திங்கள், 30 அக்டோபர், 2023

வல்வெட்டித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய 50 கிலோ கஞ்சா!!

 


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சுமார் 50 கிலோ  கேரளா கஞ்சா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இரவுகைப்பற்றப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை ஊ ரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடாத்தப்பட்ட சோதனையின்போது கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அதன் போது, எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பொதி எவ்வாறு வந்திருக்கும் என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.