இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மார்ச், 2019

வன்னி நெடுங்கேணியில் 35 லட்சம் கப்பம் கேட்டு 8 வயதுச் சிறுவன் கடத்தல்!! பெரும் பதற்றம்!!

வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த சிறுவன் தனது தாயாருடன் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். அதன்பின் தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

சிறுவன் செல்லும் போது அவுஸ்ரேலியாவில் உள்ள தனது கணவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தாயார் உரையாடி முடிந்த பின் சிறுவன் சென்ற வீட்டிற்கு சென்ற போது அங்கு சிறுவன் வரவில்லை என சிறுவனின் அப்பப்பா தெரிவித்துள்ளார்.

அதன்பின் இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை.

இதன்பின் நேற்றையதினம் காலை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், சிறுவனை சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன்,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு கடப்பட்டுள்ளவராவார்.


வியாழன், 7 மார்ச், 2019

தமிழ்சிறுமி மீது தமது பாலியல் சேட்டையை!! முஸ்லிம் காவாலி நையப்புடைப்பு!! (Video)

 ஏறாவூர் முஸ்லிம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் காடையன் ஒருவன் போதைப்பொருளை பாவித்து ஏறாவூர் எல்லை அருகிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பின் சவுக்கடி பாடசாலை சென்ற சிறுமியை தனது மகளுக்கு மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதளவு போதையை பாவித்து  இவன் வக்கிரத்தை நிறைவேற்ற முயன்றவேளை அங்குள்ள தமிழ் இளைஞர்களால் குறித்த முஸ்லிம் காமப்பிசாசுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட்டு ஏறாவூர் போலிசில் ஒப்படைக்கப்பட்டார்.

ஏறாவூர் முஸ்லிம் பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்தமையால் இப்பகுதியை அண்டிய எல்லை தமிழ்கிராமங்களில் பெண்கள் ,சிறுமிகள்,வயோதிபர்கள் நடமாட அச்சமான சூழ்நிலை காணப்படுகின்றது.

இப்பொழுது தமிழர் கிராமங்களில் ஏதாவது ஒரு நோக்கத்தில் நுழைந்து கிராமத்தின் கட்டமைப்பை சீர்குழைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது,

எனவே உங்கள் கிராமங்களில் சந்தேகத்திற்கு இடமான வெளிநபர்கள் நடமாடினால் அவதானித்து அந்த அந்த கிராமத்து இளைஞர்கள் தமது ஊரை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ் இளைஞர்களின் கடமையாகும்.

 வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber





Image may contain: 1 person, standing and outdoorImage may contain: 1 person, standingImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people standing and outdoor

யாழ் சங்கானையில் பெரும் எடுப்பில் நடக்கும் விபச்சாரம்!! துணை போவது யார்?

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம் நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள அப்பகுதி மக்கள் அங்கு நடைபெறும் சமூக சீரழிவை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இச் சமூக சீரழிவு தொடர்பில் இலங்கை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சங்கானை பிரதேச செயலரிடமும் மக்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

வலி.மேற்கு சங்காணை பிதேச செலர் பிரிவில் உள்ள ஜே.169 கிராம சேவையாளர் பிரிவில் தனி நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றார்.

அத்துடன் குறித்த விப்பனையகத்தில் மதுபானங்களை நுகர்வதற்கும் அனுமதி வழங்கி வருகின்றார்கள்.மேலும் சில பெண்களை அங்கு அழைத்து வந்து விபச்சார நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாட்டினால் அங்கு உள்ள சிறுவர்கள் பெண்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

குறித்த நபருடைய பெறுப்பற்ற செயற்பாடு அங்குள்ள இளைஞர்களும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுவதாக அமைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எயுடுத்து அப்பகுதி மக்களின் பாதுபாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி ஜே.169 கிராம சேவையாளர், சங்காணை பிரதேச செயலர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அப்பிரதேச மக்கள் அனைவரும் இணைந்து கையெப்பம் இட்டு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.






