யாழ் மானிப்பாயில் ரீயூசன் வகுப்பு செல்லும் பிள்ளைகளுக்கு பின்னாலும் , அந்தோனியார் கோயிலுக்குச் செல்லுகின்ற பெண்களுக்கு பின்னாலும்,  நீதிமன்றால் ஆவா குழு என தண்டனை பெற்ற காவலிகள் சென்று தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்று பின்பகுதியை தட்டிவிட்டு செல்வதும், தகாத வார்த்தைகளால் பெண்களை வர்ணிப்பதும் பெண்பிள்ளைகளின் பெற்றோர் தட்டி கேட்பதற்கு பயப்படுவதும் சர்வ சாதாரணமாக நடை பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றர். இதற்கு மானிப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தா விடின் அசம்பாவிதம் நடப்பது உறுதி