வியாழன், 26 அக்டோபர், 2023

கொழும்பு புலனாய்வு தலைமையகம் மீது குடு விற்பவர்கள் தற்கொலை தாக்குதல் ஆயத்தம்!! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!! வீடியோ

 தற்கொலைப் பயங்கரவாதிகளுக்கு நிகரான தாக்குதலை நடத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும் மீட்பதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் (24) கோட்டை நீதவான் நீதிமன்றித்திற்கு அறிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு முன்னாள் கமாண்டோக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தகா மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷிகா தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த விடயம் வௌியாகியுள்ளது.

இந்த சூட்சுமமான திட்டத்திற்கு பங்களிப்பு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தின் முன்னாள் கொமாண்டோ உறுப்பினர்கள் இருவரின் ஒலி நாடாவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இரண்டு கொமாண்டோக்களும் ஒழுக்காற்று அடிப்படையில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த இரண்டு கமாண்டோக்களும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் பொலிஸ் சீருடை அணிந்து சுயநினைவற்ற நச்சுப் புகையைப் பயன்படுத்தி பிரவேசிக்க தயாராகி இருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு படையினர் தாக்குதல் நடத்தும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

முன்பு திட்டமிட்டவாறு ஹரக் கட்டாவின் நெருங்கிய உறவினரான வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மிதிகம சுட்டி, ஹரக் கட்டாவையும் குடு சலிந்துவையும் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திலுருந்து மீட்பதற்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபுக்கள் பாதுகாப்பு குழுவொன்றையும் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செயலிழந்திருந்த சிசிடிவி கெமரா அமைப்பும் இதன் காரணமாக மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.