பாதிரிகளை பதறவைத்த சங்கிலி!! மன்னார் புதை குழி எலும்புகள் கூறுவதென்ன?? (புகைப்படங்கள்)

ஆதாரபூர்வமாக மீண்டெழும் தமிழர் வரலாறு!
எழுதப்பட்டுள்ள தமிழர்களின் வரலாறுகள் புனைவுகள் அல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிறூபித்திருக்கிறது மன்னார் புதைகுழி! வரலாற்றோடு தொடர்பு பட்ட பல சம்பவங்களுக்கும் மன்னார் புதைகுழிக்கும் தொடர்புகள் இருப்பது இதனூடாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
எதேச்சையாக மன்னார் சதோச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப்புதைகுழியின் எலும்புக்கூடுகளின் காபன் அறிக்கை அது கி.பி 1400 தொடக்கம் கி.பி 1700 வரையான காலப்பகுதிக்குறியதென்று வந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழர் வரலாறு மீண்டெழ சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் ஆங்கிலேயர் காலம் வரை யாழ் இராசதானி மீதும் வன்னி ராஜ்யங்கள் மீதும் பல்வேறு போர்கள் இடம்பெற்றிருந்தன அவை வெறுமனே வரலாற்று கதைகள் என்ற ரீதியிலேயே இதுவரை பார்க்க்கப்பட்டது இப்போது இந்த புதைகுழி அவைகள் கதைகள் அல்ல நிஜங்கள் என தெரியவந்திருக்கிறது.
இதே காலப்பகுதியில் மன்னாரோடு தொடர்பு பட்ட வரலாற்று சம்பவங்கள் சில:-

No photo description available.
1) 1540ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகிய மன்னாரில் போர்த்துக்கேயக் குருமாரின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முதலாம் சங்கிலி எடுத்த தீவிர நடவடிக்கைகளால் மதமாற்றம் செய்யப்பட்ட 800 மன்னார் குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போர்த்துக்கேயக் குருமார், யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்கும்படி கோவாவில் இருந்த போர்த்துக்கேய அரசப்பிரதிநிதிக்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்தனர். இந்தியாவில் இருந்த போர்த்துக்கேயரின் ஆட்சிப்பகுதிகளைச் சுற்றியிருந்த தாயக அரசுகளின் பயமுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததாலும், அவர்களின் வணிக நோக்கங்களுக்கு யாழ்ப்பாண இராச்சியம் எவ்வித வாய்ப்புகளையும் வழங்காததினாலும், யாழ்ப்பாணத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் உற்சாகம் காட்டவில்லை. சளைக்காத குருமார் போர்த்துக்கேயப் பேரரசன் வரை இந்த விடயத்தை எடுத்துச் சென்றனர். பேரரசனும் யாழ்ப்பாண அரசனைத் தண்டிப்பதற்கான ஆணையை கோவாவில் இருந்த அரசப் பிரதிநிதிக்கு அனுப்பியிருந்தான். எனினும் குருமார் விரும்பிய அளவு வேகமாக எதுவும் நடக்கவில்லை.







1558ல் டொம் கான்சுட்டன்டீனோ டி பிரகன்சா போர்த்துக்கேய அரசப்பிரதிநிதியாக கோவாவுக்கு வந்தான். புறப்படுமுன், யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பில் போர்த்துக்கேய அரசன் மூன்றாம் ஜோன் முன்னைய அரசப் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய ஆணை வேறு போர்களில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததனாலோ, பிற காரணங்களாலோ நிறைவேற்றப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிறித்தவத்துக்கு வேண்டிய ஆதரவை வழங்குவதில் மெத்தனம் காட்டப்படுவது குறித்து குருமார் முறைப்பாடு செய்வதாகவும் கூறிய போர்த்துக்கேய அரசி கத்தரீனா, இந்த விடயத்தில் சிறப்புக் கவனம் எடுக்குமாறு பிரகன்சாவைக் கேட்டுக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண அரசன் மன்னாரில் செய்த கொடுமைகளுக்காகவும், தொடர்ந்து கிறித்தவத்துக்கு எதிரான அவனது நடவடிக்கைகளுக்காகவும் அவன் இன்னும் தண்டிக்கப்படாமல் இருப்பது வருத்ததுக்கு உரியது என்றும் அரசி எடுத்துக்கூறி இருந்தார். எனவே இந்தியாவுக்கு வந்த பிரகன்சா தானே யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்துச் சென்று போர்த்துக்கேய அரசனின் ஆணையை நிறைவேற்றத் தீர்மானித்தான்.

