வெள்ளி, 1 மார்ச், 2019

யாழில் ஓடும் பேருந்தில் இளம்யுவதி சஜீதா செய்தது என்ன? (Photos)

 நான் இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஒரு குடும்பம் ஒன்றுக்கு உதவி வழங்குவதற்காக சென்றிருந்தேன். வழங்கி விட்டு யாழ்பாணம் பேருந்து நிலையத்தில் கிளிநொச்சி வருவதற்கு பேருந்தை பார்த்தேன் வவுனியா செல்லும் பேருந்து ஆயத்த நிலையில் நின்றது நான் கிளிநொச்சியில் இறங்கலாம் தான அந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்தும் வெளிக்கிட்டது.
அந்த பேரூந்து நடத்தினார் பற்றுச்சீட்டு போட தொடங்கினார். எனக்கு முன் இருக்கையில் ஒரு முதியவர் இருந்தார் அந்த முதியர் வவுனியா செல்ல வேண்டும் என்னிடம் பணம் இல்லையப்பா 20 ரூபாய் தான் இருக்கின்றது என்று அந்த சில்லறைகளை எடுத்து கொடுத்தார். (வவுனியா செல்வதற்கான பணம் 230) காசு இல்லை என்றால் ஏன் பஸ் ஏறினீங்க இறங்கிங்க உடனே, திக்கெற் இல்லாம போகமுடியா என்றார். அந்த முதியர் ஒரு நோயாளியும் கூட அவரது கண் கலங்கியது அவர் இறங்குவதற்கு தயாரானார். நான் எழுந்து அவரை தட்டி சொன்னேன் நீங்க இருங்கப்பா நான் திக்கெற் எடுக்கிறன் எண்டு அவருக்கும் சேர்த்து வவுனியா 1 கிளிநொச்சி 1 எடுத்தேன். அவர் என்னை திரும்பி ஒரு ஏக்கப் பார்வையோடு பார்த்தார் அவரது முகம் எனக்கு ஆயிரம் அர்த்தங்களை சொல்வது போல் இருந்தது அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்தார்கள் யாரும் மனிதாபிமானத்தோடு அந்த முதியவரை பார்க்கவும் இல்லை கண்டு
கொள்ளாதவர்கள் போல் இருந்தார்கள்.
சிறிது நேரத்தில் அந்த முதியவருக்கு பக்கத்தில் இடம் இருந்து நான் போய் அமர்ந்து கொண்டேன்.
நான் அவரை பார்த்தேன் வெள்ளை சேட், வெள்ளை வேட்டி, கழுத்தில் உருத்திராக்க மாலை கடவுள் பக்தி கொண்டவரும் கூட அவரிடம் குடி, வெற்றிலை போடுதல் போட்ட கெட்ட பழக்கமும் இல்லை என்பதை பார்க்கும் போது புரிந்தது.
நான் அவரிடம் கதைதேன் அவரால் பேச கூட முடியவில்லை நெஞ்சு வருந்தமாம் கஸ்ரப்பட்டு மூச்சு விட்டு சுவாசித்தார். யாழ்ப்பாணம் கிளினிக் சென்று செல்வதாக கூறினார். அப்பா பிள்ளைகள் இல்லையா? என்று கேட்டேன். கொழும்பில் இருக்கினம் எண்டார். நான் பேரப்பிள்ளை ஒன்றின் வீட்டில் இருக்கிறேன் மனைவியும் இல்லை என்றார்.
அவரை யாரும் பொறுப்பாக பார்க்கவில்லை என்று மட்டும் புரிகிறது அவரோடு உதவியாக யாரும் அவரை வைத்தியசாலைக்கு கூட்டி வரவும் இல்லை. சென்று வருவதற்கு கூட காசு கொடுக்கவும் இல்லை அவருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தும் அவரின் நிலைதான் என்ன? நான் அவருக்கு உதவி செய்வதற்கு விலாசம் பேர் கேட்டேன் வல்லிபுனம் பூந்தோட்டம் வவுனியா சரியாக எனக்கு சொல்லமுடியவில்லை என்றார். அவர் கொஞ்சம் மன நோயாளியும் கூட எனது தொலைபேசி இலக்தை அவரிடம் எழுதி கொடுத்து பேரப்பிள்ளைகளிட்ட குடுத்து கோல் பண்ணுங்க நான் உதவி செய்கிறேன் என்று கூறி. அவர் வவுனியாவில் இருந்து பூந்தோட்டம் செல்லவதற்கும் சேர்த்து என்னிடம்அப்போது இருந்த சிறு தொகை பணத்தையும் கொடுத்து விட்டு எனது இடம் வந்ததும் நான் இறங்கி விட்டேன்.

உறவுகளே உங்களது தாய் தந்தையரையும் இவரை போன்ற நிலைக்கு விட்டு விடாதீர்கள்.
மிகவும் கொடுமையான வலி. மற்றவர்களையும் உங்களது உறவுகளாக பாருங்கள் உங்களால் முடிந்த சிறு உதவியை செய்யுங்கள் புண்ணியமாகும்.
இவர்களை போன்ற நிலை நாளை உங்களுக்கும் வரலாம் உண்மையும் கூட

"நீங்கள் இல்லாததை கடவுளிடம் கேட்கிறீர்கள் உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்கும் கொடுங்கள் நீங்களும் கடவுளாக பார்க்கபடுவீர்கள்.

நன்றி
சஜீதா முகப்புத்தகம்
இந்தப் பதிவின் செய்தி தலைப்பு எந்தவித விரசமும் இன்றி சரியான முறையில் ஒரு ஆர்வத்தை உண்டுபண்ணவே பதிவிடப்பட்டுள்ளது. இதில் ஏதோ விரசம் இருக்கின்றது என எண்ணுகின்றவர்கள் உடனடியாக தமது எரிச்சலை முகப்புத்தகத்தில் கருத்தாக வெளிவிடுவார்கள். தலைப்பு சரியில்லை எனவும் வாதிடுவார்கள். ஆகவே நல்ல பதிவுகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.