வெள்ளி, 8 மார்ச், 2019

இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணை விஷம் வைத்துக்கொண்ட கணவன்!! அதிர்ச்சித் தகவல்கள் (Photos)

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது., தமிழகம் குமரி மாவட்டத்தை சேர்ந்த திவ்யா (தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்) ,

பெல்லார்மினுக்கும் கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பெல்லார்மின் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன 2 மாதம் வரை திவ்யா, பெல்லார்மின் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சமாதானம் ஆவதும் என வாழ்க்கை இருந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திவ்யா நேற்று காலையில் வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திய அவர், அந்த பகுதியில் நின்றவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். உடனே அவர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அயலிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே திவ்யா விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் அவருடைய உடல் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த தகவலை அறிந்த அப்பகுதி போலீசார் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை ஜான் அலெக்சாண்டர் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா கணவர் பெல்லார்மின், மாமனார் பெர்க்மான்ஸ், மாமியார் அமலோற்பவம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் தன்னுடைய மனைவி சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்ததையடுத்து உடனே போலீசார் பெல்லார்மினை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.