2) போர்த்துக்கேயரின் இரண்டாம் படையெடுப்பு:- 1591 அக்டோபர் இறுதியில் மன்னாரில் இருந்து, 1400 போர்த்துக்கேயரும், 3000 சிங்களவரும் அடங்கிய பெரும் படையுடன் அந்தரே பூர்த்தாடோ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டான். இந்தப் படையெடுப்புக்காக மன்னார்ப் பகுதியில் முத்துக்க்ளிப்பினால் பெறப்பட்ட 30,000 பர்தாங்கும், மன்னார்க் கத்தோலிக்கரிடம் கடனாகப் பெறப்பட்ட 20,000 பர்தாங்கும் பயன்படுத்தபட்டதாகத் தெரிகிறது 43 கப்பல்களிலும், 200க்கு மேற்பட்ட தோணிகளிலும் இப்படைகள் சென்றன. யாழ்ப்பானத்து அரசன் இப்படைகள் ஊர்காவற்றுறையில் இறங்கும் என எதிர்பார்த்து அங்கே பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தான். ஆனால், போர்த்துக்கேயப் படைகள் கொழும்புத்துறையை அடைந்தன. கப்பல்களில் இருந்து கனரகப் பீரங்கிகள் தாக்குதல் நடத்த முதலில் 150 போர்த்துக்கேயரும், 200 சிங்களப் படையினரும் கரையில் இறங்கினர். எதிர்த்தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணப் படைகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியைச் சந்தித்தன. முதலியார் பிராங்கோவும் 250 பேரும் இறந்தனர். ஏராளமான ஆயுதங்கள் போர்த்துக்கேயர் வசமாயின. பின்னர் போர்த்துக்கேயரின் படைகள் முழுவதும் கரையிறங்கின. கரையோரமாக நடந்துவந்த படைகள் பண்ணைக்கருகில் முகாமிட்டன. இப்பகுதியில் இருந்த முசுலிம்களின் வணிக நிலையில் இருந்த களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டிருந்த அரிசி, நெல் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.

3) மூன்றாவது யாழ் இராசதானி மீதான படையெடுப்பு:-
யாழ்ப்பாணத்தின் முடிக்குரிய வாரிசான எதிர்மன்னசிங்கனின் மகன் சிறுவனாக இருந்ததால் அவன் சார்பில் அரசை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இறுதியில் சங்கிலி குமாரன் அரச நிர்வாகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். உள்நாட்டுப் பிரச்சினையாக உருவான இது போர்த்துக்கேயரின் தலையீட்டினால் தீர்த்துவைக்கப்பட்டது. சங்கிலியைப் பகர ஆளுனனாகப் போர்த்துக்கேயர் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் விரைவிலேயே சங்கிலி ஒழுங்காகத் திறை செலுத்தவில்லை என்றும் 3 ஆண்டுகளுக்கான திறை நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டினர். அதே வேளை ஒப்பந்தங்களுக்கு எதிராக சங்கிலி தமிழ்நாட்டில் இருந்து படைகளையும் ஆயுதங்களையும் பெற்று வருவதாகவும் ஐயங்கள் எழுந்தன.[1]

இலங்கையில் போர்த்துக்கேயரின் கட்டளைத் தளபதியாக இருந்த கான்சுட்டன்டினோ டி சா டி நோரஞ்ஞா யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பிலிப்பே டி ஒலிவேராவை தலைமைத் தளபதியாக இப்பணியில் ஈடுபடுத்தினான்.

