திங்கள், 4 மார்ச், 2019

அப்பாவி அகதியும்..!! ஐபிசி முதலாளியும்..!!

அப்பாவி அகதி – ஐயா வணக்கம். நான் திருச்சியில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை விடுதலை செய்யுமாறு கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.

ஐபிசி முதலாளி – ஓ! அப்படியா? சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவி அகதி – என்னுடைய கையில் ஐபிசி ஊடகம் இருந்திருந்தால் பத்தாயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருப்பேன் என்று கனடாவில நீங்கள் பேசினதை அறிந்தேன். அப்படியென்றால் எனக்காகவும் கொஞ்சம் குரல் கொடுக்க முடியுமா?

ஐபிசி முதலாளி – எனக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று விருப்பம்தான் தம்பி. ஆனால் அப்பறம் இந்திய உளவுப்படைகாரங்கள் கோவிப்பாங்களே. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தனீங்கள். அகதிகளுக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா?

ஐபிசி முதலாளி- தம்பி நான் ஒரு முதலாளி என்பதை நீர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். போட்ட பணத்தை எப்படி இரட்டி மடங்காக எடுக்கலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அகதிகளுக்கு உதவுவதால் எனக்கு என்ன லாபம்?

அப்பாவி அகதி – என்ன ஐயா இப்படி பேசறீங்க? வன்னியில் உள்ள முன்னாள் போராளிகளை எல்லாம் சந்தித்து உதவி வருகிறீர்கள் என்று கூறுகிறார்களே?

ஐபிசி முதலாளி – அது எனக்கு தரப்பட்ட அஜெண்டா தம்பி. தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக குழப்புறவேலை எனக்கு தரப்பட்டிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! உங்களின் ஊடகத்தை தமிழ் தேசிய ஊடகம் என்கிறாங்களே?

ஐபிசி முதலாளி – தேசிய ஊடகமும் இல்லை. தேசிக்காய் ஊடகமும் இல்லை. அதெல்லாம் என்னை வைத்து பிழைப்பதற்கு என்கூட இருக்கிறவங்கள் கட்டி விடுகிற கதைகள்.

அப்பாவி அகதி – சரி ஐயா. ஒரு சின்ன வேண்டுகோள். உங்களை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக என்ரை மகள் காப்பிலியுடன் ஓடிவிட்டாள் என்று வீடீயோ மட்டும் போட்டிடாதையுங்கோ.

ஐபிசி முதலாளி – சரி சரி பார்க்கலாம்.

கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு கண்டிக்கின்றோம் – யாழ்.மறை மாவட்டம் அறிக்கை

திருக்கேதீஸ்வரம் வீதி வளைவு சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அதிர்ச்சியையும்,கவலையையும், கண்டணத்தையும் தெரிவிக்கின்றோம் என்று கத்தோலிக்க யாழ்ப்பாண மறை மாவட்டம்
தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த, சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி
ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டணத்தையும் தெரிவிக்கின்றோம்.

தமது சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ள தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

எல்லா மதங்களையும், மதத்தவர்களையும் அன்பு செய்யவேண்டும், மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்கு போதிக்கிறது.

இந்நிலையில் இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழர்களாகிய நாம் மதவேறுபாடுகளின்றி சகோதரத்துவத்தில் வளரவேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும்
இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும், நடைபெற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டுமென்று வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழுமவாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம். இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்த தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம்
மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.

தவிர்க்கமுடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுக்கள் மூலமாக அவற்றை தீர்த்துவைக்க முயற்சிசெய்யவேண்டுமேயொழிய வன்முறைகளிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது.

அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம்

குரு முதல்வர்

யாழ்ப்பாணம் மறைமாவட்டம்


வணக்கதுக்குரிய மன்னார் குரு முதல்வர் சோசை அவர்களுக்கு வணக்கம்!!





மன்னார் மாவட்ட குரு முதல்வரின் அறிக்கை வாசிக்காதவர்குள் இங்கே அழுத்தவும்.
https://www.vampan.org/2019/03/blog-post_45.html


 
 தங்கள் அறிக்கை வாசித்தேன் .

