யாழ்.குடாநாட்டினில் டாண் தொலைக்காட்சி மற்றும் கெப்பிடல் தொலைக்காட்சிகளிற்கிடையேயான கேபிள் இணைப்பு மோதல் உச்சம் பெற்றுள்ளது.

டாண் ரீவி கோத்தபாயாவின் பினாமியாக குகநாதன் என்பவனால் நடாத்தப்பட்டு வருகின்றது. இதே வேளை கெப்பிட்டல் ரீவி மகிந்தவின் மகனுடன் நெருக்கமாக இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் நடாத்தப்பட்டு வருகின்றது.

டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கூட்டமைப்பின் வசமுள்ள யாழ்.மாநகரசபை மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.அத்துடன் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்களை அகற்றியும் வருகின்றது.

குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயனின் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்கள் இன்றும் யாழ்.மாநகர எல்லைக்குள் நாட்டப்பட்டுள்ளது.கெப்பிடல் தொலைக்காட்சிக்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரியே வழங்கியுள்ளார்.

அதேவேளை டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன் மைத்திரியின் போதைப்;பொருளிற்கு எதிரான அணியின் இணைப்பாளராக(?) நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாநகர துணை முதல்வர் செய்த முறைப்பாட்டையடுத்து காவல்துறை அதனை இன்று தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு முறுகல் நிலை தோன்றியிருந்தது.சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றிருந்த டாண் ரீவி ஊடகவியலாளருடன் அங்கயனின் ஆதரவாளர்கள் முரண்பட்டுமுள்ளனர்.