கொடுக்கவேண்டியிருந்த திறையை அறவிடுவது என்ற போர்வையில், 1619ம் ஆண்டில் தளபதி ஒலிவேரா தலைமையிலான படைகள் மன்னாரில் இருந்து தரைப்பாதை ஊடாகபூநகரிக்கு வந்தன. இப்படையில் மூன்று கப்பித்தான்களின் தலைமையில் மூன்று கம்பனி போர்த்துக்கேயப் போர்வீரர்களும், இன்னொரு கப்பித்தானின் தலைமையில் 500 சிங்கள வீரர்களும் உட்பட 5,000 படை வீரர்கள் வரை இருந்தனர். இப்படைகள் சிறிய தோணிகளில் நீரேரியைக் கடந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்தன. அங்கிருந்து பண்ணைப் பகுதியில் இருந்த புதுமைமாதா தேவாலயப் பகுதிக்கு வந்த ஒலிவேராவின் படைகள் அங்கே முகாமிட்டன. உண்மையில், போர்த்துக்கேயர் கோரும் பணம் முழுவதையும் யாழ்ப்பாண அரசன் செலுத்தாவிடின் அவனைக் கைது செய்வதற்கும், எதிர்த்தால் கொல்வதற்குமான இரகசிய ஆணையுடனேயே ஒலிவேரா யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தான். ஒலிவேரா தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் அந்தோனியோ டி எஸ். பேர்னாடினோ என்பவரைச் சங்கிலியிடம் தூது அனுப்பினான்.

திறை நிலுவையைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், யாழ்ப்பானத்தில் இருந்த வடக்கர் படைகளையும், கரையார் தலைவன் வருணகுலத்தானையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. வடக்கர் படைகளையும், வருணகுலத்தானையும் போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பது துரோகம் என்பதால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சங்கிலி, ஒலிவேரா யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற மூன்று நாட்களுக்குப் பின் அவர்களைத் திருப்பி அனுப்புவதாக வாக்களித்தான். முதலில் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட சங்கிலி, சில நாட்களின் பின்னர், ஒலிவேரா படைகளுடன் பூநகரிக்குத் திரும்பிச் சென்றால் 5,000 பர்தாவ் பணம் அனுப்புவதாகவும், மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதேயளவு பணம் தரப்படும் என்றும் அதற்கு மேல் இப்போது தரமுடியாது என்றும் தெரிவித்தான். சங்கிலியின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமையாததால் ஒலிவேரா யாழ்ப்பாணத்தை தாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினான்...

இவ்வாறான பல வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோடு மன்னார் தொடர்புபட்டிருக்கிறது. இந்த புதைகுழி அந்த வரலாற்றின் உண்மைக்கு சான்றாதாரமாக இருக்கிறது. இது குறித்து மேலும் ஆய்வுசெய்து தமிழர்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக நிறூவவேண்டியது தமிழ் பேசும் வரலாற்று ஆய்வாளர்களின் கடமையாகும். மன்னார் புதைகுழி உங்களுக்கு வரலாற்றின் ஒரு கதவை திறந்துவிட்டிருக்கிறது.

சங்கிலி மன்னால் கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளே மன்னாரில் மீட்கப்பட்டன? வெளியாகியது அதிர்ச்சித் தகவல்!!

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

மன்னாரில் போர்த்துக்கேயர் காலத்தில் கிறீஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்களை சங்கிலி மன்னன் நல்லுாரில் இருந்து படைகளை அனுப்பி கொன்று குவித்தான் என்பது வரலாறு.... 

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையானது என்று கார்பன் அறிக்கை சொல்லி இருக்கிறது.. அக்காலப் பகுதியில்தான் -1544 ஆம் ஆண்டு கிறிஸ்தவத்தை தழுவிய 600 - 700 பேரை சங்கிலி மன்னன் படுகொலை செய்திருந்தான்

யாழில் கஞ்சா விற்கின்றார்கள் என தகவல் கொடுத்தவரை கைது செய்த காவாலி பொலிஸ்!!

யாழில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் குறித்து தகவல் வழங்கிய ஒருவரை, கஞ்சா விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்துறையினர் கைது செய்தது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. பொய்க்குற்றச்சாட்டு கூறியே, தகவல் வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி அதிக அக்கறை காண்பித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறையினரும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கஞ்சா கடத்தல்காரர்கள் பற்றிய தகவல் வழங்கியமைக்காக, கிளிநொச்சி மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சர்ச்சை தோன்றியது.

