யாழ்ப்பாண மறை மாவட்டமும் மன்னார் மறைமாவட்டமும் சகோதர மறைமாவட்டங்களாக தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பம் ஆகும்.

எனவே மன்னார் மறைமாவட்ட குருக்களே, துறவிகளே, இறைமக்களே நான் வெளியிட்ட அறிக்கையில் ஏற்பட்ட தவறுகளுக்காகவும், அதனால் தங்கள் மனங்களை புண்படுத்தியதாகவும் நான் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் மறைமாவட்டத்தின் கண்டன அறிக்கை கடந்த சில தினங்களின் முன்னர் வெளியானதும், மன்னார் மறை மாவட்த்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. யாழ் மறைமாவட்டத்திற்கும், ஆயர் மற்றும் குரு முதல்வருக்கும் எதிராக மன்னார் கத்தோலிக்கர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். மன்னார் மறைமாவட்டத்தின் பேஸ்புக் பக்கத்திலும் பகிரங்கமாக கண்டனங்களை, பலர் பதிவிட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்புக்களிற்கு பணிந்தே யாழ் மறைமாவட்டம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.