நாட்டில் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் வரையில் வெப்பத்துடனான வானிலை நீடிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் வடக்கு கிழக்கில் 15-25 வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி. காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பகுதிகளில் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.