திங்கள், 25 செப்டம்பர், 2023

யாழில் கதறிக் குளறி அழுது விளம்பரம் போட்ட ஆட்டோச் சாரதிகளின் திருவிளையாடல் இதோ!!

 

ஆட்டோச்சாரதிகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளிவரும் பதிவுகளையும் குறித்த ஆட்டோச்சாரதிகள் கதறி வெளியிட்ட விளம்பரத்தையும் இங்கே நாம் வெளியிட்டுள்ளோம்….

காசை கொஞ்சம் குறைச்சு எடுங்கோ என்று எத்தனை சனம் உங்களிட்ட கேட்ட போது கேட்ட காசை கொடுக்கிறதென்றால் கொடுங்க இல்லாட்டி நடந்து போங்கோ என்று குழறியிருப்பியல்….

இப்ப நீங்க குழருங்கோ… நாங்க Pick me தான் use பண்ணுவம். அதோட Pick me ஐ Promote பண்ணுவம்.

நல்லா கதருங்கோ.

கச்சேரில இருந்து சுண்டுக்குளி சந்தி தாண்டி 100 M வந்து இறங்கியாச்சு. ( மொத்தம் 1KM வரலாம் ) 300 ஓவா எண்டார். நான் திருப்ப கேக்க ஆட்டோ ஸ்டான்டால எடுத்தா 300 தானாம்.. சிரிச்சிட்டு குடுத்திட்டு போய்ட்டன். இப்ப கதறுங்கடா….

கொஞ்ச நஞ்ச ஆட்டமாடா போட்டீங்க…
இப்ப எங்க வந்து நிக்குது பாருங்க….
நீங்கள் பாதிக்கப்படுகின்றீர்களா ? உங்களால் மக்கள் தான் பாதிப்படைகின்றார்கள் .. 500rs க்கு போகின்ற இடத்தில் 1000rs எடுக்கின்றீர்கள் எப்படி இனி சரியாக இருப்பீர்கள் என நம்புவது ? 😡… Pickme முறை மக்களுக்கு நாணயமானதும் நம்பிக்கையானதுமே இலகுவானதே அனைத்து ஓட்டோ ஓட்டுனர்களையும் PickMe il பதிய செய்யுங்கள் அனைத்து ஓட்டோக்களுக்குமே வருமானம் அதிகரிக்கும் … ஓட்டோ சங்கத்தினரே உங்களுக்கு வருமானம் வராது என்றால் இப்படியா முடிவு எடுப்பது? ஒரு இடத்திற்கு ஆட்டோ Parking ( தரித்து நிற்பதற்கு ) செய்வதானால் பதிவு செய்ய ( 100,000 – 300,000 ) வரை கட்டணம் அறவிடும் உங்களுக்கு பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.. இனி அவர் அவர் வீட்டின் முன் ஓட்டோ தரித்து நின்றாலே சவாரி கிடைக்க பெறும் சந்தி வெளிகளில் நின்று காயத்தேவையில்லை 😻😻😻. உங்களால் தான் ஓட்டோ ஓட்டுனர்கள் பாதிப்படைகின்றார்கள் 😡😡😡 பொலிஸாரால் உங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் 🙏🙏
யாழ்பாண முச்சக்கரவண்டி உரிமையாளர்களே….
Pik me எனும் நாமத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்களுக்கான கட்டணப் போக்குவரத்துச்சேவை தனது சேவைகளை யாழ் குடாநாடுகளில் துரித கதியில் வேரூன்றுகின்றது அவை எவ்வளவு மக்களுக்கு சாதகமாக அமைந்தாலும் அதன் பாதகத்தன்மை மறைகாரணியாக அமைவதனை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் ஏனெனில் மக்களிடத்திலே தற்போது காணப்படுகின்ற பொருளாதார வலுவின்மையே
Pik me ஏன் துரிதகதியில் மக்கள் அபிமானத்தை
பெறுகின்றது என்ற காரணி
இக்காரணங்களே_இங்கு_வேரூன்ற_அடித்தள காரணியாக_அமைகின்றது
எனவே எங்கே தவறுள்ளதோ அங்கே இனங்கண்டு அதனை சரிசெய்து உங்கள் சேவைகளை சிறப்பாக செயல்படுத்துவீர்களேயானால் உங்கள் சேவைக்கு நிச்சயமாக மக்களிடத்தில் பேராதரவு கிடைக்கும் என்பது வெளிப்படை மற்றும்
எமது பொருளாதாரம் எம் கையைவிட்டு செல்லாது மட்டுமன்றி
எமது முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் வாழ்வும் வளம்பெறும்
இந்த மக்கள் சேவைகளைப்போல பல சேவைகள் எம்மிடத்தில் மறுமலர்ச்சி பெறவேண்டும் இல்லையேல் Pik me இங்கே வெகு விரைவில் வேறூன்ற காலங்கள் செல்லாது
நன்றி

 

May be an image of text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.