திங்கள், 4 மார்ச், 2019

அப்பாவி அகதியும்..!! ஐபிசி முதலாளியும்..!!

அப்பாவி அகதி – ஐயா வணக்கம். நான் திருச்சியில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை விடுதலை செய்யுமாறு கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.

ஐபிசி முதலாளி – ஓ! அப்படியா? சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவி அகதி – என்னுடைய கையில் ஐபிசி ஊடகம் இருந்திருந்தால் பத்தாயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருப்பேன் என்று கனடாவில நீங்கள் பேசினதை அறிந்தேன். அப்படியென்றால் எனக்காகவும் கொஞ்சம் குரல் கொடுக்க முடியுமா?

ஐபிசி முதலாளி – எனக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று விருப்பம்தான் தம்பி. ஆனால் அப்பறம் இந்திய உளவுப்படைகாரங்கள் கோவிப்பாங்களே. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தனீங்கள். அகதிகளுக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா?

ஐபிசி முதலாளி- தம்பி நான் ஒரு முதலாளி என்பதை நீர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். போட்ட பணத்தை எப்படி இரட்டி மடங்காக எடுக்கலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அகதிகளுக்கு உதவுவதால் எனக்கு என்ன லாபம்?

அப்பாவி அகதி – என்ன ஐயா இப்படி பேசறீங்க? வன்னியில் உள்ள முன்னாள் போராளிகளை எல்லாம் சந்தித்து உதவி வருகிறீர்கள் என்று கூறுகிறார்களே?

ஐபிசி முதலாளி – அது எனக்கு தரப்பட்ட அஜெண்டா தம்பி. தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக குழப்புறவேலை எனக்கு தரப்பட்டிருக்கு.

அப்பாவி அகதி – என்ன ஐயா! உங்களின் ஊடகத்தை தமிழ் தேசிய ஊடகம் என்கிறாங்களே?

ஐபிசி முதலாளி – தேசிய ஊடகமும் இல்லை. தேசிக்காய் ஊடகமும் இல்லை. அதெல்லாம் என்னை வைத்து பிழைப்பதற்கு என்கூட இருக்கிறவங்கள் கட்டி விடுகிற கதைகள்.

அப்பாவி அகதி – சரி ஐயா. ஒரு சின்ன வேண்டுகோள். உங்களை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக என்ரை மகள் காப்பிலியுடன் ஓடிவிட்டாள் என்று வீடீயோ மட்டும் போட்டிடாதையுங்கோ.

ஐபிசி முதலாளி – சரி சரி பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.