கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்தார். அப்பகுதியை நோக்கி இராணுவம் பின்பக்கமாக வருவதை கண்டு அங்கிருந்த பலர் தப்பியோடிவிட்டனர். ஏனையோர் விடுதலைப்புலிகள் என நினைத்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டார்களாம். பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் காந்தன் அவர்களுடைய தலைவெட்டப்பட்ட புகைப்படம் மட்டுமே கிடைத்திருந்தது. ஏனையோர்களின் நிலை இதுவரை தெரியவரவில்லை. இவர்களது விபரங்கள் தெரிந்தவர்கள். புகைப்படங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஒரு வேளை இவர்களையும் கண்டிருக்கலாம்.

புகைப்படம் கண்டெடுக்கப்பட்ட இராணுவமுகாம் ஒரு சித்திரவதை முகாம். இது திருநகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன பிரிவு இயங்கிய இரண்டு வீடுகளே படையினரின் சித்தரவதைமுகாம்களாக இருந்துள்ளது.
………

இந்தமுகாமிற்கு பிடித்துச்சென்று சித்திவதைக்குள்ளான ஒருவரின் வாக்குமூலத்தில் இருந்து…

ஸ்கந்தபுரத்தில் இருந்து வட்டக்கச்சி போவதற்காக சேவியர் கடைச்சந்திக்கு வந்திருந்த கிளிநொச்சியில் வசித்து வந்த(தற்பொழுது எங்கிருக்கின்றார் என்ற தெரியவில்லை) உந்துருளி திருத்துநரும் அவரது மருமகனும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு இம்முகாமில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர். பின்னர் பளைப்பகுதியில் உள்ள ஒரு முகாமிற்கு கொண்டு சென்ற போதே அங்கு ஏற்கனவே பிடித்துச்செல்லப்பட்ட கிளிநொச்சி தபால் அதிபர் இருந்திருக்கின்றார். அரச ஊழியர் என்பதற்காக அவரை படையினர் விடுவிப்பதாக சொல்லியிருந்தார்களாம். தபால் அதிபருக்கு தங்களை நன்கு அறிமுகம் என்பதால் இராணுவத்தினருடன் கதைத்துபடியால் தங்களுக்கு விடுதலை கிடைத்தது என்று தெரிவித்திருந்தார். (இதன் முழுவிபரம் பிறிதொருநாளில் பதிவேற்றுகிறேன்) 8.3.2019Image may contain: 3 people, people standing and text