இப்பொழுது யாழிலும் இதேவிதமான சர்ச்சை தோன்றியுள்ளது. யாழில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் வழங்கிய ஒருவரே கைதானதாக கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மூலம், எழுத்து மூல முறைப்பாடு வழங்கினார்.

முற்பகல் அவர் முறைப்பாடு வழங்க, பிற்பகலில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவரது உந்துருளியில் இருந்து திடீரென கடதாசி சுருள் ஒன்றை பொலிசார் மீட்டு, அதில் கஞ்சா இருந்ததாக கூறினார்கள் என்றும், சோதனை எதுவும் செய்யாமல் தாமே வைத்தவர்களை போல எடுத்தார்கள் என்றும் கைதானவர் தெரிவித்துள்ளார். அந்த சுருள் எப்படி தனது மோட்டார்சைக்கிளில் வந்ததென்று தனக்கு தெரியாதென்றும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடுவதில்லை, தேவையானால் வைத்திய பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என அவர் தர்க்கித்துள்ளார்.

நீண்ட இழுபறியின் பின்னர், ஓரிரு மணித்தியாலயத்தின் பின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு சார்பாகவே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்தார்களா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.


சாவகச்சேரி பொலிசாரின் துணையுடன் ஒளித்துத்து திரிந்த ஆவா குழு ரவுடிக்கு நடந்த கதி!! (Photos)

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவா் ஒருவா் கடந்த 1 வருடமாக தேடப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை தனங்கிள ப்பு பகுதியில் வைத்து வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.
“ஆவா குழுவிலிருந்து செயற்பட்ட இந்தச் சந்தேகநபர், மானிப்பாய் தனுறொக் என்பவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளைத் தாக்கி வந்த கும்பலைச் சேர்ந்தவர்.
அத்துடன் கடந்த ஆண்டு மருதனார்மடம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் வாள்களுடன் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த இந்த நபர் தப்பித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் தனங்களப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருக்கின்றார் என்று யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலான அணியினர் நேற்று நள்ளிரவு சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.

பொலிஸார் சுற்றிவளைத்ததை அறிந்த சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்த வேளை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள்கள் இரண்டு, முகமூடிக் கப்புகள் மூன்றும் கைப்பற்றப்பட்டன.

சாவகச்சேரி, சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்களிலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச்செயல்களிலும் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் உள்ளன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பொலிஸார் சந்தேகநபருக்கு அடைக்கலம்
இதேவேளை, சாவகச்சேரி பொலிஸாரால் சந்தேநபர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட வாள்களை நீதிமன்றில் சமர்ப்பிக்காமல்
அவரை பிணையில் விடுவிப்பதற்கான சாவகச்சேரி பொலிஸாரால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் கைது செய்யப்படாமல் மறைந்திருப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் உதவினர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனாலேயே யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள தனங்களப்புக்குச் சென்று சந்தேநபரைக் கைது செய்து வந்தனர் என்றும் தெரிகிறது.



யாழில் மாணவிகளின் “பின்பகுதியை” தட்டும் ஆவா குழு காவாலிகள்..!! (Photo)

யாழ் மானிப்பாயில் ரீயூசன் வகுப்பு செல்லும் பிள்ளைகளுக்கு பின்னாலும் , அந்தோனியார் கோயிலுக்குச் செல்லுகின்ற பெண்களுக்கு பின்னாலும்,  நீதிமன்றால் ஆவா குழு என தண்டனை பெற்ற காவலிகள் சென்று தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்று பின்பகுதியை தட்டிவிட்டு செல்வதும், தகாத வார்த்தைகளால் பெண்களை வர்ணிப்பதும் பெண்பிள்ளைகளின் பெற்றோர் தட்டி கேட்பதற்கு பயப்படுவதும் சர்வ சாதாரணமாக நடை பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றர். இதற்கு மானிப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தா விடின் அசம்பாவிதம் நடப்பது உறுதி


வடக்கு கல்வி செயலாளருக்கு எந்த நேரமும் அந்த சிந்தனையா? (Photos)


