திங்கள், 8 ஜனவரி, 2024

வழக்கை கிடப்பில் போட்டு விடுவியுங்கள்… 17 பேரையும் விடுவித்த யாழ் நீதிமன்றம்.!!

வழக்கை கிடப்பில் போட்டு விடுவியுங்கள். ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் கோரிக்கையை ஏற்று 17 பேரையும் விடுவித்த யாழ் நீதிமன்றம். கடந்த வருடம் தை மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நிலையில் ஜனாதிபதி வருகையை எதிர்த்து இடம் பெற்ற போராட்டம் மற்றும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய நடைபவனி என்பவற்றிற்கு எதிராக போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டடு தவண இடப்பட்ட வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகிய நிலையில் குறித்த வழக்கு அடிப்படை ஆதாரமற்ற வழக்கு இதனை தொடர முடியாது வழக்கை கிடப்பில் போட்டு சந்தேகம் நபர்களை அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.