மேஷம்:  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள். 

ரிஷபம்: கணவன்- மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சகோதர வகை யில் இருந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.    

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பதுநல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக்கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.
உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிகஉரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்: : எதிர்பாராத சில வேலைகளை இன்று முடித்து காட்டுவீர்கள். சகோதரி உதவுவார். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப்புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற் கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தன்னம்பிக்கை கூடும் நாள்.  

தனுசு: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். புதிய சிந்தனைகள் மன தில் தோன்றும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள்-. பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம்  கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால்உங்களை அறியாமலேயேஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்கவேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.