அறத்தை போதித்த யாழ்ப்பாண மண்ணில் வாள்கள் பேசுகின்றன.முன்னொரு காலத்தில் சீருடையினருக்கு பயந்திருந்தோம். ஆனால் இன்று எமது பிள்ளைகளைப் பார்த்தே பயப்படும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை ஆளுநரால் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை
இவ்வாறு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீராவியாடியில் இடம்பெற்ற நீதி நூல் தொகுப்புக்கள் அறிமுக விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு மூன்று ஆளுநர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தனர்.ஆனாலும் அவர்களால் வாள்வெட்டு உள்ளிட்டு சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படியாயின் இது வேறு பிரதேசத்தவர்களினால் ஆற்றப்படுகின்றதா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.இந்து சமய அறத்தின் படி வாழ்கின்றவர்களினால் இவ்வாறான இழிவான செயல்களை செய்ய முடியாது.அறத்தை பயிலாமையினாலேயே இவர்கள் மனித நேயம் அற்று இப்படி செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.