இலங்கையில் நேற்றைய தினம் (28-02-2019) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை நகர சபையின் அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த எட்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் 28 முதல் 39 வயதுடைய பெண்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.