நாட்டில் பல பிரதேசங்களில் பெயர்ப்பலகைகளில், அறிக்கைகளில் என பல வழிகளில் தமிழ் எழுத்துக்களும் வசனங்களும் பிழையாக எழுதப்படுவதை தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோம்.
எழுத்துப்பிழையானது பல சந்தர்ப்பங்களில் பாரதூரமான கருத்துப்பிழைகளையும் ஏற்படுத்துவதை அவதானிக்கின்றோம்.
அண்மையில் சிவராத்திரி விடுமுறை தொடர்பாக வட. மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் இரண்டு இடங்களில் இவ்வாறு பிழைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழை வளர்க்க அதிக கரிசனையுடன் செயற்படும் வடக்கு மாகாணத்தில் இவ்வாறான பாரதூரமான பிழைகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அவர் இதுகுறித்து கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர்.

மட்டக்களப்பில் சாரதியின் அசாத்திய திறமை!! மயிரிழையில் உயிர்தப்பிய தாயும் பிள்ளையும்!! (Video)

சாரதியின் திறமையினால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது.

புதன், 6 மார்ச், 2019

யாழ் ஆயரை எச்சரித்து அடக்கினார் மன்னார் ஆயர்!! மீண்டும் மறுப்பறிக்கை!!

யாழ்ப்பாண மறை மாவட்டமும் மன்னார் மறைமாவட்டமும் சகோதர மறைமாவட்டங்களாக தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பம் ஆகும்.

எனவே மன்னார் மறைமாவட்ட குருக்களே, துறவிகளே, இறைமக்களே நான் வெளியிட்ட அறிக்கையில் ஏற்பட்ட தவறுகளுக்காகவும், அதனால் தங்கள் மனங்களை புண்படுத்தியதாகவும் நான் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் மறைமாவட்டத்தின் கண்டன அறிக்கை கடந்த சில தினங்களின் முன்னர் வெளியானதும், மன்னார் மறை மாவட்த்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. யாழ் மறைமாவட்டத்திற்கும், ஆயர் மற்றும் குரு முதல்வருக்கும் எதிராக மன்னார் கத்தோலிக்கர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். மன்னார் மறைமாவட்டத்தின் பேஸ்புக் பக்கத்திலும் பகிரங்கமாக கண்டனங்களை, பலர் பதிவிட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்புக்களிற்கு பணிந்தே யாழ் மறைமாவட்டம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வட மாகாணப் பாடசாலைகள் எதிர்வரும் சனிக்கிமை (09.03.2019) நடைபெறும்!!

சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் பாடசாலைகள் நடைபெறாததால் பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 09.03.2019 சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

தமிழா்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்த ஜெனிவா செல்கிறாரா வடமாகாண ஆளுநா்..??

ஜெனிவாவில் ஸ்ரீலங்கா தமது முரண்பாடுகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கோருவதற்கான மூவர் அடங்கிய குழுவில் அன்மையில் வடமாகாண ஆளுனராக நியமனம் வழங்கப்பட்ட தமிழரென அடையாளப்படுத்தப்படும் சுரேன் ராகவன் மைதிரிபால சிறீசேனாவினால் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் உள்ளடங்கலாக 3 போ் கொண்ட குழுவை ஐ. நா.சபைக்கு அனுப்பவுள்ளதாகவும், இந்த குழு இலங்கைக்கு மேலும் கால அவகாச ம் வழங்கும் கோாிக்கையினை ஐ.நாவில் சமா்பிக்கும் எனவும் ஜனாதிபதி மைத்தி ாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.

இன்று காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பத்திாிகை ஆசிாியா்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.

