திருப்பதிக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கிய பிரதமா் ரணில், இரவல் சீலையில் இதுநல்ல கொய்யகமாம்.. திருப்பதி தாிசனத்திற்கு சென்றிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையான் தாிசனத்தில் ஈடுபட்டதுடன் தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை வழங்கியிருக்கின்றாா். இந்த தரிசனத்துக்காக நேற்று மாலை திருப்பதிக்கு சென்ற பிரதமர், அவரது பாரியார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்துள்ளார். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்திற்காக ஏழுமலையான் ஆலய முன் வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசிக்க அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரவது பாரி யாருக்கும் ஆசி வழங்கினர். இதனையடுத்து தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை பிரதமா் திருப்பதிக்கு வழங்கியதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.