 மத நல்லெண்ணத்துக்கு எதிராக நடந்தார்கள் என்று நீங்க சுட்டி காட்டி இருக்கும் விடயம் " புனித லூதூர் கோயிலுக்கு முன்னால் இருந்த வீதி வளைவை புதுப்பிக்க வந்தமையே "

தங்கள் கருத்தில் ஒரு நியாயம் இருக்கு . ஏற்று கொள்கிறேன்

இருந்த வளைவு ஒன்றை , உங்க சேர்ச் க்கு முன்னால் இருந்தததை புதுப்பிக்க வந்தது மத நல்லிணக்கத்தை குழப்பும் என்றால் , மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டு , மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே #சிவபூமி என்றழைக்கும் வகையில் சிவபூமியா இருந்த எங்கள் இடத்தில பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு வந்த போர்த்துகேயர் கட்டிய சேர்ச் மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைச்ச செயல் தானே ???

ஒரு வளைவு க்கும் சேர்ச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்க உணராதவர் அல்ல . வளைவு ஏற்படுத்திய மத நல்லிணக்க குழப்பம் பெரிதா ? சிவ பூமியில் சேர்ச் கட்டியதால் நல்லிணக்க குழப்பம் பெரிதா ? என்பதை தாங்களே ஊகித்தறிந்து கொள்ளுங்கள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறது எங்கள் பழமொழி .அதாவது கோயில் இல்லாத ஊர்களே இல்ல . கோயில்கள் இருந்த ஊர்களில் எல்லாம் சேர்ச் கட்டப்பட்டு இருக்கே அதெல்லாம் மத நல்லிணக்கத்தை குழப்பும் செயல் என்று மக்கள் இடிக்க வெளிக்கிட்டால் நிலைமை என்னாகும் ??

மனதுக்குள் ஒரு ஓரத்தில்  எனக்கு ஒரு பயம் இருந்து கொண்டிருந்தது உங்கள் அறிக்கை வாசிக்கும் வரை . " உண்மையில் இது எங்கட நடுநிலைவாதிகளும் , நல்லிணக்கவாதிகளும் சொல்கிற மாதிரி நாங்க தப்பாக நினைத்து கொண்டு கதைக்கிறமோ என்று

ஆனால் உங்கள் அறிக்கை என் பயத்தை போக்கிவிட்டது . ஒரு குறிப்பிட்ட போதகரால் மட்டும் வழிநடத்தப்படவில்லை என்பது தெட்ட தெளிவாகிறது .

ஏனெனில் உங்கள் அறிக்கையில் எந்த இடத்திலும் நடந்த சம்பவத்துக்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்கவில்லை

கசைவத்தின் கொடியாக பிரகடனப்படுப்பட்ட , ஏலவே இனத்தின் கொடியாக நூற்றாண்டு காலமாக இருந்த கொடி காலால் மிதிக்கப்பட்டதுக்காவது மன்னிப்பு கேட்பீங்க என்று நினைத்தேன் . ஆனால் அதையும் செய்ய நீங்க தயார் இல்லை எனினும் இறுதியில் நல்லிணக்கத்தை பேண அழைப்பு விட்டு இருக்கிறீங்க

இது எப்படி இருக்கு தெரியுமா ? அண்மையில் ரணில் வந்து " மறப்போம் மன்னிப்போம் " என்று சொன்னதுக்கு சமனானது

எனினும் தங்கள் அறிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்!! மன்னார் மாவட்ட ஆயர் அறிக்கையால் அதிர்ச்சி!!

ஆக மொத்தம் மன்னார் மறை மாவட்ட ஆயர் மத தீவிரவாதத்தை வெள்ளை அடிப்பாதாக உள்ளது. சம்பவ இடத்து கிறிஸ்தவ தேவாலயம் அமைந்த இடமே திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணி என நீதி மன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பல அரசியல் தலையீடு மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக தீர்ப்பை பல வருட காலமாக இழுத்தடிக்கப்படுகின்றது.

Image may contain: textImage may contain: textமன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் அறிக்கை
*********************************************
மன்னார் மாந்தை பகுதியில் ஆலய இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டபூர்வமற்ற செயல்பாட்டில் இறங்குவது கண்டிக்கப்பட வேண்டியது.

