திங்கள், 4 மார்ச், 2019

வணக்கதுக்குரிய மன்னார் குரு முதல்வர் சோசை அவர்களுக்கு வணக்கம்!!





மன்னார் மாவட்ட குரு முதல்வரின் அறிக்கை வாசிக்காதவர்குள் இங்கே அழுத்தவும்.
https://www.vampan.org/2019/03/blog-post_45.html


 
 தங்கள் அறிக்கை வாசித்தேன் .

 மத நல்லெண்ணத்துக்கு எதிராக நடந்தார்கள் என்று நீங்க சுட்டி காட்டி இருக்கும் விடயம் " புனித லூதூர் கோயிலுக்கு முன்னால் இருந்த வீதி வளைவை புதுப்பிக்க வந்தமையே "

தங்கள் கருத்தில் ஒரு நியாயம் இருக்கு . ஏற்று கொள்கிறேன்

இருந்த வளைவு ஒன்றை , உங்க சேர்ச் க்கு முன்னால் இருந்தததை புதுப்பிக்க வந்தது மத நல்லிணக்கத்தை குழப்பும் என்றால் , மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டு , மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே #சிவபூமி என்றழைக்கும் வகையில் சிவபூமியா இருந்த எங்கள் இடத்தில பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு வந்த போர்த்துகேயர் கட்டிய சேர்ச் மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைச்ச செயல் தானே ???

ஒரு வளைவு க்கும் சேர்ச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்க உணராதவர் அல்ல . வளைவு ஏற்படுத்திய மத நல்லிணக்க குழப்பம் பெரிதா ? சிவ பூமியில் சேர்ச் கட்டியதால் நல்லிணக்க குழப்பம் பெரிதா ? என்பதை தாங்களே ஊகித்தறிந்து கொள்ளுங்கள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறது எங்கள் பழமொழி .அதாவது கோயில் இல்லாத ஊர்களே இல்ல . கோயில்கள் இருந்த ஊர்களில் எல்லாம் சேர்ச் கட்டப்பட்டு இருக்கே அதெல்லாம் மத நல்லிணக்கத்தை குழப்பும் செயல் என்று மக்கள் இடிக்க வெளிக்கிட்டால் நிலைமை என்னாகும் ??

மனதுக்குள் ஒரு ஓரத்தில்  எனக்கு ஒரு பயம் இருந்து கொண்டிருந்தது உங்கள் அறிக்கை வாசிக்கும் வரை . " உண்மையில் இது எங்கட நடுநிலைவாதிகளும் , நல்லிணக்கவாதிகளும் சொல்கிற மாதிரி நாங்க தப்பாக நினைத்து கொண்டு கதைக்கிறமோ என்று

ஆனால் உங்கள் அறிக்கை என் பயத்தை போக்கிவிட்டது . ஒரு குறிப்பிட்ட போதகரால் மட்டும் வழிநடத்தப்படவில்லை என்பது தெட்ட தெளிவாகிறது .

ஏனெனில் உங்கள் அறிக்கையில் எந்த இடத்திலும் நடந்த சம்பவத்துக்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்கவில்லை

கசைவத்தின் கொடியாக பிரகடனப்படுப்பட்ட , ஏலவே இனத்தின் கொடியாக நூற்றாண்டு காலமாக இருந்த கொடி காலால் மிதிக்கப்பட்டதுக்காவது மன்னிப்பு கேட்பீங்க என்று நினைத்தேன் . ஆனால் அதையும் செய்ய நீங்க தயார் இல்லை எனினும் இறுதியில் நல்லிணக்கத்தை பேண அழைப்பு விட்டு இருக்கிறீங்க

இது எப்படி இருக்கு தெரியுமா ? அண்மையில் ரணில் வந்து " மறப்போம் மன்னிப்போம் " என்று சொன்னதுக்கு சமனானது

எனினும் தங்கள் அறிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக

2 கருத்துகள்:

  1. இச்சம்பவம் மூலம் உங்கள் ஊடகத்தைபிரபலமாக்கலாம் என நினைப்பது தவறு. அப்படி நினைத்தால் மததுவேசத்தை தூண்டாமல் ஏனைய சில உங்களைப்போன்ற கீழ்த்தரமான ஊடகங்கள்போல் பாலியல் சம்பந்தமான செய்திகளை இட்டு பிரபலமாகுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அதில் அவர்கள் அகற்ரவில்லை என்று உள்ளதுதானே

    பதிலளிநீக்கு

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.