நாட்டில் பல பிரதேசங்களில் பெயர்ப்பலகைகளில், அறிக்கைகளில் என பல வழிகளில் தமிழ் எழுத்துக்களும் வசனங்களும் பிழையாக எழுதப்படுவதை தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோம்.
எழுத்துப்பிழையானது பல சந்தர்ப்பங்களில் பாரதூரமான கருத்துப்பிழைகளையும் ஏற்படுத்துவதை அவதானிக்கின்றோம்.
அண்மையில் சிவராத்திரி விடுமுறை தொடர்பாக வட. மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் இரண்டு இடங்களில் இவ்வாறு பிழைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழை வளர்க்க அதிக கரிசனையுடன் செயற்படும் வடக்கு மாகாணத்தில் இவ்வாறான பாரதூரமான பிழைகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அவர் இதுகுறித்து கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர்.