திங்கள், 11 மார்ச், 2019

சீட்டுக்காசு 2000 ரூபாய் கொடுக்காத விரக்தி!! மட்டக்களப்பில்19 வயது இளம் தாய் துாக்கில் (Photos)

மட்டக்களப்பில் யுத்தகாலத்தில் கிராமபுறங்களில் ஆயுதக்குழுக்கள் ஆட்சேர்ப்பு பீதியில் சிறுவயதில் திருமணம் முடித்தார்கள் அப்பொழுது ஏற்றுக்கொள்ள கூடியதாகயிருந்தது.இப்பொழுதும் சிறுவயது திருமணங்கள் மலிந்து காணப்படுவது குறைந்த பாடில்லை.அதிகமாக சிறுவயது திருமணங்கள் செங்கலடி பிரதேசத்திலுள்ள மயிலவெட்டுவான் ,பாலர்சேனை,ஆயித்தியமலை ,ஈரலகுளம்,வாகனேரி,உறுகாமம் ,பகுதிகளிலே உள்ளது,இப்பகுதி மருத்துவ மாது கர்ப்பணி கிளினிக் நிலையங்களில் உள்ள தரவுகளில் காணலாம்,
எவளவுக்கு சிறுவயது திருமணம் நடைபெறுகின்றதோ அவளவுக்கு விவாகரத்தும் தற்கொலையும் நடைபெறுகின்றது.உரிய வயதில் குடும்ப சுமையை சமாளிக்கு பக்குவம் ,கணவன் மனைவியிடையான புரிந்துணர்வு அற்று காணப்படுகின்றது.
இதனால்தான் இன்று மற்றுமொரு தற்கொலை சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பில் சம்பவம்.

மேசன் தொழில் செய்துவரும் முரளீதரன் என்ற இளைஞன்,
தனது 17 ஆவது வயதிலும், ஜானு என்ற யுவதி தனது ஆவது 15 வயதிலும் திருமணம் முடித்து தற்போது மூன்று வயதுடைய பெண் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய நிலையில்,

குடும்பச்சுமைகளை எவ்வாறு சமாளிப்பதென்றே தெரியாத பருவத்தில், சுமைகளை தலையில் தூக்கி வைத்ததால் ஏற்பட்ட வினையே தற்கொலை.

கணவனின் வருமானத்துக்கேற்ப செலவினை வகுக்க தெரியாத பருவத்தில்,
ஆடைக் கொள்வனவு முதல் இன்னோரன்ன தேவைகளை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி ஜானு,
மாதாந்தம் 2000 /=, 200/=என சீட்டுக்காசி கட்டுவதற்கும் சேர்ந்ததால், நாளடைவில் இவற்றுக்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட தற்கொலைக்கு சென்றிருக்கிறார் என கணவர் முரளிதரன் தெரிவித்தார்.

, மணிவாசகர் வீதி, மாவடிவேம்பு -02,ஐ சேர்ந்த, சிவானந்தம் ஜானு (19) என்ற இளம் தாயே இவ்வாறு.
இன்று (10 /03) காலை 10.00 மணியளவில் தனது வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்தவராவார்.

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and people sittingImage may contain: one or more peopleImage may contain: 1 person, smiling, outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoor

யாழ் பொன்னாலை ஐஸ் தொழிற்சாலைக்கு பன்னாலையில் நீர் எடுப்பதற்கு தடை


 நீர்கொழும்பில் உள்ள கம்பனி ஒன்றினால் பொன்னாலையில் இயக்கப்படும் ஐஸ் தொழிற்சாலைக்கு அளவெட்டி - பன்னாலையில் தண்ணீர் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பிரதேச மக்களாலும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுப்பதால் தமது பிரதேச நன்னீர் வளம் பாதிக்கப்படும் என்பதாலேயே குறித்த நிறுவனம் தண்ணீர் எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நீர்கொழும்பில் உள்ள சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரின் கம்பனியின் பெயரால் பொன்னாலைச் சந்தியில் ஐஸ் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு ஐஸ் உற்பத்தி இடம்பெற்று வருகின்றது. இதற்காக வலி.மேற்கு மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்குள் உள்ள கிணறுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான லீற்றர் நீர் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில், அளவெட்டி – பன்னாலை – நகுலேஸ்வரம் வீதியில் மேற்படி கம்பனியின் பெயரில் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் குழாய்க் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு சமீபமாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் மலசலகூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தங்குவதற்கு ஏற்ற வகையில் சிறிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பவுஸர் வாகனம் சென்று வருவதற்கு ஏதுவாக அங்கு புதிய தார் வீதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கம்பனியின் செலவிலேயே இந்த வீதியும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இம்மாதம் 3 ஆம் திகதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி குழாய்க் கிணற்றில் இருந்த முதன் முதலாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பிரதேச மக்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து அவர்களும் மக்களும் இணைந்து 5 ஆம் திகதி தண்ணீர் எடுக்க முற்பட்டபோது நேரடியாக அங்கு சென்று நீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்தினர். அத்துடன், அவர்களின் ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டன. இதன்போதே அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்தது.

இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கும் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களும் அங்கு சென்று விடயங்கள் தொடர்பாகக் கேட்டறிந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

நிலத்தடி நீர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிமேல் அங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டாம் என குறித்த நபர்களுக்கு மக்களால் அறிவுறுத்தப்பட்டது.

Image may contain: one or more people, tree and outdoorImage may contain: 3 people, people standing, tree, outdoor and natureImage may contain: 5 people, people standing and outdoorImage may contain: one or more people, tree, outdoor and natureImage may contain: 4 people, people standing, outdoor and nature

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (11.03.2028)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில்  வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்: கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் புதிய வர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.  உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்துபெருமைப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

கடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உற வினர், நண்பர்களின் பாச மான விசாரிப்புகள் ஆறுதலாக இருக் கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாக னத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் திடீர்திடீரென்று எதை யோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவி செய்வ தாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை  வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச் சியும், நண்பர்களால் ஆதாய மும் உண்டாகும். வியாபா ரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட் டும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.  உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: தன்னிச்சையாக சில  முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: குடும்பத்தில் சந் தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்ப டுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி கள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

ஞாயிறு, 10 மார்ச், 2019

பூநகரிக் காட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டில் இராணுவச் சிப்பாய் பலி!!

வன்னிக் காட்டுக்குள் கட்­டுத் துவக்­கில் அகப்பட்டு படு காயமடைந்த இரா­ணு­வ சிப்­பாய் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்­பில் கிளிநொச்சி பூந­க­ரிப் பொலி­ஸார் தெரி­விக்கையில்,

பூந­கரி இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றும் இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர் நேற்று மாலை காட்­டுக்­குச் சென்றவேளை அங்கே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத் துவக்­கில் அகப்­பட்­டுள்­ளார்.

இதனால் இரா­ணு­வச் சிப்­பா­யின் ஒரு காலில் குண்டு துளைத்­து அவர் படுகாயமடைந்தார். படு­கா­ய­ம­டைந்த இரா­ணு­வச் சிப்­பாய் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளதாக தெரிவித்தனர்.




கஞ்சா போதையில் இளைஞனை கசக்கிப் பிழிந்த யாழ்ப்பாணப் பொலிஸ்!! நடந்தது என்ன?

மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செத்து விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதில் இளைஞனை தாக்கிய பொலிஸார் மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்தாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.



 

பதுளையில் 17 வயது யுவதியைக் கர்ப்பமாக்கிய 57 வயதுக் கிழவன் !!

பதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுளை பிரதேசத்தை சேர்ந்த பிம்பிசார திஸாநாயக்க என்ற 57 வயதான நபரே கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதியை பலவந்தப்படுத்தி பல முறை இந்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளார். அவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான குறித்த யுவதி தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இதற்கு முன்னர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்று உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானுக்கு இவ்வளவு ரசிகைகளா?? மட்டக்களப்பில் பிள்ளையானின் ரசிகைகளின் திருவிளையாடல் (Photos)

கிழக்கினை மீட்போம் என்னும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏற்பாடுசெய்த சர்வதேச மகளிர் தினம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை மட்டக்களப்பு விஜயா திரையரங்கு முன்பாக மாபெரும் மகளிர் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியானது மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடி சந்தியை வந்தடைந்து அரசடி சந்தியில் உள்ள தேவநாயகம் மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த கிழக்கை மீட்போம் என்னும் தலைப்பிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி பாரதி கெனடி,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,சர்வதேச தொடர்பாளர் துரைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச மகளிர் தின பிரகடனம் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகரினால் வாசிக்கப்பட்டதுடன் மகளிர் தினம் தொடர்பான விசேட உரைகளும் நடைபெற்றன.





































யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.