வெள்ளி, 1 மார்ச், 2019

சிறிதரனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புலம்பெயர் தமிழர்!! காரணம் என்ன?

வெளிநாடு ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனையும் அழைத்துக்கொண்டு பயணம் செய்யவிருந்த கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் சிவஞானத்தை எச்சரித்துள்ள வெளிநாட்டுத் தமிழர்கள்

வெளிநாடு ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனை அழைத்துக்கொண்டு பயணம் செய்யவிருந்த கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் சிவஞானத்தை எச்சரித்துள்ளார்கள் அந்த நாட்டில் வாழும் தமிழர்கள்

. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி அந்தத் தமிழர்கள் ஶ்ரீதரனோடு விரைவில் தொடர்புகொள்ளவுள்ள்தாகவும் இதற்குக் காரணம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மிகவும் நெருக்கமாக பிரதமர் ரணிலோடு தொடர்பில் இருந்து கொண்டு ஏனைய சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலை போடுவதாகவும் தற்போது ஶ்ரீதரன் இந்த வலைக்குள் அகப்பட்டு மிகவும் நெருக்கமாக செயற்படுவதாகவும் அந்த தமிழர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ரணில் சுமந்திரனோடு சேர்த்து ஶ்ரீதரன் சிவஞானத்தையும் அடிக்கல் நாட்டு விழா ஒன்றுக்கு சென்று வைபவத்தில் ஶ்ரீதரனுக்கும் கல் ஒன்றைக் கொடுத்து அதைஅத்திவாரத்தில் வைக்கும் படி வற்புறுத்தியதாகவும் இவ்வாறு நடந்து கொள்வது மனக்காயங்களுக்;கு உள்ளாகியுள்ள தாயக மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் அந்த தமிழர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணமற்போனவர்களின் உறவுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய சில நியாயமான அரசியல் வாதிகளுக்கும் இடையூறு செய்யும் வகையில் பல்கலைக் கழக மாணவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகவும் ,

எனவே ஶ்ரீதரன் சுமந்திரன் ஆகியோரது கபடத்தனமான செயற்பாடுகளை இனிமேல் புலம் பெயர் தமிழர்கள் சும்மா பார்த்துக்கொண்டு இரு;ககமாட்டார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கு தெரியப்படுத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் அவருக்கு தகவல் அனுப்பப்படும் என்று அறியப்படுகின்றது
அப்படி சுமந்திரனையும்; அழைத்துக்கொண்டு அந்த நாட்டுக்கு (கனடா அல்ல) சென்றால் சுமந்திரனுக்கு அவுஸ்த்திரேலியாவில் நடந்தது போலவே இருவருக்கும் நடக்கும் என்று அந்த நாட்டில் இயங்கும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.