வியாழன், 7 மார்ச், 2019

யாழ் சங்கானையில் பெரும் எடுப்பில் நடக்கும் விபச்சாரம்!! துணை போவது யார்?

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம் நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள அப்பகுதி மக்கள் அங்கு நடைபெறும் சமூக சீரழிவை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இச் சமூக சீரழிவு தொடர்பில் இலங்கை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சங்கானை பிரதேச செயலரிடமும் மக்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

வலி.மேற்கு சங்காணை பிதேச செலர் பிரிவில் உள்ள ஜே.169 கிராம சேவையாளர் பிரிவில் தனி நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றார்.

அத்துடன் குறித்த விப்பனையகத்தில் மதுபானங்களை நுகர்வதற்கும் அனுமதி வழங்கி வருகின்றார்கள்.மேலும் சில பெண்களை அங்கு அழைத்து வந்து விபச்சார நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாட்டினால் அங்கு உள்ள சிறுவர்கள் பெண்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

குறித்த நபருடைய பெறுப்பற்ற செயற்பாடு அங்குள்ள இளைஞர்களும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுவதாக அமைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எயுடுத்து அப்பகுதி மக்களின் பாதுபாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி ஜே.169 கிராம சேவையாளர், சங்காணை பிரதேச செயலர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அப்பிரதேச மக்கள் அனைவரும் இணைந்து கையெப்பம் இட்டு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.