சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறை குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக, சுவிட்சர்லாந்து நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளின் மூலம், புகலிடம் பெற தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படவுள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு தேவையில்லை என அடையாளம் காணப்படுவோர் உடனடியாக நாடு கடத்தப்படவுள்ளனர். புதிய விதிகளுக்கு அமைய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் முதல் நாளிலிருந்து இலவச சட்ட ஆலோசனையை பெறுவதற்கு உரிமையை பெற்றுள்ளனர். இது அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும். அந்த ஆலோசனைக்களுக்கான விடயங்கள் சுவிட்சர்லாந்து மத்திய அரசிடம் வழங்கப்படும். அற்குமைய புகலிடம் கோருவோருக்கு சட்ட ஆதரவாளர்களால் வழங்கப்படும் சட்ட ஆலோசனைக்களுக்கமைய செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் 140 நாட்களுக்குள் ஃபெடரல் புகலிட கோரிக்கை மையங்களில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் பெருமளவு இலங்கையர்கள் புகலிடம் கோரியுள்ளனர். அவர்களில் பலரின் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.