, ,

#இறுதி_வேண்டுகோள், நாம் #என்ன_செய்யவேண்டும்??

1).கற்றவர்களும், ஆய்வாளர்களும் தமது அறிவையும், தேடலையும் சமூகத்தின் முன்வைப்பது கடமை. அந்த வகையில் பல ஆய்வாளர்கள் தமது சொந்த முயற்சியில் இவ்வாறான தேடல்களை மேற்கொள்கின்றனர், அவ்வாறானவர்களை பண ரீதியாகவும், மன ரீதியாகவும் ஊக்குவிப்பது ஆர்வமுள்ள சமூகத்தின் கடமை ,அவ்வாறான செயற்பாடுகளில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின், தனவந்தர்களும், உலமாக்களும் ,சமூக ஆர்வமிக்கவர்களும்,அமைப்புக்களும், ,உற்சாகமூட்டுவார்களாயின், இது போன்ற பல வரலாற்றுத் தடயங்களை எமது உரிமைக்கான ஆதாரங்களாக்கிக் கொள்ள முடியும்,

2).அடுத்தது, #தென்_கிழக்குப் #பல்கலைக்கழகத்தில் எமக்கான ஒரு தொல்லியல் துறையை (Archeology Department)உருவாக்கி, முஸ்லிம் பார்வையில் தொல்லியலை நோக்குதலும் ,வரலாற்று ஆதாரங்களை மறு பரிசீலனை செய்தலும், இது அரசியல் வாதிகள் ,குறிப்பாக தற்போது பதவியில் இருக்கும் உயர்கல்வி அமைச்சர் ரவூவ் ஹக்கீம், மற்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா செய்ய வேண்
டிய அவசரமான நடவடிக்கை . பதவிக்காலத்தில் இருக்கும்போதே இதனைச் செய்யவேண்டும் இதனை அனைவரும் வலியுறுத்த வேண்டும்,

3).அதே போல் எம்மிடையே இன்று எஞ்சி இருக்கும் சியாறங்களையும், மீஸான்களையும் இயக்க பேதமற்று, அனைவரும் பாதுகாப்பதே எமது இருப்பிற்கான வரலாற்று ஆதாரம், அதற்காக அமைச்சர் ரிஷாட்டின் கைளை பலப்படுத்துவோம் , பேசாலை உட்பட மன்னார் மாவட்டம் முஸ்லிம்களின் பூர்விக பூமி என்பதை அடையாளப்படுத்த அயராது பாடுபடுவோம் இன்றேல் அடையாளமற்ற சமூகமாகவே வாழ்ந்து அழிய வேண்டி வரலாம்,

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA,


யாழில் சீருடைகளுக்குப் பயந்த காலம் போய் இப்போ பிள்ளைகளுக்கு பயந்த காலம் வந்துவிட்டது!! கூறுவது யார்?

அறத்தை போதித்த யாழ்ப்பாண மண்ணில் வாள்கள் பேசுகின்றன.முன்னொரு காலத்தில் சீருடையினருக்கு பயந்திருந்தோம். ஆனால் இன்று எமது பிள்ளைகளைப் பார்த்தே பயப்படும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை ஆளுநரால் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை
இவ்வாறு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீராவியாடியில் இடம்பெற்ற நீதி நூல் தொகுப்புக்கள் அறிமுக விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு மூன்று ஆளுநர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தனர்.ஆனாலும் அவர்களால் வாள்வெட்டு உள்ளிட்டு சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படியாயின் இது வேறு பிரதேசத்தவர்களினால் ஆற்றப்படுகின்றதா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.இந்து சமய அறத்தின் படி வாழ்கின்றவர்களினால் இவ்வாறான இழிவான செயல்களை செய்ய முடியாது.அறத்தை பயிலாமையினாலேயே இவர்கள் மனித நேயம் அற்று இப்படி செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (10.03.2028)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள்  தாமதமாக முடியும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நம்பிக் கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

கடகம்: உணர்ச்சிப்பூர் வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல  செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினரு டன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து  சேமிக்கத்  தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நினைத்ததை முடித்துக்காட்டும் நாள்.

மகரம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். புது வேலைக் கிடைக்கும். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். தடைப்பட்ட வேலைகளை மாறு பட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டு வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டா கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

சனி, 9 மார்ச், 2019

லொறி - பட்டா வாகன விபத்தில் கிளிநொச்சியில் ஒருவர் படுகாயம்!! (Photos)

கிளிசொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் நடந்த விபத்தில் பட்டா வாகனச் சாரதி படுகாயமடைந்துள்ளர். எதிராக வந்த லொறியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Image may contain: sky and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: sky and outdoor

யாழ் நீர்வேலியில் கோர விபத்து!! கணவன், மனைவி படுகாயம்(Photos)

யாழ்.நகரில் இருந்து நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த ஹயஸ்வாகனம் ரயர் வெடித்ததில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள கடையின் கேற்றினை உள்ளே நுழைந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது வானில் எட்டு பேர் பயணித்துள்ளனர் இதில் கணவன் மனைவி இருவருக்கு காயமடைந்துள்ளளனர்.
காயமடைந்தவர்கள் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.





யாழ் ஈச்சமோட்டையில் பொண்ணுக்குட்டிக்கும் செல்லம்மாவுக்கும் கள்ளக்காதல்!! பிறந்த குழந்தைக்கு நடந்தது என்ன?