மன்னார் மாந்தைப் பகுதியில் ஆலயக் காணி, குளம் போன்ற வழக்கு கொழும்பு
மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும்
இவ்வேளையில் ஒரு சில இந்து மதத்தலைவர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக இந்து
மக்களை தூண்டிவிட்டு மன்னாரில் இந்து கத்தோலிக்க மக்களின் ஒற்றுமையை
சீர்குழைத்து வருவதாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்
தெரிவித்துள்ளது.

மன்னார் மாந்தைப் பகுதியில் இரு சமூகத்தினரிடையே நிலவியுள்ள முறுகல் நிலை
தொடர்பாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் விடுத்திருக்கும்
அறிக்கையில்

மன்னார் மாந்தை ஆலய காணி, குளம் உட்பட்டிருக்கும் வழக்கு ஒன்றில்
இவ்விடத்தில் வீதி மற்றும் வளைவு சம்பந்தமாகவும் பிரஸ்தாபிக்கப்பட்ட
நிலையில் கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில்
இருந்து வருகின்றது.

இது இவ்வாறு இருக்க சிவராத்திரி தினத்தை சாட்டாக வைத்து மன்னார் மாந்தை
ஆலயத்துக்கு முன்பாக மாந்தைப் பகுதியில் புதிதாக நிலையான வளைவு ஒன்று
அமைப்பதற்கான நடவடிக்கையை இந்து சமய நிர்வாகம் நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.

இவ் வழக்கில் இருக்கும் ஒரு முக்கியஸ்தர் இவ் இடத்தில் வளைவை அமைப்பில்
பின்னனியில் இருந்து செயல்படுவதாலேயே இவ் வளைவு அமைப்பதற்கான
முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றின் தீர்ப்பு வருவதற்கு முன் இந்த வளைவு
அமைப்பது ஒரு தன்னிச்சையான செயல்பாடாக அமைந்துள்ளது.

இதனால் இந்த செயல்பாட்டினால் கத்தோலிக்க மக்களின் மனம் புண்பட்டதினதால்தான் நேற்று முன்தினம் (03.03.2019) ஞாயிற்றுக் கிழமை
இந்து கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஒரு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலுவையிலிருக்கும் இவ் இடம் சம்பந்தமான வழக்கு தீர்ப்பு வரும் வரைக்கும் இரு பகுதினரும் பொறுமையாக இருந்து செயல்பட வேண்டியிருப்பதற்கு
பதிலாக ஒரு சமூகத்தினரை தூண்டிவிட்டு சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டதாலேயே இரு சமூகத்தின் மத்தியில் தற்பொழுது முறுகல் நிலை தோன்றியுள்ளது.

அதுமட்டுமல்ல சிலர் உண்மைநிலை அறியாமல் சமூக வளை தலங்களில் கத்தோலிக்கரே
முதலில் இருந்த வளைவை உடைத்ததாகவும் கத்தோலிக்கராலேயே பிரச்சனை
ஆரம்பிக்கப்பட்டதாகவும் தவறான பதிவுகளை வெளியிட்டு வருவது கண்டிக்கப்பட
வேண்டியதொன்றாகும்.

உண்மையான நிலை என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பை இன்னும் எட்டாமல் மாந்தை
ஆலயத்துக்கு முன்பாக கனகரக வாகனம் மூலம் நிலையான வளைவு ஒன்றை
அமைக்கப்பட்டபோதே அமைக்கப்பட்ட வளைவை தடுத்து நிறுத்த கத்தோலிக்கர்
முற்பட்டனர்.

கடந்த காலங்களில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை பிரதான பாதையில்
இவ்வாறான தற்காலிக வளைவு இடப்பட்டு பின் அது தற்பொழுது நிலையான வளைவாக
அமைக்கப்பட்டபோது கத்தோலிக்கர் செறிந்து வாழும் இவ் பகுதியில் இவர்கள்
அவற்றுக்கு எதிராக எந்த செயல்பாட்டிலும் இறங்கவில்லை என்பதையும்
இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

ஆனால் தங்கள் சுய இலாபத்துக்காக ஒரு சில இந்து சமய தலைவர்கள் இந்து
மக்களை தவறான வழியில் வழிநடத்தி கத்தோலிக்க மக்கள் மீது தேவையற்ற பழி
சுமத்தி வருகின்றனர்.