ஜனாதிபதியைக் கொலைச் சதியில் நாலகவிற்கு எதிராக போதுமானளவு சாட்சிகள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமான அளவு சாட்சிகள் இருப்பதாக சட்டமா அதிபரிற்கு பதிலாக ஆஜரான பிரதி சொலிஸ்டார் ஜெனரல் தீலிப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (06) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிரபல பாதாள உலக தலைவரான மாகந்துர மதூஷ் மற்றும் பிரபல பாடகர் அமல் பெரேராவுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் அதனை மிகவும் இரகசியமான முறையில் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி சொலிஸ்டார் ஜெனரல் தீலிப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துக்களை விசாரித்த கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, அடுத்த விசாரணையின் போது நாலக டி சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள சாட்சிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திடம் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாலக டி சில்வாவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சத்துருகொண்டானிலும் மீட்கப்படுகின்றன எலும்புக்கூடுகள்!!(Photos)

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) காலை குழியொன்று தோண்டப்பட்டபோதே மேற்படிமனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சத்துருக்கொண்டானில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்ட பகுதியிலேயே இந்த எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அப்பிரதேசத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறித்த எச்சங்கள் சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






மன்னார் ஆயரின் அறிக்கைக்கு திருகேதீஸ்வர நிர்வாகம் கொடுத்த பதிலடி இதோ!!

மன்னார் ஆயர் பச்சைப் பொய்யான அறிக்கை கொடுத்திருப்பதாக கூறி திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் கொடுத்த அறிக்கை இது.

https://scontent-sjc3-1.xx.fbcdn.net/v/t1.0-9/53374350_10213686101963190_656909282213625856_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent-sjc3-1.xx&oh=1efa14fa60428dc98994957111ab4e6a&oe=5CE35A49

ஊரெழுச்சி திட்டத்தில் கொள்ளையடிக்கும் வன்னி நாட்டாமை சிறிதரன்!!

கம்பரெலிய( ஊரெழுச்சி) திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் செப்ப னிடும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனா்.

கிளிநொச்சியில் கம்பரெலிய திட்டத்தை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சின் போது ரணிலுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்கான வெகுமதிகளில் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு எனக் கூறி கம்பரெலிய திட்டம் ஊடக பெருந்தொகை பணம் சன்மானமாக வழங்கப்பட்டிருந்தது.

அப் பணித்தில் முடிந்தவரையான கொள்ளையடிப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் சிறிதரனின் ஊழல் முறைகேடு உச்சம் பெற்றுத் திகழ்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதித் திருத்தப் பணிகளின் போது, முறையான தொழிநுட்ப மேற்பார்வை இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நியமங்களுக்கு அமைவாகபணிகள் மேற்கொள்ளப் படாது, தரமற்ற அபிவிருத்திப் பணிகளை ஒப்பந்தகாரர்கள் முன்னெ டுத்து வருகின்றனர்.

வீதி அபிவிருத்திப் பணிகளின் தரம் தொடர்பில் முறையான தொழிநுட்ப மேற்பார் வை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, மாவட்ட உயரதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் வீடுபுகுந்து தாக்குதல்!! முகமூடியணிந்த நபர்களால் பதற்றம் (Photos)



முகங்களை மூடிய மூன்று பேர் கொண்ட குழு வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன், மூதாட்டி ஒருவைரயும் குழு தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வீதியை பல நாட்களாக மூடி சீட்டாடும் காவாலிகள்!! (Photos)

நான்கு நாட்களாக பகல் இரவாக வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இவ்வீதியில் மரண வீட்டு நிகழ்வொன்றிறற்காக நிழல் குடை ஒன்று வீதியின் குறுக்காக போடப்பட்டுள்ளது.
இதனால் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் அவ்வீதியினால் பயணம் செய்வோர் மாற்று வீதியை பயன்படுத்துகின்றனர்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி நற்பிட்டிமுனை கிராமத்தை இணைக்கும் இவ்வீதி மூடப்பட்ட நிலையில் அந் நிழல் குடையில் கரம், சீட்டாட்டம் போன்ற விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் குறித்த வீதியால் செல்வோரை மாற்று வீதியால் செல்லுமாறு அச்சுறுத்துகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர காரணமாக அமையும்.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மட்டக்களப்பிலிருந்து கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்து ஒருவர் பலி!! (Photos)

க்கரைப்பற்று - அட்டாளைச்சேனையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கண்டி - மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்து கடுகண்ணாவில் இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து நடத்துனரே உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Image may contain: one or more peopleImage may contain: one or more people and nightImage may contain: one or more people and people standing

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.