 85 வருசத்துக்குது முதல் மரமேறுற பொன்னுக்குட்டி சாதாரணமா செய்த வேலையைத்தான் இப்போதய மகப்பேற்று நிபுணர்கள் பெரிய பந்தா காட்டி செய்கின்றார்கள்...

இந்தச் செய்தி 85 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அந்தக்காலத்து தமிழப் பத்திரிகையில் வந்த செய்தியாகும்.

கீழே அந்தச் செய்தி தரப்பட்டுள்ளது.


இலங்கைப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறிஸ்கந்தராஜா ( அதிர்ச்சிப் புகைப்படங்கள்)

கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்தார். அப்பகுதியை நோக்கி இராணுவம் பின்பக்கமாக வருவதை கண்டு அங்கிருந்த பலர் தப்பியோடிவிட்டனர். ஏனையோர் விடுதலைப்புலிகள் என நினைத்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டார்களாம். பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் காந்தன் அவர்களுடைய தலைவெட்டப்பட்ட புகைப்படம் மட்டுமே கிடைத்திருந்தது. ஏனையோர்களின் நிலை இதுவரை தெரியவரவில்லை. இவர்களது விபரங்கள் தெரிந்தவர்கள். புகைப்படங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஒரு வேளை இவர்களையும் கண்டிருக்கலாம்.

புகைப்படம் கண்டெடுக்கப்பட்ட இராணுவமுகாம் ஒரு சித்திரவதை முகாம். இது திருநகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன பிரிவு இயங்கிய இரண்டு வீடுகளே படையினரின் சித்தரவதைமுகாம்களாக இருந்துள்ளது.
………

இந்தமுகாமிற்கு பிடித்துச்சென்று சித்திவதைக்குள்ளான ஒருவரின் வாக்குமூலத்தில் இருந்து…

ஸ்கந்தபுரத்தில் இருந்து வட்டக்கச்சி போவதற்காக சேவியர் கடைச்சந்திக்கு வந்திருந்த கிளிநொச்சியில் வசித்து வந்த(தற்பொழுது எங்கிருக்கின்றார் என்ற தெரியவில்லை) உந்துருளி திருத்துநரும் அவரது மருமகனும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு இம்முகாமில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர். பின்னர் பளைப்பகுதியில் உள்ள ஒரு முகாமிற்கு கொண்டு சென்ற போதே அங்கு ஏற்கனவே பிடித்துச்செல்லப்பட்ட கிளிநொச்சி தபால் அதிபர் இருந்திருக்கின்றார். அரச ஊழியர் என்பதற்காக அவரை படையினர் விடுவிப்பதாக சொல்லியிருந்தார்களாம். தபால் அதிபருக்கு தங்களை நன்கு அறிமுகம் என்பதால் இராணுவத்தினருடன் கதைத்துபடியால் தங்களுக்கு விடுதலை கிடைத்தது என்று தெரிவித்திருந்தார். (இதன் முழுவிபரம் பிறிதொருநாளில் பதிவேற்றுகிறேன்) 8.3.2019



Image may contain: 3 people, people standing and text

யாழ் கொடிகாமத்தில் கோர விபத்தில் இளைஞன் பலியானது ஏன்?? (Photos)

கொடிகாமம் கச்சாய் வீதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. மோட்டார் சைக்களிலில் பயணித்த குலேந்திரநாதன் பிருந்தன் (வயது-19) என்பவரே உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழ் கொக்குவிலில் வாள் வெட்டு!! 60 வயது விதாணையார் வழ வழ, கொழ கொழ

இந்தச் செய்தி 1935ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அந்தக்காலத்து தமிழப் பத்திரிகையில் வந்த செய்தியாகும்.

கீழே அந்தச் செய்தி தரப்பட்டுள்ளது.



யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயாம்!! பொலிசார் செய்த அலங்கோலம்!! (Photos)

கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கச்சாய் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த  மோட்டார் சைக்கிள் சாரதி, தென்மராட்சி “சாவக் குழு” வன்முறைக் கும்பலின் தலைவர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர். கே.பிரியந்தன் (வயது-19) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீதியில் 800 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த விபத்து ஐந்து மணித்தியலங்களாகியும் பொலிஸாருக்குத் தெரியாது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நண்பகல் 12. 30 மணியளவில்  இடம்பெற்று சுமார் ஐந்து மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதுவரை விபத்திற்குள்ளான துவிச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மீட்க்கப்படாது இருந்துள்ளது. துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்.

அவர் விடுமுறை நேரத்தில் பழைய இரும்பு , போத்தல்கள் சேகரித்து விற்பனை செய்து வருபவர். அவ்வாறு சேகரித்த பொருள்களை மூட்டை கட்டியவாறு பயணித்த நிலையில் விபத்துக்குளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் யாரும் உடனடியாக மீட்க முன்வரவில்லை. இதனால் உச்ச வெயிலில் வெகு நேரம் விபத்துக்கு உள்ளானவர்கள் வீதியிலேயே கிடந்துள்ளார்கள்.
பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதேவேளை, விபத்து இடம்பெற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன், விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிளை இருபது பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டது.

விபத்தில் சிக்கிய துவிச்சக்கரவண்டி துண்டு துண்டாக சிதறிய நிலையில் பொலிஸார் மீட்டனர். பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (09.03.2028)

மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3


ரிஷபம்
இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்
இன்று கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்
இன்று உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்
இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5


துலாம்
இன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம்
இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

தனுசு
இன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்
இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்
இன்று விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும் அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.