ஆகவே எவராக இருந்தாலும் உரியவர்களிடம் சரியான விபரங்களை கேட்டறிந்து
அவற்றை வெளியிடுவது சிறந்ததாகும். இவ்வாறு இருக்குமாகில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டிலே குழப்ப நிலை தோன்றாது இருப்பதற்கு இது வழி சமைக்கும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அவனா இவன்?? கேதீஸ்வர வளைவு அழிப்பில் முன்நின்ற ஒருவன்தான் இவன்!! (Photos)


திருக்கேதீஸ்வர சந்தியில் சிவராத்திரிக்காக அமைக்கப்பட்ட வளைவை தகர்த்த குழுவில் இவனும் ஒருவன்.... பெயர் தாருசாந்த். இவனது முகப்புத்தகம் இதுதான்.


Image may contain: 3 people, people standing and stripes

கேதீஸ்வர வளைவை அகற்ற முன்நின்ற பாதிரி பொம்பிளைக் கள்ளன்!! புலிகளால் தண்டனை பெற்றவன்!!


வங்காலை பங்குக்குரிய மார்கஸ் பாதிரியார் கடந்த 6 மாதங்களாக கடமையாற்றுகிறார்.இவர் செட்டிக்குளம் பகுதியில் இதற்கு முதல் கடமையாற்றினார் ரிசாத் அமைச்சரின் மூலமாக பல சலுகைகளைப்பெற்றார். இவரின் சொந்த இடம் எழுத்தூர். இவர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டிவிரிச்சான் பகுதியின் பாதராக கடமையாற்றினார். அக்காலத்தில் பெண்கள் விடயத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கைது செய்யப்பட்டதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு யோசப் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார். வாங்கலையில் உள்ள தமிழ் மக்களின் 3000ற்கு மேற்பட்ட வாக்குகளில் கணிசமானவற்றை ரிசாத்துக்கு எடுத்துக்கொடுப்பதில் இந்த பாதிரியாருக்கும் பெரும் பங்கு உண்டு..

திருக்கேதீஸ்வரத்தில் மீண்டும் ஏறியது நந்திக் கொடி!! (Photos)


திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ மதவெறியர்களால் நேற்று அராஜகமாக பிடுங்கியெறியப்பட்ட வளைவு நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஆலய நுழைவாயிலில் மீண்டும் நந்திக் கொடிகள் ஏற்றப்பட்டு சைவ எழுச்சி ஏற்படுத்தப்பட்டது.

வளைவு பிடுங்கியெறியப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்தச் சம்பவத்தால் சைவத்தமிழர்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் இவ்விடயம் உடனடியாகவே நீதிவானின் கனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட நீதிவான் வளைவினை மீண்டும் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதுடன் வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர், அங்குள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய தொண்டர்கள், சைவ மகா சபையின் தொண்டர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர் இணைந்து இன்று நண்பகல் 12 மணிமுதல் வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வளைவை மீண்டும் அமைப்பதற்கு ஆலய நிர்வாகம், சைவ அமைப்புக்களுடன் அமைச்சர் மனோ கணேசனும் கடும் முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people, people smiling, sky and outdoorImage may contain: one or more people and skyImage may contain: 2 people, people standing and outdoorImage may contain: 2 people, people standing, sky, beard and outdoorImage may contain: one or more people, people sitting, shoes and outdoorImage may contain: 3 people, people standing and outdoorImage may contain: one or more people, people standing, sky, outdoor and natureImage may contain: 1 person, standing, sky and outdoor

திருக்கேதீஸ்வரத்தில் மீண்டும் அதே இடத்தில் வளைவை அமைக்க நீதிமன்றம் அனுமதி!!

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக திருக்கேதீஸ்வரம் வளைவை அமைக்குமாறும்.எதிர்வரும் 5ம் திகதி இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் நீதிமன்றில் ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் சிவனுக்கு எதிராக ஜேசுவின் படை நடவடிக்கை இன்று மீண்டும் தொடங்கியது!! (Photos)

மன்னாரில் சிவராத்திரியைக் கொண்டாட விடாதவாறு கிறீஸ்தவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் மன்னாரில் மாதசொரூபத்தை வாகனத்தில் ஏற்றியவாறு பாதிரிகள் திரிவதாகவும் சைவர்களை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க முற்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image may contain: car, sky, cloud and outdoor
 Image may contain: sky and outdoor
நந்திக்கொடியை ஏறி மிதித்தவரின் விபரம் வெளியாகியது. 

