மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) காலை குழியொன்று தோண்டப்பட்டபோதே மேற்படிமனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சத்துருக்கொண்டானில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்ட பகுதியிலேயே இந்த எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அப்பிரதேசத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறித்த எச்சங்கள் சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.