செவ்வாய், 12 டிசம்பர், 2023

போலி பாஸ்போட்டில் கனடா செல்லமுற்பட்ட யாழ் பருத்தித்துறை இளைஞனுக்கு கட்டுநாயக்காவில் நடந்த கதி!!

போலி கனேடிய கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்வதற்கு முயன்ற பருத்தித்துறையை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரை இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று (10) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 217 இல் தோஹா செல்வதற்காக அனுமதி பெற வந்தபோது, ​​அந்த இளைஞனின் கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால் விமான நிறுவனம் அவரை எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பி வைத்தது. அவரது பயணப்பொதிகளை ஆய்வு செய்ததில், அவரது இலங்கை கடவுச்சீட்டு மற்றும் மாலைதீவுக்கான போலி விமான டிக்கெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மதியம் விமான நிலையத்திற்கு அருகாமையில் கடத்தல்காரர் ஒருவருக்கு 40 இலட்சம்ரூபா செலுத்தி கனேடிய போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக இளைஞன் தெரிவித்துள்ளார். விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.