நந்தி கொடியை காலால் மிதிப்பவர் ஜேசு (இவரது மனைவி கிராம அலுவலர்), blue colour t-shirt அமலேஸ் (மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர் SK store keeper)

Image may contain: 2 people, people standing and outdoor

பூநகரியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்களில் விபத்து!! இளைஞன் சிதறிப் பலி!! (video)

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு, எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரிலிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்திருந்தனர்.

இதன்போது பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு மேலும் 3 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீடியோவை பார்க்க முடியாதவர்கள் யுரியூப் கணக்கை ஆரம்பித்த பின்னர்
https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber

இணைப்பிற்கு சென்று  Subscript செய்த பின்னர் பார்வையிடலாம். 

யாழில் டாண் ரீவி குகநாதனுக்கும் அங்கஜனுக்கும் இடையில் குடும்பிச் சண்டை உக்கிரம்!!

யாழ்.குடாநாட்டினில் டாண் தொலைக்காட்சி மற்றும் கெப்பிடல் தொலைக்காட்சிகளிற்கிடையேயான கேபிள் இணைப்பு மோதல் உச்சம் பெற்றுள்ளது.

டாண் ரீவி கோத்தபாயாவின் பினாமியாக குகநாதன் என்பவனால் நடாத்தப்பட்டு வருகின்றது. இதே வேளை கெப்பிட்டல் ரீவி மகிந்தவின் மகனுடன் நெருக்கமாக இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் நடாத்தப்பட்டு வருகின்றது.

டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கூட்டமைப்பின் வசமுள்ள யாழ்.மாநகரசபை மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.அத்துடன் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்களை அகற்றியும் வருகின்றது.

குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயனின் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்கள் இன்றும் யாழ்.மாநகர எல்லைக்குள் நாட்டப்பட்டுள்ளது.கெப்பிடல் தொலைக்காட்சிக்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரியே வழங்கியுள்ளார்.

அதேவேளை டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன் மைத்திரியின் போதைப்;பொருளிற்கு எதிரான அணியின் இணைப்பாளராக(?) நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாநகர துணை முதல்வர் செய்த முறைப்பாட்டையடுத்து காவல்துறை அதனை இன்று தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு முறுகல் நிலை தோன்றியிருந்தது.சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றிருந்த டாண் ரீவி ஊடகவியலாளருடன் அங்கயனின் ஆதரவாளர்கள் முரண்பட்டுமுள்ளனர்.



கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு உடைப்பின் பின் டெனீஸ்வரன்?? அதிர்ச்சித் தகவல்!! (Video)



திருக்கேதீஸ்வரத்தில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு உடைப்பின் பின்னணியில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரனின் ஆதரவும் உள்ளதாகவும் வளைவை உடைத்தவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டாலும் தான் ஆயராகுவதாக டெனீஸ்வரன் உறுதி மொழி கொடுத்த பின்னரே மன்னார் ஆயரின் அனுசரனையும் அப்பகுதி பங்குத் தந்தையும் கிறீஸ்தவர்களும் குறித்த வளைவை அடித்து நொருக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மன்னாரில் கிறீஸ்தவர்களின் வாக்குகளைக் கவரும் நோக்கிலேயே டெனீஸ்வரன் இவ்வாறான கேவலங்களைச் செய்து வருகின்றார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.இதே வேளை சம்பவம் இடம்பெற்று ஒரு நாள் கழிந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது சுமந்திரனு்ககுப் பயந்து வாய் மூடி உள்ளதாக மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள பாதிரியார் டெனீஸ்வரனின் மிக நெருங்கிய நண்பன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Image may contain: 1 person, beard and outdoor

Image may contain: 2 people, people standing and outdoorImage may contain: one or more people, sky and outdoorImage may contain: 2 people, people standing and outdoorImage may contain: 2 people, people standing and outdoorImage may contain: one or more people, sky and outdoor

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (04.03.2028)

மேஷம்:  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள். 

ரிஷபம்: கணவன்- மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சகோதர வகை யில் இருந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.    

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பதுநல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக்கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.
உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிகஉரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்: : எதிர்பாராத சில வேலைகளை இன்று முடித்து காட்டுவீர்கள். சகோதரி உதவுவார். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப்புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற் கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தன்னம்பிக்கை கூடும் நாள்.  

தனுசு: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். புதிய சிந்தனைகள் மன தில் தோன்றும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள்-. பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம்  கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால்உங்களை அறியாமலேயேஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்கவேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

ஞாயிறு, 3 மார்ச், 2019

கொக்குவில் பகுதி வீட்டுக்கு கடிதம் கொடுத்து ஆவா குழுவின் திருவிளையாடல்!!

யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாகுழுவால் குறித்த வீட்டின் சிசிடிவி காணொளியை அகற்றுமாறு கூறி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கடிதம் இன்று கொக்குவில், ஆடியபாதம் பகுதியை சேர்ந்த செல்வரன்சன் என்பவருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தங்க வீட்டுக்கு முன்னாடி ஈக்கின்ற (வாசலுக்கு முன்னாட்டி) கமராவை தாமதிக்காமல் உடனடியாக கழற்ற்வும், அல்லது வீதி பாக்காமல் உள்ளே பூட்டவும் நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க. ஆகவே உடனடியாக மாத்தவும் இந்த எச்சரிக்கை மீறினால் உங்கள் மீது தாக்குதல் விரைவாக நடாத்தப்படும்.”


திருக்கேதீஸ்வரத்தில் கிறீஸ்தவர்களால் நடந்த அலங்கோலம்!! (அதிர்ச்சிக் வீடியோ)

திருகேதிஸ்வரத்தில் வரவேற்பு வளைவு அமைக்க கிறிஸ்தவர்கள் தடை சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரதுக்கு செல்லும் பாதையின் பிரதான வீதிக்கு அண்மையில் மாந்தை சந்தி பகுதியில் வரவேற்பு வளைவை அமைக்க கூடாது என சிலர் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வரவேற்பு வளைவு பலவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. அது துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதனை அடுத்து புதிய வளைவு அமைக்க முயற்சித்த வேளையே கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் தடுத்து அழித்தனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Image may contain: one or more people, people standing, people walking and outdoor
Image may contain: 1 person, standing, walking, crowd and outdoorImage may contain: one or more people, outdoor and nature




Image may contain: one or more people, people standing, crowd and outdoor

திருப்பதியில் ரணிலின் திருவிளையாடல் இதோ!! எடைக்கு எடை தங்கம் கொடுத்தாராம் (Photos)

திருப்பதிக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கிய பிரதமா் ரணில், இரவல் சீலையில் இதுநல்ல கொய்யகமாம்.. திருப்பதி தாிசனத்திற்கு சென்றிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையான் தாிசனத்தில் ஈடுபட்டதுடன் தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை வழங்கியிருக்கின்றாா். இந்த தரிசனத்துக்காக நேற்று மாலை திருப்பதிக்கு சென்ற பிரதமர், அவரது பாரியார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்துள்ளார். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்திற்காக ஏழுமலையான் ஆலய முன் வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசிக்க அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரவது பாரி யாருக்கும் ஆசி வழங்கினர். இதனையடுத்து தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை பிரதமா் திருப்பதிக்கு வழங்கியதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.

திருகோணமலையில் விபச்சார விடுதி இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்ட காட்சிகள் (Video)

திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையில் மசாஜ் நிலையங்களுக்கு அனுமதி கொடுக்காத நிலையில் சட்ட விரோதமாக தொழிற்பட்ட மசாஜ் நிலையங்கள் அப்பகுதியில் உள்ள உணர்வு மிக்க இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த மசாஜ் நிலையங்களில் மசாஜ் என்னும் போர்வையில் விபச்சாரமே நடைபெற்று வந்ததாக  அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Image may contain: indoorImage may contain: one or more people, sunglasses, selfie and close-upNo photo description available.No photo description available.Image may contain: one or more people, people standing and nightImage may contain: one or more peopleImage may contain: 1 person

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.